Published:Updated:

விநாயகர் சதுர்த்தி: எகிப்து, காபூல், சீனா - உமை மைந்தனை உலகெங்கும் எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள்?

விநாயகர் கோயில்கள் மட்டுமல்ல, உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடும் பிரசித்தமாகக் கொண்டாடப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகெங்கும் வணங்கப்படும் கடவுளாக கணபதி எப்போதும் இருந்து வந்திருக்கிறார் என்கிறது வரலாறு. நேபாளம், பர்மா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜாவா, சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, சீனா, மியான்மர், மங்கோலியா, வியட்நாம், ஜப்பான், கொரியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா இந்தியர்கள் வசிக்கும் எல்லா நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் கணபதி. இப்போது மட்டுமல்ல, கிரேக்கர்களும் ரோமானியர்களும் புகழ் பெற்றிருந்த வரலாற்று காலத்திலேயே யானை தலை வடிவம் கொண்ட கடவுள் வழிபாடு அவர்களிடம் இருந்து வந்துள்ளது.

விநாயகர் வழிபாடு
விநாயகர் வழிபாடு

மாமன்னர் குப்தர் காலத்தில் சீனாவிலிருந்து வருகை புரிந்த பாஹியான் வழியாக விநாயகர் வழிபாடு சீனாவுக்கும் பரவியது என்கிறார்கள். எந்திர வடிவில் வழிபடும் விநாயகர் மூர்த்தத்தை குவன் ஹீபியின் என்கிறார்கள். சீனாவின் தென் மலை சரிவுகளில் விநாயகர் வடிவம் காணப்படுகின்றன. துன்ஹவாங், குங்க்சியான் போன்ற இடங்களில் உள்ள குடவரை கோயில்களில் விநாயகர் உருவங்கள் உள்ளன. சீனாவைப் போலவே ஜப்பானிலும் விநாயகர் வழிபாடு உள்ளது.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி

சீனா வழியே விநாயகர் வழிபாடு ஜப்பானுக்குச் சென்றது என்கிறது வரலாறு. கோல்சோ டைஷி என்பவர் சீனாவிலிருந்து ஜப்பானுக்கு விநாயகர் மூர்த்தத்தைக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. 'கான்கிட்டன், ஹாயக்ஷட' என்ற பல பெயர்களில் கணபதி அங்கு வழிபடப்படுகிறார். டுன் ஹவாங், குன்ஹசீன் நகரங்களில் உள்ள விநாயகர் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டவராம். 6-ம் நூற்றாண்டிலேயே விநாயகர் வழிபாடு சீனாவில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: விநாயகப்பெருமானின் அறுபடை வீடுகள் எவை தெரியுமா?

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள கோயிலில், கையில் எழுத்தாணியுடன் உள்ள 5-ம் நூற்றாண்டு விநாயகர் காட்சி தருகிறார். நான்முக விநாயகர் வடிவமும் அங்குள்ளது. இலங்கையின் கச்சாரி - நல்லூர் சாலையில் உள்ள ஜாப்னா கற்பக விநாயகர் ஆலயம் பிரசித்தமானது. மஹாயான பௌத்தத்தின் வழியே விநாயகர் வழிபாடு தெற்காசியா முழுவதும் பரவியது. ஜப்பானில் முள்ளங்கியை வைத்திருக்கும் கணபதி விசேஷமானவர். இவர் காங்கிட்டன் என்ற பெயரால் வழிபடப்படுகிறார்.

கணபதி
கணபதி

கம்போடியாவில் மூன்று கண்கள், ஒற்றைக்கொம்பு, கமண்டலம் என அதிசய வடிவில் 'பிராசுஷேஸ்' என்ற பெயரில் கணபதி அருள்கிறார். எகிப்தில் கணபதி கையில், சாவி வைத்திருக்கிறார். ரோமாபுரியின் ஜேன்ஸ் கடவுள் யானை முகத்துடன் கையில் சாவியுடன் காட்சி தருகிறார். அமெரிக்கா, கோலோராடோ நகரில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில், வாஷிங்டன் முருகன் கோயில், லிவர்மோரின் சிவ விஷ்ணு ஆலயம் உள்ளிட்ட பல இடங்களில் விநாயகர் சந்நிதிகள் உள்ளன. சிங்கப்பூர் ஸ்ரீ லயன் சித்தி விநாயகர், செண்பக விநாயகர் கோயில்கள் அங்கு வெகு பிரசித்தம். மலேசியாவிலும் மகாமாரியம்மன் ஆலயம் உள்ளிட்ட பல கோயில்களில் விநாயகர் வீற்றிருக்கிறார்.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி

ஆஸ்திரேலியாவில், விக்டோரியா மாநிலத்தில் வக்ரதுண்ட விநாயகர் கோயிலும், சித்திவிநாயகர் கோயிலும், குயீன்ஸ்லாந்தில் செல்வவிநாயகர் கோயிலும், தெற்கு ஆஸ்திரேலியாவில் கணேசர் கோயிலும் அங்கு பிரசித்தம். ஆஸ்திரிலேயாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கற்பக விநாயகர் ஆலயம் ஒன்றும் பிரமாண்டமாக எழுப்பப்பட்டுள்ளது. போட்ஸ்வானா நாட்டின் கபரோனில் சிவன் ஆலயத்தில் கணபதியும் அருளுகிறார்.

விநாயகர் சதுர்த்தி: பேதமே இல்லாத பெருங்கடவுளின் வலது தந்தம் உடைந்தது எப்படி? பிள்ளையார் பெருமைகள்!
விநாயகர்
விநாயகர்

ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்கு அருகேயுள்ள ஸகர்தார் என்னும் ஊரில் பல சிற்பங்கள் கண்டறியப்பட்டன. அதில் விநாயகர் சிலையும் கிடைத்தது. அந்தச் சிலையின் வடிவமும் தொன்மையும் கண்டு அது குஷானர்களுக்கும், குப்தர்களுக்கும் இடைப்பட்ட 4-ம் நூற்றாண்டில் செய்யப்பட்டது என்கிறார்கள். இப்போது இந்த விநாயகர் சிலையை காபூல் நகரிலுள்ள நரஸிங்கத்வாலி என்ற வணிக வளாகத்தில் வைத்து வணங்கி வருகிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் கோயில்கள் மட்டுமல்ல, உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடும் பிரசித்தமாகக் கொண்டாடப்படுகிறது. எளிமையான, எளியோர்களின் கடவுளான கணபதியை எல்லோரும் கொண்டாடுவது இயல்புதானே! சரணம் கணேசா! சரணம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு