Published:Updated:

குரு சமர்ப்பணம்!

ஶ்ரீராகவேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராகவேந்திரர்

பிருந்தாவனத்தில் கோசம்ரக்ஷணம் - அன்னதான வைபவம்

குரு சமர்ப்பணம்!

பிருந்தாவனத்தில் கோசம்ரக்ஷணம் - அன்னதான வைபவம்

Published:Updated:
ஶ்ரீராகவேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராகவேந்திரர்

தஞ்சையை மன்னன் விஜய ராஜவ நாயக் ஆட்சி செய்த காலம் (கி.பி.1642). ‘சோழநாடு சோறுடைத்து’ எனும் பழமொழி பொய்யாகிக் கொண்டிருந்த காலகட்டம் அது. காரணம், தொடர் யுத்தங்கள் மற்றும் வறட்சி.

நிலைமையைச் சமாளிக்கக் கருவூலத்தைத் திறந்து மக்களுக்குப் பொருளை வாரி வழங் கினான் மன்னன். ஆனால் குன்றித் தின்றால் குன்றும் மாளுமன்றோ... பொருள் வளம் குறைய மன்னன் கவலை கொண்டான்.


அப்போதுதான் ஶ்ரீராகவேந்திர சுவாமிகள் தஞ்சையை நோக்கி வந்துகொண்டிருக்கும் தகவல் அவனுக்கு வந்து சேர்ந்தது. பாலை நிலத்தில் தாகத்தோடு நிற்பவனுக்குக் கிடைக்கும் பெருமழை போல, மகானின் வருகை மன்னனின் மனத்தைக் குளிர்வித்தது. மரியாதையோடு அவரை வரவேற்றான்.

சுவாமிகள், தஞ்சையின் நிலை கண்டு மனம் வருந்தினார். மடத்திலிருந்த செல்வங்களை எல்லாம் உடனடியாக மக்களுக்கு வழங்க உத்தரவிட்டார். தங்கமும் வெள்ளியும் பசி தீர்க்குமா? அரசாங்கத்தின் தானியக் களஞ்சியத் துக்குச் சென்றார். அங்கு பீஜாக்ஷர மந்திரத்தை எழுதிவைத்தார். அதன்பின் நடந்தவை எல்லாம் அற்புதம்!

சுவாமியின் அருளாணைப்படி, தானியக் களஞ்சியத்திலிருந்து மக்கள் கேட்கும் தானியத்தை வாரி வழங்கினர் பணியாளர்கள். கொடுக்கக் கொடுக்கக் குறைய வேண்டிய தானியங்கள், அட்சயமாய் எடுக்க எடுக்க நிறைந்துகொண்டே இருந்தன. மக்களின் பசி தீர்ந்தது. அடுத்த தேவை மாமழை. எங்கு வேதங்கள் ஓதி இறைவன் துதிக்கப்படுகிறானோ, அங்கே பஞ்ச பூதங்களும் முறை தவறாமல் தம் கடமையைச் செய்யுமல்லவா?

ஶ்ரீராகவேந்திர சுவாமிகளின் உத்தரவின் பேரில், அங்கு யாகங்கள் நிகழ்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வேத மந்திரங்கள் முழங்க முழங்க வானில் மேகக் கூட்டங்கள் திரளத் தொடங்கின. ஆங்காங்கே சிறு மழையும் தூறிக் கட்டியம் கூறின. மன்னன் மனம் மகிழ்ந்தான். மகானைப் பார்த்துத் தன் நன்றியைச் சொல்ல ஓடிவந்தான்.

தன் நாட்டையும் மக்களையும் காத்த அந்த மகானுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்தான். அவன் மார்பில் ஆடிய ரத்தின மாலை அவன் மனத்திலும் ஆடியது. பரம்பரை மாலை. விலை என்ன என்று யூகிக்க முடியாத பொக்கிஷம். தன்னிடம் இருப்பதில் அதுதான் உயர்ந்தது என்று நினைத்தான். கழற்றி அவர் காலடியில் சமர்ப்பித்தான்.

பொன்னும் பொருளும் வேண்டுபவரா சுவாமிகள்? அடுத்த கணம் யாரும் எதிர்பாராத விதமாக அந்த மாலையை எடுத்து யாகத் தீயில் இட்டார். அதைக் கண்ட மன்னன் திகைத்தான். பரம்பரை நகை இப்படித் தீயில் கருகுகிறதே என்று வேதனையுற்றான். `மதிப்பை அறியாத துறவிக்கு நகையை அளித்துவிட்டோமே’ என்ற எண்ணமும் ஒரு கணம் அவனுள் எழுந்தது. வரும்போது மலர்ந்திருந்த அவன் முகம் இப்போது அனலில் இட்ட மலர்போல வாடியிருந்தது.

