Published:Updated:

குருவாயூரப்பன் பஞ்ச ரத்ன கீர்த்தனை!

குருவாயூரப்பன்
பிரீமியம் ஸ்டோரி
குருவாயூரப்பன்

குருவாயூரப்பா... விடியற்காலையில் நான்கு பக்கத்தில் இருந்தும் வந்த பக்தர்கள் நன்கு தரிசனம் செய்யுமாறு விஸ்வரூப தரிசனத்தை அளிப்பவரே!

குருவாயூரப்பன் பஞ்ச ரத்ன கீர்த்தனை!

குருவாயூரப்பா... விடியற்காலையில் நான்கு பக்கத்தில் இருந்தும் வந்த பக்தர்கள் நன்கு தரிசனம் செய்யுமாறு விஸ்வரூப தரிசனத்தை அளிப்பவரே!

Published:Updated:
குருவாயூரப்பன்
பிரீமியம் ஸ்டோரி
குருவாயூரப்பன்

குருவாயூரப்பனைப் போற்றி வணங்கும் அற்புத ஸ்தோத்திரம் இது. சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் அருளிய ஞானப் பொக்கிஷம் இது. புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, மனத்தில் குருவாயூரப்பனை தியானித்து வணங்கி இந்த ஐந்து ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுங்கள். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

கல்யாணரூபாய கலௌ ஜனானாம்

கல்யாணதாத்ரே கருணாஸுதாப்தே

கம்ப்வாதி திவ்யாயுதஸத்கராய

வாதாலயாதீஸ நமோ நமஸ்தே

கருத்து: குருவாயூரப்பா! கருணாமிருதஸாகரா! மங்கலகரமான திருமேனியைக் கொண்டவரும், கலியில் பக்தர்களுக்கு மங்கலத்தை வாரி அருள்பவரும், சங்கம் முதலிய திவ்ய ஆயுதங்களைக் கைகளில் தரித்தவருமான தங்களுக்கு நமஸ்காரங்கள்!

நாராயணேத்யாதி ஜபத்பிருச்சை:

பக்தைஸ்ஸதா பூர்ணமஹாலயாய

ஸ்வதீர்த்த காங்கோபம வாரிமக்ன

நிவர்த்திதா ஸேஷரூஜே நமஸ்தே

குருவாயூரப்பன் பஞ்ச ரத்ன கீர்த்தனை!

கருத்து: நாராயணா... குருவாயூரப்பா... கோவிந்தா... முதலிய திருநாமங்களை உரத்த குரலில் ஜபிக்கின்ற பக்தர்களால் எப்போதும் நிரம்பிய கோயிலைக் கொண்டவரும், தங்களின் தீர்த்தமான கங்கை நீருக்கு ஒப்பான தண்ணீரில் ஸ்நானம் செய்தவர்களின் ஸமஸ்த ரோகங்களையும் போக்கு

பவருமான தங்களுக்கு நமஸ்காரம்!

ப்ராஹ்மேமுஹூர்த்தே பரிதஸ்வபக்தை:

ஸந்த்ருஷ்ட ஸர்வோத்தம விஸ்வரூப

ஸ்வதைல ஸம்ஸேவக ரோகஹர்த்ரே

வாதாலயாதீஸ நமோ நமஸ்தே

கருத்து: குருவாயூரப்பா... விடியற்காலையில் நான்கு பக்கத்தில் இருந்தும் வந்த பக்தர்கள் நன்கு தரிசனம் செய்யுமாறு விஸ்வரூப தரிசனத்தை அளிப்பவரே! தங்களுக்கு அபிஷேகம் செய்த நல்லெண்ணெய்யை உள்ளுக்கும் மேலுக்கும் உபயோகப்படுத்திக் கொள்பவர்களின் ரோகத்தைப் போக்கும் தங்களுக்கு நமஸ்காரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாலான் ஸ்வகீயான் தவ ஸன்னிதானே

திவ்யான்னதானாத் பரிபாலயத்பி:

ஸதா படத்பிஸ்ச புராண ரத்னம்

ஸம்ஸேவிதாயாஸ்து நமோ ஹரே தே

கருத்து: தங்கள் சந்நிதானத்தில், தங்களின் குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் செய்து வைத்து, அந்தக் குழந்தைகளை நன்கு காப்பாற்று கிறவர்களாலும், புராணங்களுக்குள் சிறந்த ஸ்ரீமத் பாகவதத்தை நன்கு படிக்கின்ற பக்தர்களாலும் நன்கு ஸேவிக்கப்படும் தங்களுக்கு நமஸ்காரம்!

நித்யான்னதாத்ரே ச மஹீஸுரேப்ய:

நித்யம் திவிஸ்த்தைர்நிஸிபூஜிதாய

மாத்ரா ச பித்ரா ச ததோத்தவேன

ஸம்பூஜிதாயாஸ்து நமோ நமஸ்தே

கருத்து: நித்யம் வேத வித்துக்களுக்கு அன்னம் அளிப்பவரும், நித்யம் தேவர்களால் இரவு பூஜிக்கப்படுகிறவரும், தாயான தேவகியாலும், பிதாவான வஸுதேவராலும், பக்தரான உத்தவராலும் பூஜிக்கப்பட்டவருமான தங்களுக்கு நமஸ்காரம்!

குருவாதபுரீஸ பஞ்சகாக்யம்

ஸ்துதிரத்னம் படதாம் ஸுமங்கலம் ஸ்யாத்

ஹ்ருதிசாபி விஸேத் ஹரிஸ்வயம் து

ரதிநாதாயுத துல்யதேஹ காந்தி:

கருத்து: குருவாயூரப்பனைப் பற்றிய 5 ஸ்லோகங்கள் உள்ள இந்த உயர்ந்த ஸ்தோத் திரத்தைப் படிப்பவர்களுக்கு உயர்ந்த மங்கலம் உண்டாகும். பதினாயிரம் மன்மதனுக்கு ஒப்பான தேஹ காந்தியுள்ள ஸ்ரீமந் நாராயணனும் இதயத்தில் பிரவேசித்து தரிசனம் அளிப்பார் தருள்வார் குருவாயூரப்பன்.

- ந. கீர்த்தனா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism