Published:Updated:

திருவடிசூலத்தில் சக்திவிகடன் வாசகர்களுக்காக சிறப்பு குருப்பெயர்ச்சி மகா பரிகார ஹோமம்!

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

திருவடிசூலத்தில் நடைபெற்ற சிறப்பு குருப்பெயர்ச்சி பரிகார ஹோமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சக்தி விகடன் வாசகர்களும் பக்தர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

குரு பகவான் இன்று (29.10.2019 ) அதிகாலை சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திர தினத்தில், ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்தார். இதையொட்டி, சிவாலயங்கள் மற்றும் நவகிரக தலங்களில் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

குரு பகவான்
குரு பகவான்

சக்தி விகடன் சார்பில், செங்கல்பட்டு அருகே உள்ள திருவடிசூலத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு சப்தசைல ஸ்ரீவாரு வேங்கடாசலபதி கோயிலின் அருகிலுள்ள ஆதிபரமேஸ்வரி தேவி கருமாரியம்மன் ஆலயத்தில், வாசகர்களின் நன்மைக்காக குருப்பெயர்ச்சி பரிகார மகா ஹோமம் சாஸ்திரோக்தமான முறையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த குருப்பெயர்ச்சிப் பரிகார ஹோமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சக்தி விகடன் வாசகர்களும் பக்தர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

கிரகங்களில் முழு சுபகிரகம் குருபகவான். இவர், தனுசு ராசியில் சஞ்சரிக்கும் ஒரு வருட காலத்தில் ரிஷபம், கடகம், கன்னி துலாம், தனுசு, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசியில் பிறந்தவர்களுக்கு உரிய பரிகாரங்களைச் செய்து வழிபட வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள்.

குருப்பெயர்ச்சி ஹோமம்
குருப்பெயர்ச்சி ஹோமம்

அதனால், 108 திவ்ய தேச பெருமாள்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பும் சிறப்பும் வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் திருவடிசூலத்தில் குருப்பெயர்ச்சி மகாபரிகார ஹோமம் சக்தி விகடன் சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்டது.

`பலம் சேர்ப்பாரா குரு பகவான்?’

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய பரிகார ஹோமம் 11.30 மணி வரையிலும் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட சக்தி விகடன் வாசகர்களும் பக்தர்களும் தங்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் ஆகியவற்றில் சிறப்பு சங்கல்பமும் ஆராதனையும் செய்து, பரிகார பூஜை செய்துகொண்டு குருபகவானின் அருள் பெற்றனர். 

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

ஆன்மிகப் பெரியோர்களான சொல்லின் செல்வர் பி.என் பரசுராமன், பண்டிட் காழியூர் நாராயணன், இறையிசைப் பாடகர் சாஸ்தா தாசன் ஆகியோர் குருப்பெயர்ச்சி விழாவில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றி சிறப்பித்தனர். 

அடுத்த கட்டுரைக்கு