Published:Updated:

குருபகவானின் முழுப் பலன்களையும் பெற ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி மஹாஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி மஹாஹோமம்: 13.11.2021 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த ஹோமத்தில் வாசகர்கள் பதிவு செய்து கொண்டு சங்கல்பம் செய்து பயன் அடையலாம்.

ஆன்மிகத்தில், ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி என்று நிகழும்போது ஆவலாக தங்களது ராசிக்கானப் பலன்களை அறிந்து கொள்வார்கள். அந்த வகையில் எல்லோருடைய ஆவலையும் தூண்டக்கூடிய குரு பகவான் பெயர்ச்சி இந்த பிலவ ஆண்டு ஐப்பசி திங்கள் 27-ம் நாள் (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு நடைபெற உள்ளது. இதுவரை மகர ராசியில் அவிட்டம் 2-ம் பாதத்திலிருந்து வந்த குரு பகவான் கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3-ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்.

இந்த ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சியால் நன்மை அடையக்கூடிய ராசிகளாக மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் ராசிக்காரர்கள் உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் இவர்களுக்கு தொழில் வளர்ச்சி, வியாபார வளர்ச்சி, புதிதாகத் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், சுப நிகழ்வுகள், வேலை வாய்ப்பு, அரசு உதவிகள், சொந்தங்களின் அனுசரணை, பதவி உயர்வு, திருமணப்பேறு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு, சொந்த வீடு வாங்குதல், லாபத்துடன் கூடிய ஒப்பந்தங்கள் போன்றவை சுமூகமாக நடைபெறும்.

ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி மஹாஹோமம்
ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி மஹாஹோமம்

மற்ற ராசிக்காரர்கள் அதாவது ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ராசியைச் சேர்ந்தவர்களுக்கு சிறிய அளவிலான அலைச்சல், உடல் நலக்குறைபாடு, வேலைச்சுமை, ஏமாற்றங்கள் போன்றவற்றால் அவதிப்படுவர் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள். எனவே மேற்கண்ட 7 ராசிக்காரர்களும் குரு பகவான் அருளும் சிறப்புத் தலங்களுக்குச் சென்று வழிபடுதல் நலம் தரும். அதிலும் குறிப்பாக குரு பகவானுக்காகச் செய்யப்படும் சிறப்பு குரு பெயர்ச்சி ஹோமங்களில் கலந்து கொள்வது கூடுதல் பலன் தரும் எனலாம்.

சுபகிரகமான குரு பகவான் தனித்து இயங்குபவர் இல்லை. அவர் பார்க்கும் இடத்தைப் பொறுத்தே பலன்களை அளிப்பவர். மேலும் ஜாதகரின் வேறு கிரகத் தொடர்புகள் இருந்தால் மட்டுமே குரு பகவானால் தன் முழு பலன்களையும் அளிக்க முடியும் என்கிறது சாஸ்திரம். ஒருவரின் ஜாதகத்தில் கிரக அமைப்புகள் குருவின் பார்வை பெறக்கூடிய வகையில் இருந்தால் மட்டுமே குருபகவானின் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும் என்கிறது ஜோதிடம். ஒருவரின் தற்போதைய தசா புத்தியும் சாதகமாக இருந்தால் மட்டுமே குரு பகவானின் எல்லாப் பலன்களையும் அனுபவிக்க முடியும் என்பதும் உண்மை. இந்த எல்லாப் பலன்களையும் நமக்கு முழுமையாகப் பெற்றுத்தரக் கூடிய சிறப்பு கொண்டது ஸ்ரீகும்ப குருபெயர்ச்சி மஹாஹோமம்.

பைரவ குருஜீ ஸ்ரீமுத்து குருக்கள்
பைரவ குருஜீ ஸ்ரீமுத்து குருக்கள்

வாசகர்கள் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற வேண்டியும், அவர்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் தீமைகள் நீங்கி சகல சுபிட்சங்கள் உண்டாகவும் உங்கள் சக்தி விகடன் ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி பரிகார மஹாஹோமம் ஒன்றை நடத்த உள்ளது. புதுச்சேரி ஶ்ரீவிஜய விஸ்வமாதா ராஜராஜேஸ்வரி பீடமும் சக்தி விகடனும் இணைந்து நடத்தும் இந்த மஹாஹோமம், பாண்டிச்சேரி - கடலூர் மார்க்கத்தில், இடையார் பாளையம், அருகில் ஞானமேடு கிராமத்தில் (சப்தகிரி நகர்) உள்ள அருள்மிகு சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் நடைபெற உள்ளது.

13.11.2021 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த ஹோமத்தில் வாசகர்கள் பதிவு செய்து கொண்டு சங்கல்பம் செய்து பயன் அடையலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சிறப்பு மிக்க ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி பரிகார மஹாஹோமத்தில் ஸ்ரீகுரு கணபதி மஹாஹோமம், ஸ்ரீமேதா தக்ஷிணாமூர்த்தி மஹாஹோமம், சேஷாத்ரி ஸ்வாமிகள் மஹாஹோமம், ஸ்ரீயோக குரு பகவான் மஹாஹோமம், ஸ்ரீஸ்வர்ணாகர்ஷன பைரவர் மஹாஹோமம், நவகிரஹ மஹாஹோமம், அகத்தியர் மஹாஹோமம், மஹா பூர்ணாஹுதி, மஹா அபிஷேகம், அலங்காரம், உபசாரம், மஹா தீபாராதனை உள்ளிட்ட சகல குரு பரிகார வைபவங்களுக்கு நடைபெற உள்ளது. இந்த மஹா ஆராதனை பைரவ குருஜீ ஸ்ரீமுத்து குருக்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

நவகிரஹ மஹாஹோமம்
நவகிரஹ மஹாஹோமம்
DIXITH

எனவே அனைவரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு குருவருளால் இந்த நாடும் உங்கள் வீடும் நலம் பெற பிரார்தித்துக் கொள்ளலாம். குரு பலமிக்க ஜாதகருக்குப் பொன்னும் பொருளும் தன்னால் சேரும். ஆயுளும் ஆரோக்கியமும் மேம்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி மஹாஹோமம்
ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி மஹாஹோமம்

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் - 30.11.2021 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில் வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் விரைவில் வீடியோ வடிவில் சக்தி விகடன் Youtube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு