Published:Updated:

கிருஷ்ண தரிசனம்! : திருப்புக்கா தரிசனம்!

குருவாயூர் கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
குருவாயூர் கிருஷ்ணன்

கண்ணன், பாமா - ருக்மிணியுடன் அருளும் ஆலயம் மதுரை குரார் – கள்ளிக்குடியில் உள்ளது.

கேரளாவின் புகழ் பெற்ற திருத்தலமான குருவாயூரின் சிறப்புகளுள் ஒன்று திருப்புக்கா தரிசனம். இரவு வேளை பூஜையின்போது, பகவான் குருவாயூரப்பன் தரும் தரிசனமே திருப்புக்கா தரிசனம் ஆகும்.

இந்த தரிசனத் தின்போது, குருவாயூரப்பனின் திருமுன் அஷ்ட கந்தங்களை... அதாவது, எட்டு வகை வாசனைப் பொருட்களை தூபமாகப் பயன்படுத்துவர். இந்தத் திருப்புக்கா தரிசனத் தைக் கண்டு வருவதால், கஷ்டங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இதேபோல், கண்ணனின் அருள் சுரக்கும் வேறு சில தலங்களின் மகிமைகளையும் அறிவோம்.

குருவாயூர் கிருஷ்ணன்
குருவாயூர் கிருஷ்ணன்

ம்பாசமுத்திரம் கோயிலில் உள்ள வேணுகோபாலன் சிலை நேபாளம் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜயந்தியன்று இங்குப் பெருமாளுக்குத் கண்திறப்பு, சங்கில் பால் புகட்டும் வைபவங்களும் நடக்கின்றன.

ண்ணன், ராஜகோபாலனாக செங்கமல வல்லி நாச்சியாருடன் அருளும் கோயில் கடலூர், புதுப்பாளையத்தில் உள்ளது. திருப்பதி பெருமாளுக்கான காணிக்கைகளை இங்கு சேர்க்கலாம் என்பது ஐதிகம்.

மூலவர் கோபிநாதராகவும், உற்ஸவர் கிருஷ்ணராகவும், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரத்தில் அருள்கிறார்கள். இந்தக் கண்ணன் கால்நடைகளைக் காப்பதாக நம்பிக்கை.

ண்ணன், பாமா - ருக்மிணியுடன் அருளும் ஆலயம் மதுரை குரார் – கள்ளிக்குடியில் உள்ளது. இங்குள்ள நந்தவனத்தில் உள்ள புளியமரம் பூப்பதோ, காய்ப்பதோ இல்லை!

காஞ்சி - மணிமங்கலத்தில் ராஜகோபால சுவாமி, செங்கமலவல்லித் தாயாருடன் கோயில்கொண்டுள்ளார். இங்கே, பெருமாள் இடக் கையில் சக்கரமும் வலக் கையில் சங்கும் ஏந்தியிருப்பது அபூர்வ திருக்கோலமாகும்.

- கே.புவனா, சென்னை-59

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz