Election bannerElection banner
Published:Updated:

இதை மட்டும் செய்து பாருங்கள்! இனி நீங்களும் அதிர்ஷ்டக்காரர் தான்.

லட்சுமி
லட்சுமி

இதை மட்டும் செய்து பாருங்கள்! இனி நீங்களும் அதிர்ஷ்டக்காரர் தான். அதிர்ஷ்டம் நிறைந்திருக்க ஆன்மிகம் காட்டும் எளிய வழிகள்:

முகராசி, கைராசி, வாக்கு ராசி என்றெல்லாம் சிலரை வியந்து பாராட்டுவதைப் பார்த்திருப்போம். 'இவரு மண்ணை அள்ளிக் கொடுத்தால் கூட பொன்னாக மாறிவிடும்' என்று சில மனிதர்களை சொல்வதுண்டு. டாக்டர்கள், நகை வியாபாரிகள், ஜோதிடர்கள் என பல துறைகளிலும் ராசியானவர்கள் உண்டு. அவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல, தன்னை நம்பி வந்தவர்களுக்கும் அதிர்ஷ்டக்காரர்களாக இருப்பார்கள். இவர்தான் தொடங்கி வைக்க வேண்டும்; இவர்தான் முதலில் வியாபாரத்தை ஆரம்பித்து வைக்க வேண்டும் என்றெல்லாம் பலவித நம்பிக்கைகள் எழுவதெல்லாம் அதிர்ஷ்டத்தின் விளைவாக சொல்லப்படும் கருத்துக்களே. ஒருவர் பிறப்பிலேயே ஜாதகக் கட்டங்களின் விளைவாக அதிர்ஷ்டக்காரராக இருப்பார் என்பது உண்மை. உதாரணமாக சுக்கிரன் விருச்சிக ராசியில் நின்று சுபர்களின் பார்வை பெற்றால் தனக்கும் தன்னை சுற்றி உள்ளோருக்கும் அதிர்ஷ்டக்காரராக இருப்பார் என்கிறது. அதுபோக சூட்சுமமான பல வழிபாடுகளின் வழியாகவும் ஒருவர் தன்னுடைய அதிர்ஷ்ட நிலையை உயர்த்திக் கொள்ள முடியும் என்கிறது ஆன்மிகம். அதுபற்றி பார்ப்போம்...

ஒருவர் பிரம்ம முஹூர்த்தம் எனப்படும் அதிகாலையில் எழுந்து ஜபதபங்களை செய்யத் தொடங்கினாலே அவருக்குள் அதிர்ஷ்ட நிலை உயரும் என்கிறது சாஸ்திரம். அதிர்ஷ்டதேவி வழிபாடும், அதிதி எனும் விருந்தினர்களை உபசரிக்கும் முறையும் ஒருவருக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். முன்னோர் வழிபாடு, குருவின் ஆசி மற்றும் அவரவருக்கான நட்சத்திரங்களுக்கான தெய்வங்களின் வழிபாடும் ஒருவரின் அதிர்ஷ்ட நிலையை உயர்த்தி அவர் தொட்டதெல்லாம் வெற்றியாக்கும் உயர்ந்த யோகத்தை அளிக்கும்.

அஸ்வினி – கலைமகள்

பரணி – ஸ்ரீதுர்கா தேவி

கார்த்திகை – முருகப் பெருமான்

ரோகிணி – விஷ்ணு

மிருகசீரிடம் – ஸ்ரீசந்திர சூடேஸ்வரர்

திருவாதிரை – நடராஜ பெருமான்

புனர்பூசம் – ஸ்ரீராமர்

பூசம் – ஸ்ரீதட்சிணாமூர்த்தி

ஆயில்யம் – ஆதிசேசன் (நாகராஜன்)

மகம் – ஸ்ரீசூரிய பகவான்

பூரம் – ஸ்ரீஆண்டாள்

உத்திரம் – ஸ்ரீமகாலட்சுமி

அஸ்தம் – ஸ்ரீகாயத்ரி தேவி

சித்திரை – ஸ்ரீசக்கரத்தாழ்வார்

சுவாதி – ஸ்ரீநரசிம்மமூர்த்தி

விசாகம் – முருகப் பெருமான்

அனுசம் – ஸ்ரீலட்சுமி நாரயணர்

கேட்டை – ஸ்ரீவராஹ பெருமாள்

மூலம் – ஸ்ரீஆஞ்சநேயர்.

