Published:Updated:

நினைத்ததை நிறைவேற்றும் வெள்ளிமலை பாலமுருகன்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம் #worshipathome

worshipathome
worshipathome

கந்தக்கடவுள் இங்கே பாலமுருகனாக அருள்வதால், திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது இல்லை.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

நினைத்ததை நிறைவேற்றும் வெள்ளிமலை பாலமுருகன் தரிசனம்... கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலிருந்து மேற்கே சுமார் 17...

Posted by Sakthi Vikatan on Thursday, April 16, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, வெள்ளிமலை பாலமுருகன் ஆலயம்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலிருந்து மேற்கே சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளி மலை. கந்தக்கடவுள் பாலமுருகனாய் அருளும் மலைக்கோயில்; வேண்டும் வரமருளும் சுவாமி இவர். கந்தக்கடவுள் இங்கே பாலமுருகனாக அருள்வதால், திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது இல்லை.

பாலமுருகன்
பாலமுருகன்

இந்த மலையில் அதிகமாகக் காணப்படுகிறது காக்கைப் பொன் எனப்படும் `அப்ரகம்’. சூரிய ஒளி பட்டு வெள்ளிபோல் மின்னுவதால் இந்த மலைக்கு வெள்ளிமலை என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள் பக்தர்கள். இந்த மலை அமைந்திருக்கும் பகுதி அடர்ந்த வனமாகத் திகழ்வதால், முற்காலத்தில் இந்தக் கோயிலுக்கு வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் வருவதுண்டு. அதனால், இந்த மலைக்கு `வெள்ளிக்கிழமை மலை’ என்ற பெயரும் உண்டாம்.

வெள்ளிமலை கோயிலுக்குச் செல்ல கிழக்குப்பக்கம் 90 படிகள் அமைந்துள்ளன. மேற்குப்பக்கம் உள்ள படிக்கட்டின் ஓரத்தில் நந்தி பாதம் பதிந்திருக்கிறது.

முருகப் பெருமானை தரிசித்தால் நவகிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதிகம்

சித்திரை பத்தாம் உதயம் அன்று காலைப் பொழுதில், சூரியக் கிரணங்கள் நீளமான மண்டபத்தைக் கடந்து வந்து முருகனின் திருப்பாதங்களைத் தழுவி வணங்குவது கண்கொள்ளாக் காட்சியாகும். அன்று முருகப் பெருமானை தரிசித்தால் நவகிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதிகம். வெள்ளி மலையில் எழுந்தருளும் கந்தனை வழிபட்டால் குழந்தைப் பேறு கிட்டும், திருமண வரம் கிடைக்கும், நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு