Published:Updated:

திருவலிதாயம் திருத்தலத்தில் குருப்பெயர்ச்சி... சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு பக்தர்கள் பரவசம் !

இன்று (29.10.19) அதிகாலை 3.48 மணியளவில், குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தனுசு ராசியில் பிரவேசித்தார். சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

குருபகவான்
குருபகவான்

'வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும் வலிதாயத்து அண்டவாணனடி உள்குதலால் அருள் மாலைத் தமிழாகக் கண்டல்வைகு கடல் காழியுள்ஞானசம் பந்தன் தமிழ்பத்தும் கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்து உயர்வாரே' -திருஞானசம்பந்த நாயனார்

குருபகவான்
குருபகவான்

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருத்தலத்தில் குருப்பெயர்ச்சிவிழா கோலாகலமாக நடைபெற்றது. இன்று (29.10.19) அதிகாலை சரியாக 3.48 மணியளவில் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து, தன் சொந்த வீடான தனுசு ராசியில் பிரவேசித்தார். இதையொட்டி, திருவலிதாயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

குருப்பெயர்ச்சி -2019 பொதுப் பலன்கள்! #Astrology

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலம், தட்சிணாமூர்த்தியே குருபகவானாய் அருளும் தலமாக விளங்குகிறது. குருபகவான், இங்கு ஈசனை வழிபட்டு தோஷநிவர்த்தி பெற்றார். திருச்செந்தூர், ஆலங்குடி மற்றும் தென்குடித்திட்டை போன்ற குரு ஸ்தலங்களுக்கு இணையான தலமாக இது கருதப்படுகிறது. இந்தத் தலத்தில், குரு பகவானை ஒன்பது வியாழன் தொடர்ந்து வழிபட்டால், நினைத்தது நிறைவேறும், செல்வம், வேலை, குழந்தைபாக்கியம் என வேண்டியது கிடைக்கும் என்பது ஐதிகம்.

திருவடிசூலத்தில் சக்திவிகடன் வாசகர்களுக்காக சிறப்பு குருப்பெயர்ச்சி மகா பரிகார ஹோமம்!
குருபகவான்
குருபகவான்

இந்தக் கோயிலில், இன்று அதிகாலை முதலே பகவானுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் யாகம், அர்ச்சனைகள் போன்றவை மிகச் சிறப்பாக நடைபெற்றன. எனவே, 'குரு பார்வை கோடி நன்மை' என்பது ஜோதிட மொழி. எனவே, குருபகவானின் அருளைப் பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமிக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அக்னி யாகம் நடைபெற்றது.

குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜையில் சக்தி விகடன் வாசகர்கள்!

பெயர்ச்சி விழாவினையொட்டி கோயில் நிர்வாகம் சிறப்பான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தது. பக்தர்கள் கோயிலுக்கு வந்து நீண்டநேரம் காத்திருந்து வழிபட்டனர்.