Published:Updated:

உதவலாம் வாருங்கள் - ஒன்பதாவது அட்சர பீடம்!

உதவலாம் வாருங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள் - ஒன்பதாவது அட்சர பீடம்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்!

அன்பார்ந்த வாசகர்களே...

ஆன்மிகத்தில் தேடலும்

அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி: `உதவலாம் வாருங்கள்' சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்ன-600 002 Email: sakthi@vikatan.com

தென்னகத்தில் பட்டவராயன் வழிபாடு பிரசித்தம். புகழ்பெற்ற சொரிமுத்து ஐயனார் கோயிலிலும் பட்டவ ராயருக்குத் தனிச் சந்நிதி உண்டு. எங்கள் அம்மா வழியில் பல தலைமுறைகள் வரையிலும் பட்டவராயரை வழிபட்டுள்ளனர். இப்போது எங்கள் தாய்மாமனும் பட்டவராயரை வழிபட விரும்புகிறார். அவ்வகையில் அவருக்குப் பட்டவராயர் வழிபாட்டுக்கதைகள் தேவை. எவரிடமேனும் இருந்தால் பகிர்ந்து உதவுங்களேன்.

- எஸ்.கண்ணன், அம்பாசமுத்திரம்

மூர்த்த பிரதிஷ்டைக்குப் பயன்படுத்தப்படும் அஷ்டபந்தன மருந்துகள் என்னென்ன. கும்பாபிஷேக திருப்பணியின்போது சிலா பிரதிஷ்டையில் அஷ்டபந்தனம் செலுத்துவதன் தாத்பரியம் என்ன. இதுபற்றி விளக்கும் நூல்கள் உள்ளனவா? இதை முறைப்படி தயாரித்து தரும் அன்பர்கள் எவரேனும் உள்ளனரா? விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.

- கோ.லட்சுமணன், மதுரை-3

நாயன்மார்களில் வாயிலார் நாயனார் மற்றும் பூசலார் நாயனார் ஆகியோர் முக்திபெற்ற தலங்கள் எவை. அங்கு இவர்களுக்கென்று தனியே திருக்கோயில்கள் அல்லது சந்நிதிகள் உண்டா? விவரம் அறிய விரும்புகிறேன்.

-எம்.முருகானந்தம், சிவகங்கை

பசுக்கள் வழிபட்ட சிவத்தலங்களை தரிசிப்பதால் சகல ஐஸ்வர்யங்களும் பொங்கிப்பெருகும் என்பது ஆன்றோர் வாக்கு. பார்வதிதேவி பசு வடிவிலும், காமதேனுவும் பல தலங்களில் சிவ வழிபாடு செய்து அருள் பெற்றுள்ளார்கள். கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம், திருக்கோளம்பம் ஆகிய தலங்கள் பசு வழிபட்ட தலங்கள் என்பார்கள். இதுபோன்று வேறு தலங்கள் எங்கெங்கு உள்ளன?

-சி.மகாலட்சுமி, தூத்துக்குடி

நரசிம்மர், வராகர் அருளும் பல கோயில்கள் தென்ன கத்தில் உண்டு. வைணவ ஆலயங்கள் சிலவற்றில் பிராகார வலம் வரும்போது தசாவதார மூர்த்திகளையும் தரிசித் திருக்கிறேன். தசாவதார கோலங்களில் மச்ச அவதார மூர்த்திக்குத் தனிக்கோயில் உண்டா, எங்குள்ளது?

- கே.பத்மநாபன், கரூர்

லுதும்பரா தேவி
லுதும்பரா தேவி`சாக்தம் போற்றும் சக்தி தேவியரில் ஒருவள் அன்னை லுதும்பரா தேவி. மாத்ருகா நிகண்டு எனும் நூலில் இந்த அம்பாளைப் பற்றிய விவரங்கள் உள்ளதாகவும் இந்த அன்னைக்கு இமாலயப் பகுதியில் கோயில் உண்டு என்றும் பெரியவர் ஒருவர் மூலம் அறிந்தேன். `மாத்ருகா நிகண்டு’ எனும் அந்த நூல் தமிழ் விளக்கத்துடன் எங்கு கிடைக்கும். இந்த அன்னையின் ஆலயம் இருக்கும் இடம் குறித்த தகவலும் தேவை’ என்று திருச்சி வாசகர் எம்.முருகன் கேட்டிருந்தார்.

அவருக்கு லுதும்பராதேவி குறித்த தகவலை சென்னை - மயிலாப்பூர் வாசகர் சுரேஷ்குமார் பகிர்ந்துள்ளார்.

``அட்சர சக்திகளில் 9-வது அட்சரமான லு-காரத்தின் தேவியை லுதும்பராதேவி என்பார்கள். இந்த தேவியின் திருமேனி பச்சை வண்ணம். புலி வாகனத்தில் வீற்றிருப்பாள். மஞ்சள் வண்ண பட்டாடை யுடன் அருளும் இந்த அன்னை, எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள். வலக் கரங்களில் திரிசூலம், பாசக்கயிறு, உடுக்கை, வர முத்திரை திகழ, இடப்புறக் கரங்களில் கத்தி, கபாலம், கனத்த குறுந்தடி, அபயமுத்திரை ஆகியவை திகழ்கின்றன.

அன்னையின் இந்த ரூபத்தை மனதில் தியானித்து வழிபட்டால் சகல கலைகளும் ஸித்திக்கும்; சம்பத்துகள் பெருகும் என்பது நம்பிக்கை. லு-கார அட்சரத்தின் பிறப்பிடம் ஆம்ராதகேச்வரம் என்ற சக்தி பீடமாகும். இங்கு சதிதேவியின் வலது கன்னம் விழுந்ததாகக் கருதப்படுகிறது.

அதாவது தாட்சாயினி எனும் சதிதேவியின் வலது கன்னம் இரண்டு மூன்று துண்டுகளாக பெரும் சத்தத்துடனும் வேகத்துடனும் இமய மலைச்சாரலில் விழுந்தது. அந்த இடங்கள் பெரும் பள்ளங்களாயின. இவற்றைப் பிற்காலத்தில் தாமோதர் குண்டம் என்று அழைத்தார்கள். இந்த தாமோதர் குண்டம் சக்திபீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு அருளும் அம்பிகை கண்டகீஸ்வரி, கண்டகி சண்டி ஆகிய திருப்பெயர்களில் வழிபடப்படுகிறாள்.

நேபாளத்தில் மஸ்டாங் மாவட்டத்தில் சுமார் 4,500 மீட்டர் உயரத்தில் பரந்துவிரிந்து திகழும் பீடபூமிப் பகுதியில் தாமோதர் குண்டம் அமைந்துள்ளது. மஸ்டாங் நகரிலிருந்து இரண்டுமூன்று நாட்கள் நடைபயணமாகச் சென்று பக்தர்கள் இந்த சக்திபீடத்தை தரிசித்து வருவார்கள்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism