Published:Updated:

மதுரையின் காவல் தெய்வங்கள்: மதுரை வீரன், ஒச்சாண்டம்மன் முதல் ஆனையூர் வரை - இவை நம் மண்ணின் சாமிகள்!

கருமாத்தூர் மூனுசாமிகள்

மண்ணின் சாமிகள்: 3,000 வருடங்களுக்கு மேலாய் நகரமாய் இயங்கும் மதுரையை மையமாய்க் கொண்டு அதன் பண்பாட்டுச் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியம்.

மதுரையின் காவல் தெய்வங்கள்: மதுரை வீரன், ஒச்சாண்டம்மன் முதல் ஆனையூர் வரை - இவை நம் மண்ணின் சாமிகள்!

மண்ணின் சாமிகள்: 3,000 வருடங்களுக்கு மேலாய் நகரமாய் இயங்கும் மதுரையை மையமாய்க் கொண்டு அதன் பண்பாட்டுச் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியம்.

Published:Updated:
கருமாத்தூர் மூனுசாமிகள்
மதுரை நகரம் இன்று வானளாவிய உயர்ந்த கட்டடங்கள் நிறைந்த, நாகரிக நகராய்க் காணப்பட்டாலும். உள்ளூர அதன் குருதியோட்டமாக இருப்பது அதன் கிராமியப் பண்பாடுதான். மதுரையைப் போல வேறு எந்த நகருக்கும் இலக்கியச் சிறப்பும் மொழிச் சிறப்பும் கிடையாது. தாய்மொழிக்காகவும் இலக்கிய வளர்ச்சிக்காகவும் மதுரை மாதிரி எங்கும் தமிழ்ச் சங்கங்கள் இருந்ததில்லை.
மதுரை வரலாறு
மதுரை வரலாறு

3,000 வருடங்களுக்கு மேலாய் நகரமாய் இயங்கும் மதுரையை மையமாய்க் கொண்டு அதன் பண்பாட்டுச் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியம். அதற்காகவே மதுரையின் பெருமைகளை, அதன் பழைமையான அடையாளங்களை, மண்ணின் சாமிகளை இனம் கண்டு கொள்ள ஆற்றுப்படைக் குழு என்னும் அமைப்பு வரும் ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில் மதுரை மரபு நடைப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் எங்கே செல்கிறார்கள், அங்கு என்னென்ன விசேஷங்கள் என்பதைக் காண்போம்.

1. கீழக்குயில்குடி:

மதுரையைச் சுற்றி எட்டு பெருமலைகள் இருந்ததை இலக்கியங்கள் காட்சிப்படுத்துகிறது. அதில் ஒன்று கீழக்குயில்குடி. மதுரையிலிருந்து நாகமலை, புதுக்கோட்டை செல்லும் வழியில் கீழக்குயில்குடி உள்ளது. இங்குள்ள பேச்சிப்பள்ளம் பெரிய சுனை, 8 சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள், பாகுபலி தன் சகோதரிகள் பிராமி, சுந்தரி ஆகிய இருவருடன் நிற்கும் சிற்பங்கள் அற்புதமானவை.

2. கோச்சடை முத்தையா:

மதுரை மாநகரின் நான்கு திசை காவல் தெய்வங்களில் ஒருவர் மதுரை மேற்கே உள்ள கோச்சடை முத்தையா. மதுரையின் மேற்கே உள்ள கோச்சடை, இங்கே உள்ள கோயில் வில்லாயுதமுடைய அய்யனார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மூலவராக அய்யனார் இருந்தாலும் பிரதான தெய்வங்களாக முத்தையா சுவாமியும் கருப்பையா சுவாமியுமே வணங்கப்படுகிறார்கள். புதிதாக வாகனங்கள் வாங்குபவர்கள், வீடு கட்டுபவர்கள் இங்கே சாவிகளை வைத்து வழிபடுவதும், திருமணச் சடங்கு செய்வதும் நிகழ்கின்றன. பெரும்பாலான மதுரை மக்கள் இங்கு பூப்போட்டுப் பார்த்துதான் எந்தச் செயலையும் முடிவு செய்கின்றனர் என்பதும் விசேஷம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாண்டி முனீஸ்வரர்
பாண்டி முனீஸ்வரர்

3. பாண்டி முனீஸ்வரர்:

மதுரை மக்களின் காவல் தெய்வம் பாண்டி முனீஸ்வரர், கோவலனை சரியாய் விசாரிக்காமல் கொன்ற மன்னனான பாண்டியன் நெடுஞ்செழியனின் மறு பிறப்பே, இப்பாண்டி முனிஸ்வரர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு வந்து தொட்டில் கட்டிச் செல்கின்றார்கள்.

4. பதினெட்டாம்படி கருப்பணசாமி

மதுரை அழகர் கோயில் வாசல் அருகே பதினெட்டு படிகளின்மேலே, கருப்பணசாமி உறைவதாய் மதுரை மக்கள் நம்புகிறார்கள், எனவே அவர் 'பதினெட்டாம்படி கருப்பணசாமி' என அழைக்கப்படுகிறார்.

அழகர்மலையானின் அருளைக் கவர்ந்து செல்ல வந்த மாந்திரீகர்களில் ஒருவரே கருப்பணசாமி என்றும் அவரே அழகரைக் காத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

பதினெட்டாம்படி கருப்பணசாமி
பதினெட்டாம்படி கருப்பணசாமி

5. மதுரை வீரன்:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்குகோபுரத்தின் அருகே மதுரைவீரனுக்கென தனிசந்நிதி உள்ளது. தமிழகமெங்கும் வழிபாட்டிலுள்ள மதுரை வீரன் சுவாமியின் மூலக்கோயில் இதுவேயாகும். காதலுக்கும் வீரத்துக்கும் அடையாளமாக விளங்கிய மதுரை வீரனின் தியாகத்தை நினைவு கூறும் மதுரையின் அழுத்தமான அடையலாம் இந்தக் கோயில்.

6. வண்டியூர் மாரியம்மன்:

மதுரைக்குக் கிழக்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது இக்கோயில். மதுரையின் காவல் தெய்வம் இவள். இவளுக்கு முதல் பூஜை செய்தபிறகே மதுரையில் எந்த விழாவும் நடைபெறும் என்பது விசேஷம். இங்கு ஓடும் தெப்பம் மதுரை வட்டாரத்திலேயே மிகப்பெரிய தெப்பம் என்ற பெருமை கொண்டது. இந்த ஆலயத்தின் அமைப்பு, விசேஷம் யாவும் பிரமிப்பானது.

7. கிண்ணிமங்கலம்:

மதுரை செக்கானூரணி அருகிலுள்ள கிண்ணிமங்கலம் ஊரில் உள்ள ஏகநாதன் மடத்தில் தமிழ் பிராமி மற்றும் வட்டெழுத்து கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இக்கல்வெட்டு சுமார் 2200 ஆண்டுகள் பழைமையானது. அவ்வளவு வருடங்களுக்கு முன்பாகவே இங்கு கோயில் இருந்து, இன்றுவரை அது தொடர்ந்து இயங்கி வருவது வியப்பான விஷயம் இல்லையா!

8. பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில்:

மதுரை உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி என்ற ஊரைச் சேர்ந்த ஆண்டாயி என்ற பெண், தவற்றைத் தட்டிக் கேட்டு, ஆவேசத்தால் தெய்வமாகிப் போன கதையைக் கூறும் ஆலயம் இது.

9. ஆனையூர்:

மதுரை - தேனி சாலையில் உசிலம்பட்டிக்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரிலுள்ள சிவன் ஐராவதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுகள் சிறப்பானவை, அதில் சோழன் தலை கொண்ட வீரபாண்டியனின் கல்வெட்டு பல அரிய தகவல்களைக் கூறுகிறது.

கருமாத்தூர் மூனுசாமிகள்
கருமாத்தூர் மூனுசாமிகள்

10. கருமாத்தூர் மூனுசாமிகள்:

மதுரையிலிருந்து உசிலம்பட்டி செல்லும் சாலையில், கருமாத்தூர் உள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் தெய்வங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணுவுடன் இணைக்கப்பட்டு மூனுசாமிகளாக வணங்கப்படுகின்றனர். இந்த ஆலயத்தில் மதுரையின் வரலாறும் அதிசயிக்கத்தக்க புராண தகவல்களும் பல உண்டு!

11. மாலைக்காடு:

மதுரை உசிலம்பட்டி வட்டத்திலுள்ள பகுதி மாலைக்காடு, இங்கு நாயக்கர் கால அரிதான இரு நடுகற்கள் காணப்படுகின்றன. அதில் விற்போர் நடந்த சிற்பமும், காளையை அடக்கி வீழ்த்தும் சிற்பமும், காளையை அடக்கியதால் மணமுடிக்கும் வீரன் சிற்பமும் உள்ளன.

மாலைக்காடு
மாலைக்காடு

12. கொங்கப்பட்டி தமிழி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள ஊர் கொங்கப்பட்டி. இங்கே 2000 வருட முந்தைய தமிழிகல்வெட்டு உள்ளது.

இக்கல்லை வெட்டியவர் பெயர் பேரார் பத்தன் பராபன் தத்தந்தை, இளங்கண்ணன் என்பவர் நினைவால் எடுக்கப்பட்ட நடுகல்லாய் இது கருதப்படுகிறது.

வடக்கம்பட்டி முனியாண்டி
வடக்கம்பட்டி முனியாண்டி

13. வடக்கம்பட்டி முனியாண்டி:

மதுரை, திருமங்கலம் தாண்டி 14 கி.மீ தொலைவில் உள்ள ஊர் வடக்கம்பட்டி. இந்தக் கிராமத்தில் திறந்த வெளியில் காட்சியளிக்கிறார் முனியாண்டி. இவ்வூரில் இருந்து கிளம்பிச் சென்றவர்கள், நாடு எங்கும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களைத் திறந்தனர். அது ஏன்? முனி செய்த அற்புதங்கள் என்ன?

இதுபோன்ற மதுரையைப் பற்றிய பல சுவாரஸ்யத் தகவல்களையும் இடங்களையும் வரும் ஜூன் 18, 19 நாள்களில் அறிமுகப்படுத்த உள்ளது ஆற்றுப்படைக் குழுவின் `மதுரை பண்பாட்டுச் சுற்றுலா'!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism