Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

Published:Updated:
உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

வலம்புரிச் சங்கு வழிபாட்டு நியதிகள் குறித்த புத்தகம் ஏதேனும் உள்ளதா. கோயில்களுக்குக் கொடுக்கவும் அன்பர்களுக்குத் தானம் அளிக்கவும் வலம்புரிச் சங்கு தேவை. அதன்பொருட்டு வலம்புரிச் சங்குகள் மொத்தமாக வாங்கவேண்டும் எனில், எங்கு கிடைக்கும்?

சட்டைமுனி
சட்டைமுனி


- எம்.முருகேசன், வள்ளியூர்

ஆலயங்களில் திகழும் அற்புதங்கள் வித்தியாசமான அமைப்புகள் குறித்து தகவல் சேகரித்து வருகிறேன். திருச்செந்தூர் முருகன் கோயிலில் கொடிமரம் அருகில் உள்ள சிறு துவாரத்தில் காதுகளை வைத்துக் கேட்டால், கடலலை ஓசை பிரணவநாதம் போன்று ஒலிக்கும். இது ஓர் உதாரணம். இதுபோன்ற ஆலய அற்புதங்கள் குறித்த தகவல்கள் எவரிடமேனும் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- கி.சுந்தரம், தூத்துக்குடி

மதுரைவீரன் சுவாமி குறித்த வழிபாடு மற்றும் முழு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய புத்தகம் தேவை. அதேபோல் அழகர்மலை பதினெட்டாம்படி கருப்பர் குறித்த விவரங்களும் தேவை. அன்பர்கள் எவரிடமேனும் இதுபற்றிய விவரங்கள் அல்லது புத்தகங்கள் இருந்தால் நகல் எடுத்து அனுப்பிவையுங்களேன்.

- கோ.லட்சுமணன், கருங்குளம்

திருவானைக்கா அருள்மிகு ஜம்புகேஸ்வரர் குறித்து சேர, சோழ, பாண்டியரும் விக்கிரம மன்னனும் துதிசெய்து பாடிய ஸ்லோகப் பாடல் தொகுப்பு ஒன்று உண்டு. `விபூதி ப்ராகாரவர்ணநம்’ என்று பெயர். இதன் துதி ஸ்லோகங்களை தமிழ் விளக்கங்களுடன் கையெழுத்துப் பிரதியாக என் தாத்தா வைத்திருந்தார். இப்போது அதில் எழுத்துகள் யாவும் மங்கிவிட்டன. இதைப் படித்தால் சிவாலயம் நிர்ணயம் செய்த புண்ணியம் கிடைக்கும் எனப்போன்ற சில வரிகள் மட்டுமே தெளிவாக உள்ளன. இந்த ஸ்லோகம் எந்த நூலில் உள்ளது. தகவல் அறிந்தவர்கள் விவரம் பகிருங்களேன்.

- எல்.கண்ணன், திருநெல்வேலி-3

`மால்வெள்விடை’ என்று நந்தியைப் போற்றும் வரி ஒன்றைப் படித்தேன். இதன் பொருள் என்ன. பெரியவர் ஒருவர் `ஆலயங்களில் அமையும் நந்தி வகைகளில் ஒன்று மால்விடை நந்தி’ என்று தகவல் பகிர்ந்தார். இதுகுறித்த மேல்விவரங்கள் எவரிடமேனும் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

-சோ.மீனாள், கோவில்பட்டி

யானைத் தோல் போர்த்திய சட்டை முனி!

`சட்டைமுனிச் சித்தர் குறித்த விவரங்கள் தேவை’ என்று வள்ளியூர் வாசகர் சி.லக்ஷ்மிநாராயணன் கேட்டிருந்தார். அவருக்கு சென்னை-தாம்பரம் வாசகர் பரணீதரன் கீழ்க்காணும் விவரத்தைப் பகிர்ந்துள்ளார்:

`நோயற்ற ஆரோக்கியமான வாழ்வே உண்மையான செல்வம். நோய் நீக்கி ஆரோக்கியத்தை வழங்கும் மருத்துவப் பணியின் முதல்வராக சட்டை முனியைப் போற்றுவார்கள்.

சட்டை முனியின் தூய்மையான எண்ணமும் போன பிறவிப் புண்ணியமும் அவர் முன்னால் கொங்கணரைக் கொண்டு வந்து நிறுத்தின. கொங்கணரின் கால்களில் விழுந்தார் சட்டை முனி. ‘குருதேவா! உலகம் முழுவதும் வினை மயமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வேதனை. பதைக்கிறது நெஞ்சம். உடலும் உயிரும் வாழ வேண்டும். தகுந்த வழியைக் காட்டி அருள் செய்யுங்கள் ஸ்வாமி!’’ என அவரிடம் வேண்டினார் சட்டை முனி.

