Published:Updated:

எளிய முறையில் அழகு பிள்ளையார்! - வீட்டிலேயே செய்யலாம் விநாயகர்

வீட்டிலேயே  செய்யலாம் விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டிலேயே செய்யலாம் விநாயகர்

ஜோசப் பிரமோத்

`பிடித்து வைத்தால் பிள்ளையார்' என்பார்கள் பெரியோர்கள். ஆம், மனம் நிறைந்த பக்தியோடு வெல்லத்திலோ, மஞ்சளிலோ பிடித்துவைத்தால் போதும், அவற்றில் சாந்நித்தியத்துடன் எழுந்தருளி விடுவார் பிள்ளையார்.

எளிய முறையில் அழகு பிள்ளையார்! - வீட்டிலேயே  செய்யலாம் விநாயகர்

அதுமட்டுமா? விரிவான வழிபாடுகள் என்றில்லை, எளிய பொருள்களைப் படைத்து, கிடைக்கும் மலர் களைச் சமர்ப்பித்து வழிபட்டாலே வரம்வாரி வழங்குவார் அந்த ஆனைமுகன். எனினும் பேழை வயிறும் வேழமுகமும் கூடிய பிள்ளையாரின் திருவுருவை தரிசிப்பதிலும் வணங்குவதிலும் பூரணத் திருப்தி கொள்ளும் நம் உள்ளம்!

இதோ... தற்போதைய சூழலில், வெளியில் சென்று விநாயகர் சிலைகளை வாங்கி வருவதற்குச் சிரமப்படாமல், வீட்டிலேயே இயற்கை மாவினால் பிள்ளையாரின் திருவடிவத்தைச் செய்து வழிபட, எளிய வழிமுறை உங்களுக்காக...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
எளிய முறையில் அழகு பிள்ளையார்! - வீட்டிலேயே  செய்யலாம் விநாயகர்

தேவையான பொருள்கள்:

  • சோள மாவு - 2 கப்

  • உப்பு -1 கப்

  • சுடு நீர் - 1 கப்

  • தேங்காய் எண்ணெய் (அ) சமையல் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்

  • வினிகர் - 1 டீஸ்பூன் (விரும்பினால்)

  • செய்தித் தாள் - 1

  • வண்ணப்பூச்சுகள் / நீர் வண்ணங்கள் -1 பாக்ஸ்

  • வட்ட முனை ஓவிய தூரிகைகள் - எண் 5, எண் 2, எண் 1

  • பேனா ரீஃபில் / டூத்பிக்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எளிய முறையில் அழகு பிள்ளையார்! - வீட்டிலேயே  செய்யலாம் விநாயகர்

செயல்முறை:

படி 1: ஒரு பாத்திரத்தில் சோள மாவு, உப்பு, சூடான நீரை ஒன்றாகக் கலந்து சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் சேர்த்து மாவை சீராகக் கலந்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு எடுத்து வைக்கவும். இந்தக் கலவையைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்க விரும்பினால், சிறிது வினிகரைச் சேர்க்கலாம்.

எளிய முறையில் அழகு பிள்ளையார்! - வீட்டிலேயே  செய்யலாம் விநாயகர்

படி 2 : இந்தக் கலவையை ஒரு ஜிப்லாக் பையில் வைத்து ஓர் இரவு ஊற வைக்கவும்.

எளிய முறையில் அழகு பிள்ளையார்! - வீட்டிலேயே  செய்யலாம் விநாயகர்

படி: 3 : அடுத்த நாள் தயாரிக்கப்பட்ட மாவை எடுத்து மீண்டும் சிறிது எண்ணெயுடன் பிசைந்து மென்மையாக்கவும்.

எளிய முறையில் அழகு பிள்ளையார்! - வீட்டிலேயே  செய்யலாம் விநாயகர்

படி: 4 :

விநாயகப்பெருமானை வயிற்றில் இருந்து செய்யத் தொடங்குங்கள். சிறிய செய்தித்தாள் காகிதத்தில் வைத்து எலுமிச்சை அளவிலான மாவு பந்தை வைத்து வயிற்றுப் பகுதியை செய்யலாம்.

எளிய முறையில் அழகு பிள்ளையார்! - வீட்டிலேயே  செய்யலாம் விநாயகர்

படி: 5 : அடுத்து, மாவை இரண்டு சிறிய அளவில் எடுத்து கால்களை உருவாக்கலாம். டூத் பிக் போன்ற கருவிகளை வைத்து கால் விரல்கள், நகங்கள் போன்ற வடிவங்களை அழுத்தி செய்யவும்.

எளிய முறையில் அழகு பிள்ளையார்! - வீட்டிலேயே  செய்யலாம் விநாயகர்

படி: 6 : கால்களை உருவாக்கியது போலவே இரண்டு கைகளையும் உருவாக்குங்கள். வலது கை ஆசி வழங்குவதைப் போலவும், இடது கை மோதகம் தாங்கியவாறும் இருக்கட்டும்.

எளிய முறையில் அழகு பிள்ளையார்! - வீட்டிலேயே  செய்யலாம் விநாயகர்

படி: 7 : வயிற்றை உருவாக்கியது போலவே நெல்லிக்காய் அளவு உருண்டை மாவு எடுத்து தலையை உருவாக்கவும். அதில் உள்ள உறுப்புகளை அழுத்தி உருவாக்கலாம்.

எளிய முறையில் அழகு பிள்ளையார்! - வீட்டிலேயே  செய்யலாம் விநாயகர்

படி: 8 : காதுகளை உருவாக்கி அதனுடன் இணைத்து கிரீடமும் உருவாக்கவும்.

எளிய முறையில் அழகு பிள்ளையார்! - வீட்டிலேயே  செய்யலாம் விநாயகர்

படி: 9 : கிரீடத்தில் அழகிய வேலைப்பாடுகள் உருவாக்க ஒரு டூத் பிக் அல்லது பழைய பேனா நுனியைப் பயன்படுத்தவும். ஆபரணங்கள் போல அழுத்தப்பட்ட இடங்களில் வண்ண கற்கள், சமிக்கி, ஜொலிக்கும் வண்ண தூள்கள் கொண்டு நிரப்பி அழகு செய்யலாம்.

எளிய முறையில் அழகு பிள்ளையார்! - வீட்டிலேயே  செய்யலாம் விநாயகர்

படி: 10 : பொருத்தமான வண்ணங்களில் விநாயகப்பெருமானுக்கு உடல், முகம், கேசம் ஆகிய இடங்களில் பெயின்ட் செய்து உலர விடவும்.

எளிய முறையில் அழகு பிள்ளையார்! - வீட்டிலேயே  செய்யலாம் விநாயகர்

படி: 11 : உலர்ந்த அழகான உங்கள் விநாயகப்பெருமானை மலர்கள், குடைகள் போன்றவற்றால் மீண்டும் அலங்கரித்து பூஜைக்கு வைக்கலாம். எளிய வழியில் இதோ விநாயகப்பெருமான் ஜம்மென்று உங்கள் வீட்டு பூஜையறையில் அமர்ந்துவிட்டார் பாருங்கள்.

`அல்லல்போம், வல்வினைபோம்,

அன்னைவயிற்றில் பிறந்த

தொல்லைபோம், போகாத் துயரம்போம்,

ஆனைமுகனைத் தொழுதக்கால்!'