Published:Updated:

பூவைப் போல் இருப்பேன்

ஆன்மிகக் கதை
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகக் கதை

ஆன்மிகக் கதை!

பூவைப் போல் இருப்பேன்

ஆன்மிகக் கதை!

Published:Updated:
ஆன்மிகக் கதை
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகக் கதை

`ஆயிரம் எண்ணங்களைவிட ஒரு சொல் மேலானது’ என்பது ஆன்றோர் வாக்கு. ஒருவரைப் பற்றி நம் மனத்துக்குள் எவ்வளவு இரக்கப்பட்டாலும், அதை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால் எதிராளிக்கு அது ஆறுதலை அளிக்காது. மாறாக, ஒரே ஒரு சொல்லை இனிமையாக உதிர்த்தால், அது காயம்பட்டவருக்கு வலியை மட்டுப்படுத்தும்.

குருநானக்
குருநானக்

‘ஆயிரம் சொற்களைவிட ஒரு செய்கை மேலானது’ என்றும் ஓர் அறிவுரை உண்டு. ஆமாம், ஆறுதல் சொல்வதைக் காட்டிலும் உதவி செய்வது மேலானது அல்லவா. அதேபோல், சொல்ல வேண்டிய கருத்துகளையும் இனிமையான செயல்களால் உணர்த்தி விட முடியும்!

ஒருமுறை குருநானக், முல்தான் என்கிற பகுதிக்குச் சென்றார். அப்போது அங்கே ‘பிர்’ என்கிற ஞானிகள் வசித்து வந்தார்கள். குருநானக் வருவதை அறிந்ததும், அவர்கள் ஒரு குவளையில் விளிம்பு வரை பாலை நிரப்பி அவருக்குக் கொடுத்தனுப்பினார்கள்.

அதன் பொருள், ‘இந்த நகரம் ஏற்கெனவே புனித மனிதர்களால் நிரம்பி வழிகிறது. இங்கே இன்னொருவருக்கு இடமில்லை’ என்பதுதான்.

குருநானக் அந்தப் பாலில் ஒரு மல்லிகை மலரை வைத்துத் திருப்பி அனுப்பினார். அந்த மலர், பால் துளியும் கீழே வழியாமல் மிதந்தது. அதற்குப் பொருள், ‘நான் இந்த நகரத்தில் பூவைப்போல இருப்பேன்; என்னால் உங்களுக்கு எந்தக் குறையும் நேரிடாது’ என்பதுதான்.

இந்தச் செய்திக்கு இன்னொரு பொருளும் உண்டு.

‘பாத்திரத்தில் வைக்கப்பட்ட பால் திரிந்துவிடுவதைப்போல, உங்கள் அறிவு நாளடைவில் திரிந்துவிடலாம்; ஆனால், எங்கள் ஞானம் மல்லிகை மலர்போல எல்லாத் திசைகளிலும் பரவி, எப்போதும் வாழ்ந்திருக்கும்’ என்பதுதான் அது!

-பி.மகாலிங்கம், கருங்குளம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism