Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

வாசகர்களின் ஆன்மிகப் பகிர்வுகள்

ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த ஆன்மிகத் தகவல்கள் மற்றும் வாசகர்களின் சந்தேகங்களுக்கு வாசகர்களே தகவல் பகிரும் பகுதி இது. ஆன்மிகம் தொடர்பான உங்களின் சந்தேகங்கள், தேவைப்படும் தகவல்களை நீங்கள் கேள்வியாகக் கேட்கலாம். அத்துடன் இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு, துல்லிய விவரங்களை - பதில்களை நீங்கள் அறிந்திருந்தால் அவற்றையும் பகிரலாம்.

உதவலாம் வாருங்கள்!

மிழகத்தில் கல்லால மரம் ஏதேனும் திருத்தலத்தில் ஸ்தல விருட்சமாக உள்ளதா? கல்லால மரம் குறித்து விரிவான தகவல்கள் அடங்கிய நூல்கள் ஏதேனும் உண்டா? விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.

- கே.வீரமணி, தென்காசி

ங்கள் பூர்வீகம் புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள மாங்குடி. இந்த ஊருக்கு அருகே பாலா திரிபுரசுந்தரி அம்மன் அருள்பாலிக்கும் திருக்கோயில் ஏதேனும் உள்ளதா. இந்த அம்பிகையே எங்களின் குலதெய்வம் என்று அறிகிறோம். இந்தப் பகுதியில் பாலாம்பிகை கோயில் அமைவிடம் குறித்து தகவல் அறிந்தவர்கள் விவரம் பகிர்ந்தால், பயனுள்ளதாக இருக்கும்.

- வீ.ராமுசுந்தரம், சென்னை-44

`மாதர் நமாமி கமலே' என்று தொடங்கும் மகாலட்சுமி துதிப்பாடல் ஒன்று உண்டு. இந்தத் துதியை அருளியது யார். இந்தப் பாடல் எந்த நூலில் உள்ளது, எங்கு கிடைக்கும். எவரிடமேனும் இந்தப் பாடல் உள்ள புத்தகம் இருப்பின் நகல் எடுத்து அனுப்புங்களேன்.

- சி.ஜெயந்தி, கோவை-3

கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்கள் குறித்து அறிவோம். அதேபோல் `பஞ்ச ராம க்ஷேத்திரங் கள்' உண்டு என்று அறிந்தேன். இந்தப் புண் ணியத் தலங்கள் எங்கு உள்ளன? இந்த தலங் களை தரிசிக்க ஆவலாக உள்ளேன். அமைவிடம், செல்லும் வழி போன்ற விவரங்கள் தேவை.

- எம்.செந்தில்நாதன், தூத்துக்குடி

`தண்டபாணி சுவாமிகள் இயற்றிய `திருவரங்கத் திருவாயிரம்' குறித்த கட்டுரை படித்தேன். இந்த நூல் எங்கு கிடைக்கும்?'

- கி.சுப்பு, வள்ளியூர்

உதவலாம் வாருங்கள்!

உதவிக்கரம் நீட்டியோர்...

`தமிழகத்தில் இரட்டை ஆஞ்சநேயர் சந்நிதி அமைந்திருக்கும் திருக்கோயில் எங்குள்ளது. விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்' என்று 28.12.21 தேதியிட்ட இதழில், தென்காசி வாசகர் கே.வீரமணி கேட்டிருந்தார். அவருக்குக் அதுபற்றிய விவரங்களை, சென்னை வாசகி மாலதி விஜேந்திரன், சென்னை வாசகர்கள் `சிம்மவாஹினி' டி.ஜி.நாராயணராவ், எம்.கணபதி ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.

மிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் ஶ்ரீவியாசராஜர் ஸ்தாபித்த இரட்டை ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது.

இரட்டை ஆஞ்சநேயரை மேல்பாதி எனும் ஊரில் தரிசிக்கலாம். மயிலாடுதுறை மார்க்கத்தில் அக்கூர் சாலை அல்லது பூம்புகார் சாலையில் இறங்கி, அங்கிருந்து மேல்பாதி எனும் ஊருக்குச் செல்லலாம். சனிக்கிழமைகளிலும் அமாவாசை-பெளர்ணமி தினங்களிலும் மூலம் நட்சத்திர தினத்திலும் சிறப்பு பூஜை நடைபெறும். இரட்டைக் குழந்தைகள் பெற்றவர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம் இது.

சென்னை வில்லிவாக்கம் பேருந்துநிலையத்திலிருந்து சுமார் 5 நிமிட நடைப்பயண தூரத்தில் உள்ளது ஶ்ரீபாலியம்மன் ஆலயம். அருகிலேயே கோயில் கொண் டிருக்கிறார் கல்யாண வரம் தரும் ஶ்ரீகல்யாண சுப்ரமணிய ஸ்வாமி. இவரின் ஆலயத்திலேயே கல்வி வரம் அருளும் இரட்டை ஆஞ்சநேயர்களும் அருள்கின்றனர்!

சுமார் 300 வருட பழைமைமிக்க ஆலயம் இது. கோயிலின் தூண் ஒன்றில், சஞ்சீவி மலையைத் தூக்கியபடி காட்சி தரும் வீர ஆஞ்சநேயரின் திருவுருவம் இருந்தது. பிறகு திருப்பணியின்போது, ஆஞ்சநேயருக் குத் தனிச்சந்நிதி அமைக்கப்பட்டது. அப்போது, புதிதாக அனுமன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, அந்த விக்கிரகத்துக்குப் பின்னால் கருவறைச் சுவரில், தூணில் இருந்த ஆஞ்சநேயரையும் பிரதிஷ்டை செய்தனராம்! வியாழக்கிழமையன்று இங்கே வந்து, இரண்டு ஆஞ்சநேயர்களையும் தரிசித்து, தேங்காயில் நெய் தீபமேற்றி வழிபட, கல்வி- கேள்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்!