அவன் அகத்தில் இருப்பது என்ன என்பதை அறிந்த ஶ்ரீராகவேந்திரர் இறைவனைத் துதித்தார். அடுத்த கணம் யாக அக்னி மேலெழுந்தது. அதிலிருந்து அந்த ரத்னமாலை சிறு கறையும் படியாது வெளியே வந்து வீழ்ந்தது.

“மன்னா! இந்த நகைக்குதானே நீ வருந்தினாய். எடுத்துக்கொள்” என்றார் சுவாமிகள்.

தன் தவற்றை உணர்ந்தான் மன்னன். அந்த மகானைவிடப் பெரும் பொக்கிஷம் இந்த உலகில் ஏது எனும் உண்மையை அறிந் தான். அவனுள் இருந்த அஞ்ஞானம் பொசுங்கிப் போனது. சுவாமிகளின் காலடியில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். சுவாமிகள் அவனை மன்னித்தருளிய தருணம், மாமழை பொழிய தொடங்கியது. அடுத்த சில மாதங்களில் தஞ்சை தன் பழம்பெருமையை மீட்டுக்கொண்டது.

இந்தச் சம்பவம் அரிய உண்மைகளை நமக்கு உணர்த்தும். நம்முடைய முதல் கடமை மக்களின் பசிக்கு உணவிடுதல். மற்றது யக்ஞங் களை முறையாகச் செய்தல். யாகங்கள் செய்ய அந்தணர்களும் பசுக்களும் தேவை. அந்தணர் முழங்கும் வேதங்களும் பசுக்கள் வழங்கும் நெய்யுமே யாகத்தின் நோக்கத்தை முழுமையாக்கும்.

அதனால்தான் அந்தக் காலத்தில் வீடுதோறும் பசுக்கள் வளர்க்கப்பட்டன. பசு மூலம் கிடைக்கும் ஐந்து பொருள்கள் இணைந்த பஞ்சகவ்யம் வேளாண்மைக்கு உரமாகப் பயன்படுத்தப் பட்டது.

பல ஆயிரம் ஆண்டுகளாக நம் மண்ணிலிருந்த இந்தப் பாரம்பர்யம் அந்நியர்ஆட்சிக் காலத்தில் கொஞ்சம் கொஞ்ச மாக சிதைக்கப் பட்டது. பல ஆயிரம் பசுக்கள் கொல்லப் பட்டன. எருதினைக் கொண்டு ஏர் ஓட்டிய காலத்தில் நாம் நம் நெற்களஞ்சியங்களை நிறைத்திருந்தோம். காளைகளை இயந்திரங்களும் பஞ்சகவ்யத்தை செயற்கை உரங்களும் பதிலீடு செய்ய ஆரம்பித்த பின்னரும், நாம் நிறைய விளைவித்தோம். ஆனால் உணவே நஞ்சாகிவிட, அதை அறியாமல் பயன்படுத்தினோம். இன்று மனிதனுக்கு உண்டாகும் நோய்கள் பலவற்றுக்கும் உண்ணும் உணவே பெரும்பாலும் காரணமாகிவிடுகின்றன என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

ஆக, மீண்டும் நாம் நம் வேர்களை நோக்கிச் செல்லவேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். நம் மண்ணில் யாகங்களும் வழிபாடுகளும் செழிக்க வேண்டும் என்றால் வேதம் சொல்லும் வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் ஞானிகள்.

வேதம். `கோப்ராம்மணேப்ய சுப மஸ்து நித்யம்...' என்கிறது. திருஞானசம்பந்தரும், `வாழ்க அந்தணர், வானவர், ஆனினம்...' என்று அருளியுள்ளார். தர்ம சாஸ்திரம் என்ன சொல் கிறது தெரியுமா?

மனிதர்கள் செய்யக்கூடிய சிறந்த புண்ணிய மாகவும், ஆரோக்கியம், புத்திரப் பேறு, மன நிம்மதி ஆகியவற்றைப் பெறுவதற்கான வழியாகவும், கொடிய சாபங்கள் மற்றும் தோஷங்களுக்கான பரிகார மாகவும் திகழ்வது கோசம்ரக்ஷணம் மற்றும் கோதானம் என்று அறிவுறுத்துகிறது.

