தொடர்கள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உன்னருள் தருவாய் சண்முகனே

முன்னம் தீவினை கோள்களின்

கொடுவினை நீக்கிடும் வரம் தா

கண்களில் நல்லவை கண்டிட

கேட்டிட திருவருள் செய்திடு

ஜய ஜய வேலவ தானவ

நாசக ஸஜ்ஜன பாலக ஷண்முகனே!

உதவலாம் வாருங்கள்!


- இந்த பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் என்ன, இதை இயற்றிய வர் யார்? இதுபோன்று இதில் மீதியுள்ள பாடல்கள் எத்தனை? விவரம் அறிந்தவர்கள், இந்தப் பாடல் அடங்கிய நூல் கிடைக்கும் முகவரி தெரிந்தவர்கள், தகவல் பகிருங்களேன்.

மு.பாண்டித்துரை, சேலம்-6

எங்கள் தாத்தா திருச்சி சிந்தாமணி பகுதியிலிருந்து பட்டுக் கோட்டைக்கு இடம்பெயர்ந்தவர். மூன்று குழந்தைகளுடன் பட்டுக் கோட்டையிலேயே தங்கிவிட்டார். அவரின் மூன்று வாரிசுகளில் எங்கள் குடும்பத்தில் மட்டுமே ஆண் வாரிசுகள் உள்ளனர்.

எங்கள் குலதெய்வம் திருச்சியில் இருந்ததாகவும், அந்தத் தெய்வத்துக்குக் கரும்பால் கால்நட்டு, வெற்றி லையால் பந்தல் இட்டு வழிபாடு செய்ததாகவும் கூறு வார்கள். இப்படியான குலதெய்வ வழிபாடு திருச்சியில் எந்தப் பகுதியில் நடைபெறுகிறது, அந்தத் தெய்வத்தின் பெயர் என்ன... என்பன குறித்து எவருக்கேனும் விவரம் தெரிந்தால் தகவல் கொடுத்து உதவுங்களேன்.

- எம்.ராஜேந்திரன், பட்டுக்கோட்டை

வனப் பேச்சியம்மன் அட்டகாளிகளில் ஒரு தெய்வமா? அட்ட காளிகளின் கதையைச் சொல்லும் வில்லுப்பாட்டு குறித்த புத்த கங்கள் ஏதேனும் உள்ளதா? எங்கு கிடைக்கும்?

- ப.கார்த்திகேயன், விழுப்புரம்

எங்கள் ஊர், அ.புதூர் கிராமம். கொடிக்குளம் அஞ்சல், மதுரை கிழக்கு மாவட்டம். எங்கள் ஊரில் அருள்மிகு யானைமலையான் மலைச்சாமி கோயில் உள்ளது. மேலும் அருள்மிகு நரசிங்கவல்லித் தாயாருடன் அருளும் யோக நரசிம்மர் சந்நிதி உள்ளது. கிழக்குப் பகுதியில் தமிழக அரசின் விவசாயக் கல்லூரி உள்ளது. ஒத்தக்கடை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குக் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார் நரசிம்மர். இந்த `யானை மலை’ தலம் குறித்த முழுமையான தகவல்களைக் கொண்ட புத்தகம் ஏதேனும் உண்டா. எங்கு கிடைக்கும். விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.

-கி.மகராஜன், அ.புதூர்

அனுமந்தபுரம் வீரபத்ர சுவாமி திருக்கோயில் பிரசித்திபெற்றது. இதேபோல், சென்னைக்கு அருகில் வீரபத்ரருக்கான தனிக் கோயில் எங்குள்ளது? வீரபத்திரர் வழிபாட்டு விவரங்கள் அடங்கிய புத்தகமும் தேவை. கிடைக்கும் இடம் குறித்த விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- வீ.பாலமுருகன், தேனி

`ஆலய வலம் வருவோம்!’

`திருக்கோயில்களில் வலம் வரும்போது சொல்லவேண்டிய பிரதட்சிண மந்திரம் தேவை என்று’ திருநெல்வேலி வாசகர் கே.கிருஷ்ணன் கேட்டிருந்தார். அவருக்கு குறிப்பிட்ட ஸ்லோகத்தை ஓசூர் வாசகர் கே.தேவராஜன் பகிர்ந்துள்ளார்:

யானி கானி ச பாபானி

ஜன்மாந்தர க்ருதானிச

தானி தானி விநச்யந்தி

பிரதக்ஷிண பதே பதே

ஆலய வலம் வரும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய மேலும் பல விவரங்களைச் சென்னை வாசகர் எம். ஆதித்யா பகிர்ந் துள்ளார்:

`கண்கண்ட பலனை வழங்குவதில் நிகரற்றவை ஆலய வலமும், வழிபாடும். பிரதட்சிணம் வரும்போது வேகவேகமாக வலம் வருதல் கூடாது; மெள்ள வலம் வர வேண்டும். பூரணக் கர்ப்பிணி தலையில் எண் ணெய்க் குடத்துடன் நடந்தால் எவ்வாறு நடப்பாளோ, அதேபோல் நடந்து வலம் செய்யவேண்டும் என்று விவரிக்கின்றன ஞானநூல்கள். கைகளை ஆட்டாமலும், வாக்கினால் தெய்வ ஸ்தோத்திரங்களைச் சொல்லிக்கொண்டும் நடக்கவேண்டும். இதயத்தில் பகவானைத் தியானித்தபடி நடப்பது அவசியம்.

தெய்வத்துக்கும் தெய்வத்தை உபாசிக்கும் பக்தனுக்கும் நடுவில் பிரதட்சிணம் செய்யக் கூடாது. உபாசகனையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்யவேண்டும். பலிபீடத்துக்கு நடுவில் சென்று வலம் வரக் கூடாது.’