திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

தீபம் போற்றுக...

தீபம் போற்றுக
பிரீமியம் ஸ்டோரி
News
தீபம் போற்றுக

தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும்.

தீபமேற்றி வழிபடும் முறையே முழுமையான வழிபாடு என்பார்கள் ஆன்றோர்கள். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவும்.

ஈசனருள் கைகூட தண்ணீரால் விளக்கு எரித்த நமிநந்தியடிகள், தன் உதிரத்தையே எண்ணெயாய் ஊற்றி தீபமேற்ற முயன்ற கலிய நாயனார், தலைமுடியை விளக்குத் திரியாக்கிய கணம்புல்லர், அறியாமல் தீபத்தைத் தூண்டி விட்ட காரணத்துக்காகவே, மறுபிறவியில் சக்ரவர்த்தியாய் பிறந்த மகாபலி ஆகியோரின் புண்ணிய கதைகள் தீப வழிபாட்டின் மகத்துவத்தை நமக்கு நன்கு உணர்த்தும்.

பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவஜோதியாகிய ஆன்மாக்கள் இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே, தீபங்கள் உணர்த் தும் வழிபாட்டுத் தத்துவம். ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றுள் தூப- தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று.

தீபம் போற்றுக...

தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள். அதுபற்றிய விவரம்:

புஷ்ப தீபம்- பிரம்மன்; புருஷா மிருக தீபம்- கலைமகள்; நாகதீபம்- நாகராஜர்; கஜ தீபம்- விநாயகர்; வியாக்ர தீபம்- பராசக்தி; ஹம்ச தீபம்- பிரம்மா; வாஜ்ய தீபம்- சூரியன்; சிம்ம தீபம்- துர்கை; சூல தீபம்- மும்மூர்த்திகள்; துவஜ தீபம்- வாயு; வ்ருஷப தீபம்- ரிஷபதேவர்; பிரமா தீபம்- லட்சுமி; குக்குட தீபம்- கந்தப்பெருமான்; கூர்ம தீபம்- மகாவிஷ்ணு; ஸ்ருக் தீபம்- அக்னி; சக்தி தீபம்- பராசக்தி.

ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போதும், அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி ஈசனை வழிபடுவதுடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்

களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தை தரிசித்தால் 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

- இரா.மங்கையர்க்கரசி, சென்னை-44