எந்த அளவுக்கு அன்னதானங்கள் அவசியமோ, அந்த அளவுக்கு கோசம்ரக்ஷணமும் அவசியம் என்பதையே ஶ்ரீராகவேந்திர சுவாமி களின் உபதேசங்களும் நமக்கு விளக்குகின்றன.

அவ்வகையில் அற்புதமான வைபவத்துக்குத் தயாராகிறார்கள் ஶ்ரீராகவேந்திரரின் பக்ததர்கள்.

குரு சமர்ப்பணம்!

புண்ணிய திருப்பணியில் பக்தர்கள்...

ஶ்ரீராகவேந்திர சுவாமி நாதஹார டிரஸ்ட். 2005 - ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பு இது. ஒவ்வோர் ஆண்டும் ஶ்ரீராக வேந்திரரின் ஜயந்தி தினத்தில் பக்தியோடும் அர்ப்பணிப்போடும் ஏதேனும் ஒரு வகையில் தங்களின் காணிக்கையைச் சமர்ப்பித்து வருகிறார்கள் இந்த அமைப்பினர்./

குறிப்பாக மந்த்ராலய க்ஷேத்திரத்தில், ஶ்ரீராகவேந்திரரின் ‘வர்தந்தி’ உற்சவத்தன்று 250-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில்... வாய்ப்பாட்டு, வயலின், வீணை, புல்லாங்குழல், நாதஸ்வரம், தவில், மிருதங்கம், மோர்சிங் ஆகிய இசைவாணர்கள் ஒன்றுகூடி நாதஹாரம் எனும் இசைமாலையைச் சாத்தி வருகின்றனர். இது தவிர பிற சேவைகளையும் சமர்ப்பணங்களையும் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு சுவாமிகளின் ஜயந்தி உற்சவத்தின்போது (20.3.2021), ஶ்ரீராகவேந்திர சுவாமிகளின் ஆக்ஞைப்படியும், ஶ்ரீமடத்தின் 108-வது பீடாதிபதியான ஶ்ரீஶ்ரீசுபுதேந்த்ர தீர்த்தரின் அருளாசியின் பேரிலும், இசையன்பர்கள் மற்றும் பக்தர்களின் விருப்பப்படியும் கோசம்ரக்ஷணம் மற்றும் அன்னதானத்திற்கான சேவையை முன்னெடுக்க இருக்கிறார்கள்.

இதற்குப் பங்களிக்க விரும்பும் பிற பக்தர்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு இதைச் செயல்படுத்த இருக்கிறார்கள்.

குரு சமர்ப்பணம்!
குரு சமர்ப்பணம்!

பசுக்கள் பராமரிப்பும் அன்னதான சேவையும்

பசுப் பராமரிப்பும் ஏழைகளுக்கு அன்னமிடுதலும் ஶ்ரீராகவேந்திர சுவாமிகளை மகிழ்விக்கும் சமர்ப்பணங்கள் என்பதை அவரின் திவ்ய சரித்திரத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இவற்றைச் செய்வதன் மூலம் மானிட சமூகம் பெறும் புண்ணியமும் நன்மைகளும் அளவற்றவை. இந்த சேவைகளே பல தோஷங்களுக்கான பரிகார மாகவும் விளங்குகின்றன.

இந்தப் புனித சேவைகளை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் உரிய நிதியாதாரத்தையும் மக்கள் ஆதரவையும் திரட்டும் நோக்கில் 12 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளின் மூலம் வரும் நிதியின் மூலம் மந்த்ராலயத்தில் உள்ள கோசாலையை மேம்படுத்தி, அதன் உள் கட்டமைப்புகளை விரிவாக்கி வலுப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

அதேபோல் அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களைப் பராமரிக்கவும், மந்த்ராலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அன்னதான சேவையை நிறைவுடன் செயல்படுத்தவும் ஶ்ரீராகவேந்திர சுவாமி நாதஹார டிரஸ்ட் அன்பர்களும் பக்தர்களும் திட்டமிட்டுள்ளனர்.

ஶ்ரீராகவேந்திர சுவாமிகள் இந்தக் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக அருளும் மந்திராலய க்ஷேத்திரத்தில், நாம் மேற்கொள்ளும் இந்தக் கைங்கர்யங்கள் நம் சந்ததியை வாழவைக்கும். ஶ்ரீராகவேந்திரா நாதஹார டிரஸ்ட் முன்னெடுக் கும் இந்தத் திருப்பணியில் அன்பர்கள் யாவரும் பங்கெடுத்துப் பயன் பெறலாம் (தொடர்புக்கு: 94441 41009)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism