திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

ஞானமலையில் சிறப்பு வழிபாடு

ஞானமலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானமலை

நீங்களும் சங்கல்பம் செய்யலாம்!

குன்றுதோறும் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமான், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு மலையில், வள்ளி தேவியுடன் தங்கி இறைப்பாறினார். இன்றைக்கும் துன்பப் பிணிகளால் வாடும் அன்பர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் அளித்து ஆற்றுப்படுத்துகிறார். அந்தத் தலம் ஞானமலை. நம் வாசகர்களுக்குப் பரிச்சயமான தலம்தான்.

ஞானமலை
ஞானமலை


ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 16 கி.மீ. தொலைவில் மங்கலம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து ஞானமலை பெயரைத் தாங்கியுள்ள வளைவின் வழியாக சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்தால் (கோவிந்தசேரி) ஞானமலை அடிவாரத்தை அடையலாம். இங்கு மூலவர் பிரம்மசாஸ்தா வடிவில் அருள்பாலிக்க, உற்சவ மூர்த்தியோ குறமகள் தழுவிய ஞானக் குமரனாக அருள்கிறார்.

வள்ளிமலையில் இருந்து குறவள்ளியை அழைத்துக் கொண்டு திருத்தணிகைக்குச் சென்ற முருகப் பெருமான், சற்று நேரம் இளைப்பாற எண்ணினார். பாதி தொலைவு வந்தாயிற்று. அப்போதுதான் கண்ணில் பட்டது ஞானமலை. இருவரும் அங்கே தங்கி இளைப்பாறியதும் திருத்தணி சென்றனர். இங்கே மலை மீது முருகனின் திருவடிகள் பதிந்த இடம் என்று, பாதச் சுவடுகள் உள்ளன. இங்கிருந்து திருத்தணியும் வள்ளிமலையும் சம தொலைவில் முக்கோண வடிவில் அமைந்துள்ளன. அருணகிரிநாதருக்கு, தனது பாத தரிசனத்தை முருகன் காட்டி அருளிய தலமும் ஞானமலைதான்.

14-ஆம் நூற்றாண்டில் காளிங்கராயன் என்பவன், ஞான மலை கோயிலுக்கு படிகள் அமைத்த செய்தியைச் சொல்கிறது கல்வெட்டு ஒன்று! முருகன் சந்நிதிக்குப் பின்னே, மலை மீது சற்று ஏறிச் சென்றால், ஞான கிரீஸ்வரர் சந்நிதிக்குப் பின்னே, மலையில் முருகன் பாதம் பதிந்த தடங்களாக இரண்டு உள்ளன. ஞானசித்தி கணபதி, ஞான தட்சிணாமூர்த்தி, பொன்னியம்மன் ஆகியோரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். ஞானவெளி சித்தர் எனும் பாலை சித்தரின் ஜீவசமாதியும் இங்குள்ளது. இவர் இங்கு மக்களின் பிணி தீர்த்து தொண்டு புரிந்தாராம்.

வள்ளிக்குறத்தியுடன் முருகன் இளைப்பாறிய இத்தலத் துக்கு வந்து வழிபட்டால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; இல்லறம் செழிக்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு உகந்த தினங்களில் விசேஷ வழிபாடுகள் சிறப்புற நடைபெறுகின்றன.

அவ்வகையில் ஞானமலை குறமகள் தழுவிய ஞானக்குமரனுக்கு, வரும் 9.4.22 சனிக்கிழமை அன்று மாலை சத்ருசம்ஹார திரிசதி அர்ச்சனையும், மறுநாள் 10.4.22 ஞாயிறு அன்று சத்ரு சம்ஹார திரிசதி ஹோமமும் நடைபெறவுள்ளன. நம் வாழ்க்கைக்குப் பகையான வறுமை, கடன், பிணி, தடைகள், தோஷங்கள் ஆகிய பகைகளைப் போக்கும் அதிஅற்புத வழிபாடுகள் இவை. வாசகர்களும் இந்த வழிபாடுகளில் தங்கள் பிரார்த்தனையைச் சங்கல்பித்து பலன் பெறலாம்.

கீழ்க்காணும் கூப்பனில் உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். (பிரார்த்தனைக் கூப்பன் வந்துசேர வேண்டிய கடைசி தேதி 8.4.22). உங்களின் பிரார்த்தனை, பெயர்-நட்சத்திரத்துடன் உரிய சங்கல்பம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறும்.

ஞானமலை சிறப்பு சங்கல்ப வழிபாடு

பெயர்: ................................................................................

நட்சத்திரம்: .........................................................................

பிரார்த்தனை: .....................................................................

தொலைபேசி எண்: ...........................................................

இணையம் மூலம்

முன்பதிவு செய்ய