பூராடம் – ஸ்ரீஜம்புகேஸ்வரர்

உத்திராடம் – விநாயகப் பெருமான்.

திருவோணம் – ஸ்ரீநாராயணர்

அவிட்டம் – ஸ்ரீபெருமாள்

சதயம் – ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (ஈசன்)

பூரட்டாதி – ஸ்ரீஏகபாத மூர்த்தி (ஈசன்)

உத்திரட்டாதி – ஸ்ரீமகாஈஸ்வரர் (ஈசன்)

ரேவதி – ஸ்ரீரங்கநாதர்

அவரவர் ராசிக்குரிய தெய்வங்களை அந்தந்த ராசிக்குரிய நாளில் வழிபடுவது அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்பார்கள். அதுபோக அவரவர் நட்சத்திரத்துக்குரிய மலர்களைக் கொண்டு இந்த தெய்வங்களை அர்ச்சித்து வரம் பெறலாம்.

அஸ்வினி - சாமந்தி பரணி - முல்லை, பரணி – முல்லை, கார்த்திகை – செவ்வரளி, ரோகிணி – பாரிஜாதம், மிருகசீரிஷம் – ஜாதி மல்லி, திருவாதிரை – வில்வப்பூ, புனர்பூசம் – மரிக்கொழுந்து, பூசம் – பன்னீர்மலர், ஆயில்யம் – செவ்வரளி, மகம் – மல்லிகை, பூரம் – தாமரை, உத்திரம் – கதம்பம், அஸ்தம் – வெண்தாமரை, சித்திரை – மந்தாரை, சுவாதி – மஞ்சள் அரளி, விசாகம் – இருவாட்சி, அனுஷம் – செம்முல்லை, கேட்டை – பன்னீர் ரோஜா, மூலம் – வெண்சங்கு மலர், பூராடம் – விருட்சி, உத்திராடம் – சம்பங்கி, திருவோணம் – செந்நிற ரோஜா, அவிட்டம் – செண்பகம், சதயம் – நீலோற்பலம், பூரட்டாதி – வெள்ளரளி, உத்திரட்டாதி – நந்தியாவர்த்தம், ரேவதி – செம்பருத்தி

உங்களை யோகக்காரனாக்கும் அதிர்ஷ்ட தேவி வழிபாடு!

பௌர்ணமி, பூர நட்சத்திர நாள், வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாள்களில் அதிர்ஷ்ட தேவி வழிபாடு நடத்தலாம். 'லக்கி மா' என்று வடநாட்டில் நடைபெறும் இந்த வழிபாடு இங்கேயேயும் பிரசித்தமாகி வருகிறது. பூஜையறையில் வழக்கம்போல் அலங்கரித்து அதிர்ஷ்ட தேவி திருவுருவப் படத்தை வைத்து, (கலசம் ஏந்திய திருமகள் அல்லது கிரக லட்சுமி படமும் வைக்கலாம்) சந்தன, குங்குமம், பூமாலைகள் சார்த்தி, இனிப்புகளை நைவேத்தியம் செய்து அதிர்ஷ்ட தேவியின் 26 திருநாமங்களை உங்கள் நட்சத்திரத்துக்குரிய மலர்களால் அர்ச்சித்து வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட தேவியின் 26 திருநாம அர்ச்சனை மந்திரங்கள்

ஓம் தாராயை நம:

இவ்வாறே மற்ற இந்த திருநாமங்களையும் ஓம் என்றும் இறுதியில் நம என்றும் சொல்லி வழிபடுங்கள். வித்யாயை, முநின்யை சரத்தாயை, ஜராயை, மேதாயை, ஸ்வதாயை, ஸ்வஸ்தியை, வர்மின்யை, பாலின்யை, ஜ்வாலின்யை, க்ருஷ்ணாயை, ஸ்மிருத்யை, காமாயை, உன்மத்யை, ப்ரஜாயை, சிந்தாயை, க்ரியாயை, க்ஷந்த்யை, சாந்த்யை, தாந்த்யை, தயாயை, ஸ்வஸ்திதாயை, தூத்யை, கத்யாயை, ஷ்யாமளாயை; ஓம் அதிர்ஷ்ட கலாயை நம:

லட்சுமியின் அம்சமான நெல்லிக்கனியை அன்று உணவில் எடுத்துக்கொள்ளுங்கள். யாருக்கேனும் வஸ்திர தானம் செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்ட தேவி கருணை புரிந்து உங்களை யோகக்காரனாக மாற்றுவாள் என்கின்றன சாஸ்திரங்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு