Published:Updated:

மூலிகை லிங்க தரிசனம்!

மூலிகை லிங்கம்

2017-ல் தர்ப்பை லிங்கமும், 2018-ல் ருத்ராட்ச லிங்கமும் எழுந்தருளச் செய்யப்பட்டன.

மூலிகை லிங்க தரிசனம்!

2017-ல் தர்ப்பை லிங்கமும், 2018-ல் ருத்ராட்ச லிங்கமும் எழுந்தருளச் செய்யப்பட்டன.

Published:Updated:
மூலிகை லிங்கம்

ரணாகதி தத்துவத்தை சகலருக்கும் உணர்த்திய தலம் திருவண்ணாமலை. பூவுலகில் முதன்முதலாக லிங்க வடிவில் குடிகொண்ட தலமும் திருவண்ணாமலையே.

கார்த்திகை தீபத்திருநாளில்தான் ஈசன் திருவண்ணாமலையில் ஜோதி வடிவாகத் தோன்றி லிங்கோத்பவ மூர்த்தியாக எழுந்தருளி னார். லிங்கோத்பவம் என்றால் ‘லிங்கம் தோன்றுதல்’ என்று பொருள். அவ்வாறு அவர் லிங்கமூர்த்தம்மாய் தோன்றிய இடத்திலேயே, தோன்றிய திருநாளிலேயே... க்ஷணிக லிங்கங்களை எழுந்தருளச் செய்து, பக்தர்களைப் பரவசப்படுத்தி வருகிறது சக்தி விகடன்.

மூலிகை லிங்க தரிசனம்
மூலிகை லிங்க தரிசனம்

2017-ல் தர்ப்பை லிங்கமும், 2018-ல் ருத்ராட்ச லிங்கமும் எழுந்தருளச் செய்யப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவ்வகையில் இந்த ஆண்டு, காளீஸ்வரி தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனம் மற்றும் பெஸ்ட்லின் நிறுவனத்தாருடன் இணைந்து, சக்தி விகடன் சார்பில் பிரமாண்ட மூலிகை லிங்க தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. கடந்த 9-ம் தேதி காலையில் திருவண்ணாமலை ஈசான்ய லிங்கத்துக்கு எதிரே அமைந்துள்ள அம்மணி அம்மன் கோயிலில் 108 மூலிகைகளால் அமைக்கப்பட்ட மூலிகை லிங்கம் எழுந்தருளியது.

மூலிகை லிங்க தரிசனம்
மூலிகை லிங்க தரிசனம்

மஞ்சள், தேவதாரு, அகில், குங்கிலியம், கற்பூரம், குங்குமப்பூ, வெற்றிலை, வேம்பு, வில்வம், வல்லாரை, வகுளம், வெட்டுக்காயப் பூண்டு, வெள்ளெருக்கு, கோவைக்கொடி, கொழுஞ்சி, கொத்தமல்லி, குன்றுமணி, குப்பைமேனி, கீழாநெல்லி, நெல்லிமுள்ளி, காட்டு எலுமிச்சை, கிச்சிலி, கண்டங்கத்திரி, கறிவேப்பிலை, அருநெல்லி, கற்பூரவள்ளி, கருநொச்சி, கற்றாழை, கருவேலம்... ஆகிய மூலிகைகள் உள்பட 108 மூலிகைகளை அரைத்து தேனும் கருப்பட்டிப் பாகு கலவை சேர்த்து, ஆகம முறைப்படி இந்த லிங்கத்தைத் தயார் செய்திருந்தார்கள், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவனடியார் குழுவினர்.

20 நாள்கள் 15 பேர் கொண்ட குழு உருவாக்கிய இந்த அழகிய லிங்கம் தாமரை மாலை, மஞ்சள் மாலை, வெட்டிவேர் மாலை, பிரண்டை மாலை என்று மூலிகை ளாலேயே அலங்கரிக்கப்பட்டும் இருந்தது, விசேஷம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிசம்பர் 9, 10, 11 ஆகிய மூன்று நாள்களில் இந்த அபூர்வ லிங்கத்தை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தார்கள். லிங்கம் அமைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றிலும் (சுமார் 200 அடி சுற்றளவுக்கு) மூலிகை மணம் கமழ்ந்தவண்ணம் இருந்தது.

மூலிகை லிங்க தரிசனம்
மூலிகை லிங்க தரிசனம்

அரிய மூலிகைகளின் கலவை என்பதால் இந்த லிங்க வாசனையே பல நோய்களைத் தீர்க்கும் தன்மை கொண்டது; இந்த மூலிகையை தரிசித்தால் சகல வியாதி களிலிருந்தும் விடுபடலாம் என்பதை அறிந்த பக்தர்கள் மிகுந்த சிலிர்ப்போடும் பரவசத்தோடும் மூலிகை லிங்கத்தை தரிசித்து ஆரத்தி காட்டி வணங்கிச் சென்றார்கள்.

சில சாதுக்கள் ‘இந்தியாவெங்கும் சுற்றியிருக்கிறோம். இதுபோன்ற பிரமாண்ட மூலிகை லிங்கத்தை எங்குமே கண்டதில்லை; இது நல்ல முயற்சி... வாழ்க” என்று வாழ்த்தினார்கள். பக்தர்களில் பலர், “14 கி.மீ கிரிவலம் நடந்து வந்த களைப்பை இந்த மூலிகை லிங்கத்தின் மணம் நீக்கிவிட்டது. சக்தி விகடன் எப்போதுமே புதிய முயற்சிகளையும் புண்ணிய காரியங்களையும் செய்யும் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்” என்று பாராட்டினார்கள்.

மூலிகை லிங்கம்
மூலிகை லிங்கம்

அம்மணி அம்மன் ஆலய நிர்வாகிகள் நல்ல ஒத்துழைப்பு அளித்து உதவினார்கள். மூன்று நாள்களும் இடைவிடாது அன்னதானமும் பிரசாதமும் வழங்கியபடியே இருந்தார்கள்.

மூலிகை லிங்க தரிசனம்
மூலிகை லிங்க தரிசனம்

மகாதீபத் திருநாளில் மூலிகை லிங்கத்தின் அருகேயே அமர்ந்து திரளான மக்கள் மகா தீபத்தை தரிசித்தார்கள். அதுமட்டுமா அந்தப் புண்ணிய தருணத்தில் சிவனடியார்களின் தேவார, திருவாசக முற்றோதலும் கயிலாய வாத்திய ஓசைகளும் இணைந்து அந்த இடத்தையே கயிலையாக்கிவிட்டன என்றே சொல்லலாம். மகா தீபத்தோடு நம் மூலிகை லிங்கத்தை தரிசித்து மகிழ்ந்த நம் வாசகர்கள், அடுத்த ஆண்டு எழுந்தருளப் போவது என்ன வகை லிங்கம் என்பதை அறிவதிலும் ஆர்வம் காட்டினார்கள். ‘புஷ்ப லிங்கம்’ என்றதும் பெரிதும் மகிழ்ச்சி ஆரவாரம் அவர்களிடம். அவர்களின் மகிழ்ச்சிதானே நம் மகிழ்ச்சியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism