மகேஸ்வர வடிவமான சிவமூர்த்தியின் பெயர்களும் அவருக்கிணையாக அமைந்த பார்வதியின் பெயர்களும் ‘ஸ்ரீதாஷிண குடித்வீப க்ஷேத்ர மகாத்மியம்’ எனும் தென்குடித் திட்டைத் தலப்புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளன. அதனைப் பின்வரும் பட்டியலில் காணலாம்.

1 லிங்கோத்பவர் - மோட்சப் பிரதாயினீ

2 திரிமூர்த்தி - வம்சவிருத்திப்பிரதாயினீ

3 கல்யாண சுந்தரர் - சர்வமங்களப் பிரதாயினீ

4 உமாசகாயர் - பார்யா சௌக்யப் பிரதாயினீ

5 சுகாசனர் - சர்வபாபப் பிரணாஸினீ

6 கங்காதரர் - சர்வபாபப் பிராணாஸினீ

7 நடராஜர் - ஸம்பத்யோகப் பிரதாயினீ

8 சண்டேச அனுக்கிராகர் - மகாபாதகநாசினீ

9 வ்ருஷபவாகனர் - தர்மசித்திப்ரதாயினீ

10 நீலகண்டர் - விஷதோஷப் பிராணஸினீ

11 ஹரிஹரர் - தர்மார்த்த தாயினீ

12 ஏகபாதர் - மகாரோகவிநாசினீ

13 அர்த்தநாரீசர் - சர்வசௌக்யப் பிரதாயினீ

14 தட்சிணாமூர்த்தி - மேதாபிரக்ஞா பிரதாயினீ

15 சோமாவிநாயகர் - ஸர்வசித்திப் பிரதாயினீ

16 சோமாஸ்கந்தர் - புத்ரசௌகியப் பிரதாயினீ

17 சந்திரமௌலீஸ்வரர் - தனதான்யப் பிரதாயினீ

18 வீரபத்திரர் - சத்ருவித்வேஷ்டவிநாசினீ

19 காலசம்ஹாரர் - சர்வாரிஷ்ட விநாசினீ

20 காமந்தகர் -யோகவிக்ன விநாசினீ

21 கஜாந்தகர் - பராபிசாரசமனீ

22 திரிபுரசம்காரர் - ஜன்மஜராம்ருத்யுவினாசினீ

23 பிட்சாடனர் - யோகஷித்ப்ருத்த விமோஹினீ

24 ஜலந்தரசம்ஹாரர் - துஷ்டவிநாசினீ

25 சரபர் - அரிப்பிராசினீ

26 பைரவர் - ரட்சாகரீ

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது செட்டிகுளம். இவ்வூரில் அற்புதச் சிற்பங்களுடன் கூடிய தூண்கள், மண்டபங்கள், விசாலமான பிராகாரம், என அற்புதமாக அமைந்துள்ளது, ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்.

இந்தக் கோயிலில் 12 ராசிக்காரர்களுக்கும் தனித்தனியே (ஆலயத்தின் பல இடங்களில்) தமக்கேயுரிய மீன் வாகனத்தில் அமர்ந்து அற்புதமாகக் காட்சி தருகின்றனர் 12 குபேரர்கள்.

அந்தந்த ராசிக்காரர்கள், அந்தந்த குபேரனுக்கு அபிஷேகம் செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, அர்ச்சனை செய்து வழிபட்டால், செல்வம் பெருகும்; தொழிலில் விருத்தி ஏற்படும்; வீடு-மனை வாங்கி செழிப்புடன் வாழலாம் என்பது ஐதீகம். அவரவரின் நட்சத்திர நாளில் வந்து வழிபடுவது இன்னும் விசேஷம் என்கின்றனர் பக்தர்கள். பன்னிரு குபேரர்கள் மட்டுமின்றி, இங்கே மகாகுபேரரையும் தரிசிக்கலாம்.

திருச்சி- சென்னை சாலையில், திருச்சியி லிருந்து சுமார் 44 கி.மீ. தொலைவிலும் பெரம்பலூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது ஆலத்தூர் கேட். இங்கேயுள்ள கோயில் நுழைவாயில் வளைவில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவு பயணித்தால், செட்டிகுளத்தையும் ஆலயத்தையும் அடையலாம்.

- புஷ்பா கிருஷ்ணராஜ், பங்களாபுதூர்