கொங்கணர் அவருக்கு மந்திர உபதேசம் செய்து வழிகாட்டினார். குருவின் வழிகாட்டுதல்படி உள்ளத்தில் ஆசை, பாசம் என்னும் களைகள் வளராமல் பார்த்துக் கொண்டார். அதன் விளைவாக சிவ பெருமானின் திருவடிகளைக் காணும் பாக்கியம் பெற்றார்.

‘‘யானையின் தோலைப் போர்த்தியவர் சிவபெருமான். அவரது திருவடிகளை தரிசித்த நானும், அகம்பாவம் எனும் யானை என்னை நெருங்காதபடி, யானையின் தோலையே சட்டையாகப் போர்த்திக் கொள்வேன்!’’ என்று யானைத் தோலை சட்டையாகப் போர்த்திக் கொண்டார். உடம்பின் மீது இருந்த பற்றுதலும் போய் விட்டது. உடம்பு என்னும் சட்டையை லட்சியம் செய்யாத அவரை, ‘சட்டை முனி’ என அழைத்தது உலகம்.

சட்டை முனியைத் தேடி ரோமசர் வந்தார். ‘‘மருத்துவத்தில் எனக்கு உள்ள சந்தேகங்களை நீக்க வேண்டும்!’’ என விண்ணப்பித்தார். சட்டை முனி மறுக்கவில்லை. தான் அறிந்ததை எல்லாம் சொல்லி, ரோமசரின் சந்தேகங்களைப் போக்கினார்.

சட்டை முனியைப் பொறுத்தவரை மூன்று விஷயங்கள் முக்கியம். தரமான மருந்து, திறமைசாலியான மருத்துவர், நேரப்படி மருந்து சாப்பிட்டு பத்தியத்தைக் கடைப்பிடிக்கும் நோயாளி- இந்த மூன்றும் ஒன்றுபட்டால், எந்த வியாதியாக இருந்தாலும் போய்விடும் என்பது அவரின் திருவாக்கு.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்த

கேடு கெட்ட மானிடரே கேளுங்கள்!

கூடு விட்டிங்காவிதான் போன பின்னர்

யாரே அனுபவிப்பார்? பாவிகாள்...

இது சட்டைமுனி அருளிய பாடல்களில் ஒன்று!

சதுர்முக லிங்கம்
சதுர்முக லிங்கம்


ஐஸ்வர்யம் அருளும் சதுர்முக லிங்கம்!

`நம் தமிழகத்தில் எந்தெந்த தலங்களில் சதுர்முக லிங்கம் உள்ளது. முகலிங்க வழிபாட்டின் தாத்பரியம் என்ன? விவரம் அறிந்தவர்கள் விளக்குங்களேன்’ என்று விழுப்புரம் வாசகி கே.கல்யாணி கேட்டிருந்தார். அவருக்குக் கீழ்க்காணும் விவரத்தை நெல்லை வாசகர் பி.பாடகலிங்கம் பகிர்ந்துள்ளார்:

`முக லிங்கங்களை வழிபடுவதால், இம்மையில் அஷ்ட ஐஸ்வர்யங் களும் மறுமையில் சிவ சாயூஜ்யமும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறும். சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் இந்த முகங்களை அமைக்க வேண்டும். முகலிங்க வகைகளில் ஒன்று சதுர்முக லிங்கம்.

சதுர்முக லிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கில் தத்புருஷம், மேற்கில் சத்யோஜாதம், வடக்கில் வாம தேவம், தெற்கில் அகோரம் என நான்கு முகங்களை அமைப்பர். இந்த லிங்கத்தின் நான்கு முகங்களையும் நான்கு வேதங்களால் அர்ச்சித்து பூஜை செய்வர்.

நேபாளத்தில் உள்ள பசுபதி நாதர் ஆலயத்தில் உள்ளது சதுர்முக லிங்கம். இது மார்பு வரை இரு கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் ஜப மாலையும், மற்றொரு கையில் அமுதக் குடமும் உள்ளன. நான்கு முக லிங்கம் ஆனதால் இங்கு நான்கு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழில் இதை ‘நான்முகக் கோயில்’ என்பர். வடமொழியில், ‘சர்வதோ பத்ராலயம்’ என்பர்.

திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்-கச்சபேசு வரர் ஆகிய ஆலயங்களிலும் சதுர்முக லிங்க சந்நிதிகள் உள்ளன. கச்சபேஸ்வரர் ஆலயத்தில் நடராஜர் சந்நிதிக்கு அருகில் நான்குமுக லிங்கம் அமைந்த சந்நிதி உள்ளது.

சதுர்முக லிங்கத்தை நான்கு முக ருத்திராட்சத்தால் அலங்கரித்து, நால்வகை வில்வங்களால் அர்ச்சிப்பவர்கள் பெரிய அறிஞர்களாக விளங்குவார்கள்.’