Published:Updated:

குருப்பெயர்ச்சி விழா: நாகையில் கோலாகலம்!

குருபெயர்ச்சி விழா

குருபகவான் நேற்று அதிகாலை 4:16 மணியளவில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

குருப்பெயர்ச்சி விழா: நாகையில் கோலாகலம்!

குருபகவான் நேற்று அதிகாலை 4:16 மணியளவில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

Published:Updated:
குருபெயர்ச்சி விழா

நாகை மாவட்டத்திலுள்ள கோயில்களில் தமிழ் புத்தாண்டு மற்றும் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நேற்று (14.04.2022) அதிகாலை முதலே திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு உத்தரவால் கோயில்கள் பக்தர்களுக்கு அனுமதியின்றி அடைக்கப்பட்டிருந்தன. தற்போது தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் நேற்று குருப்பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். குருபகவான் நேற்று அதிகாலை 4:16 மணியளவில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

குருபெயர்ச்சி விழா
குருபெயர்ச்சி விழா

இதனை முன்னிட்டு நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் தனிச் சந்நிதி கொண்டுள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு முதல்நாள் இரவு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை கலசாபிஷேகம் நடந்தது. அதிகாலை 4:16 மணிக்கு குரு பெயர்ச்சிக்கான மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல் நாகையிலுள்ள வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் சுவாமி கோயில், அமரநந்தீஸ்வரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், கட்டியப்பர் கோயில், நடுவதீஸ்வரர் கோயில்,

குருபெயர்ச்சி விழா
குருபெயர்ச்சி விழா

அழகியநாதர் கோயில், வீரபத்திரசுவாமி கோயில்,மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நாகநாதர் கோயில், சட்டையப்பர் கோயில், வடக்குப் பொய்கைநல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோயில், நாகூர் நாகநாதர் கோயில், அந்தணப்பேட்டை அண்ணாமலையார் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் குருபெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism