Published:Updated:

குருப்பெயர்ச்சி ஹோமம்: குருபகவான் எந்த இடத்தில் இருந்தாலும் கவலை வேண்டாம்! கலந்துகொள்வது எப்படி?

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் - 30.11.2021 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும்

குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் சகல செல்வங்களையும் பெற்று, உலகோர் புகழும் உயர்ந்த அந்தஸ்துடன் வாழ்வாங்கு வாழ்வார் என்கின்றன ஜோதிட நூல்கள். நவகிரகங்களில் குருபகவான் பூரணமான சுபகிரகம் என்று போற்றப்படுகிறார். மற்ற 8 கிரகங்களும் தாங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்ப பலன்களைத் தருவார்கள். ஆனால், குருபகவானோ தான் பார்க்கும் இடத்துக்கே பலன்களை அதிகமாகத் தருவார். `குரு பார்க்க கோடி நன்மை' என்பதன் அர்த்தமே இதுதான். குரு என்பவர், வடக்குத் திசை நோக்கி அருளும் தேவர்களின் குரு எனப்படுகிறார். பிரகஸ்பதியாகிய இவர் பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

குருவான பிரகஸ்பதியும் தட்சிணாமூர்த்தியும் வெவ்வேறானவர்கள். தட்சிணாமூர்த்தி 64 சிவ மூர்த்தங்களில் ஒருவர். தென் திசை பார்த்தபடி அருளும் இவர் குருவுக்கும் குருவானவர். சனகாதி முனிவர்களுக்கு மௌனமாக உபநிடதங்கள் அருளியவர். பிரகஸ்பதி ஆங்கீரஸரின் புதல்வர். அற்புத ஆற்றல் கொண்டவர். ஸ்வாரோசிஷ மன்வந்த்ரத்தில் ஸப்த ரிஷிகளில் முதன்மையானவர். வாமன அவதாரத்தின்போது திருமால் பிரகஸ்பதியிடம் இருந்து வேதங்கள், உபநிடதங்கள், வேத அங்கங்கள், ஆறு சாஸ்திரங்கள், ஸ்மிருதி மற்றும் ஆகமம் என அனைத்தையும் கற்றறிந்தார் என்கிறது ப்ருஹத் தர்ம புராணம்.

திருச்சி கோயில்கள் - 20: குழந்தைகளின் குறை தீர்க்கும் வேணுகோபால கிருஷ்ணன் கோயில் மகிமைகள்!

இத்தனை பெருமை கொண்ட பிரகஸ்பதி எனும் குருபகவான் சகல செல்வங்களையும் அள்ளி வழங்கும் ஆற்றல் கொண்டவர். லௌகீக வாழ்வில், எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெற சகல நிதிகளையும் ஆற்றல்களையும் அள்ளித் தரும் பிரகஸ்பதியை வணங்கினால் தேவேந்திரனுக்கு இணையான தகுதியை அடையலாம் என்கின்றன ஜோதிட நூல்கள். தேவகுருவாம் பிரகஸ்பதி பிறந்த நாளாம் பூச நட்சத்திர நாளில், அவரை அர்ச்சித்து, மஹாகுருவுக்கான ஹோமங்கள் நடத்தி வணங்கினால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒருவரது ஜாதகத்தில், குருபகவான் எந்த இடத்தில் இருந்தாலும் அதற்காகக் கவலை கொள்ளாமல், கலங்கித் தவிக்காமல் நம்பிக்கை கொண்டு மாதாந்திர பூச நட்சத்திர நாளில் குரு வழிபாடு செய்தால் குரு பகவானின் அருளைப் பெற்று நலமோடு வாழலாம் என்கிறது ஜோதிட புராணம். எல்லா பூச நாள்களிலும் வழிபட முடியாதவர்கள் குறைந்த பட்சம் குரு பெயர்ச்சி நாளில் செய்யலாம் என்றும் பெரியோர்கள் கூறுவது உண்டு.

பிரகஸ்பதி
பிரகஸ்பதி

கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடையும். சூரிய பகவான் மாதம் ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசியை அடைவார். இவ்வாறே சந்திர பகவானும் இரண்டே கால் நாள்களுக்கு ஒருமுறையும், செவ்வாய் கிரகம் ஒன்றரை மாதத்துக்கு ஒருமுறையும், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்கள் மாதமொரு முறையும் ஒரு ராசியிலிருந்து வேறொரு ராசிக்குப் பெயர்வார்கள். குரு, சனி, ராகு-கேது கிரகங்கள் ஆண்டு கிரகங்கள் எனப்படும். குரு பகவான் ஆண்டுக்கொரு முறையும், சனி பகவான் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறையும், ராகு-கேது ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறையும் பெயர்ச்சி அடைவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வகையில் இம்முறை குரு பகவான் இந்த பிலவ ஆண்டு ஐப்பசி திங்கள் 27-ம் நாள் (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு இடம் பெயர உள்ளார். இதுவரை மகர ராசியில் அவிட்டம் 2-ம் பாதத்திலிருந்து வந்த குரு பகவான் கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3-ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார். இதையொட்டி ஸ்ரீகும்ப குருபெயர்ச்சி மஹாஹோமம் ஒன்றை உங்கள் சக்தி விகடன் நடத்த உள்ளது. புதுச்சேரி ஶ்ரீவிஜய விஸ்வமாதா ராஜராஜேஸ்வரி பீடமும் சக்தி விகடனும் இணைந்து நடத்தும் இந்த மஹாஹோமம், பாண்டிச்சேரி - கடலூர் மார்க்கத்தில், இடையார் பாளையம், அருகில் ஞானமேடு கிராமத்தில் (சப்தகிரி நகர்) உள்ள அருள்மிகு சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. 13.11.2021 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த ஹோமத்தில் வாசகர்கள் பதிவு செய்து கொண்டு சங்கல்பம் செய்து பயன் அடையலாம்.

குருப்பெயர்ச்சி 2021
குருப்பெயர்ச்சி 2021

குறிப்பாக ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ராசியைச் சேர்ந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சிறிய அளவிலான அலைச்சல், உடல் நலக்குறைபாடு, வேலைச்சுமை, ஏமாற்றங்கள் தரும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள். எனவே மேற்கண்ட 7 ராசிக்காரர்களும் குரு பகவானுக்காகச் செய்யப்படும் இந்த சிறப்பு குரு பெயர்ச்சி ஹோமங்களில் கலந்து கொள்வது கூடுதல் பலன் தரும் எனலாம். இந்த மஹா ஆராதனை பைரவ குருஜீ ஸ்ரீமுத்து குருக்கள் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே அனைவரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு குருவருளால் நீங்காத செல்வமும், நிறைவான ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும், புகழ் கொண்ட பேரின்ப வாழ்வும் பெறலாம் என்பது நிச்சயம்.

குரு பகவான்
குரு பகவான்

அன்பார்ந்த வாசகர்களுக்கு...

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் - 30.11.2021 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில் வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் விரைவில் வீடியோ வடிவில் சக்தி விகடன் Youtube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு