Published:Updated:

குரு சந்திர யோகம்... சனிதோஷம் நீக்கும் ஜேஷ்டாதேவி வழிபாடு... வீட்டில் செய்யலாமா?

சனிபகவான்
சனிபகவான்

குரு சந்திர யோகம்... சனிதோஷம் நீக்கும் ஜேஷ்டாதேவி வழிபாடு வீட்டில் செய்யலாமா? - அதிகாலை சுபவேளை

திருநள்ளாற்றில் இருக்கும் கோயிலில் அருளும் இறைவனுக்கு தர்பாரண்யேஸ்வரர் என்பது திருநாமம். அந்தக் கோயிலில் ஒரு சந்நிதியில் சனிபகவான் அருள்பாலிக்கிறார். ஆனால் பலரும் அந்தக் கோயிலைக் குறிப்பிடும்போது சனிகோயில் என்றே சொல்கிறார்கள். இன்னும் சிலரோ அங்கு சென்று சிவன் சந்நிதியை தரிசனம் செய்யாமல் சனி சந்நிதிக்கு மட்டும் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்துவிடுவார்கள். இது மிகவும் தவறு. காரணம் சனிபகவான் சிவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டவர். சிவனின் பக்தர்களைக் கண்டு அஞ்சி நடுங்குபவர். சிவனின் ஆகச்சிறந்த பக்தனாக விளங்கிய ராவணனிடம் நவகிரகங்கும் அடங்கிக் கிடந்தன.

இலங்கையை ஆண்ட ராவணன் நவகிரகங்களை படிகளாக்கி தன்னுடைய அரண்மனையில் கொலு மண்டபத்தில் வைத்திருந்தான். தினமும் அப் படிகளை மிதித்துச் சென்றே தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். பூஜைகளால் மிகுந்த தபோபலனை ராவணன் பெற்றிருந்ததால் அந்த நவகிரக தேவதைகள் அவனை எதிர்க்க முடியாமல் செயலற்று இருந்தன. ஒரு முறை நாரத மகரிஷி இலங்கைக்கு வான மார்கமாக வந்தபோது சனீஸ்வர பகவான் அவரிடம் தான் அடைந்த வேதனையையும் மற்ற நவகிரக தேவதைகளின் அவல நிலையையும் எடுத்துரைத்து விமோசனம் வேண்டினார்.

ராவணன்
ராவணன்

நாரத மகரிஷியும் சனீஸ்வர பகவானிடம், ”கவலைப்படாதே. என்னதான் ஒருவன் தவம் இயற்றி சிவபெருமானிடம் இருந்து வரங்களைப் பெற்றாலும் அவற்றை தவறாகப் பயன்படுத்தினால் நிச்சயம் அவன் அழிந்து போவான். இது இறை தர்மம். ராவணன் அழியும் காலம் நெருங்கி விட்டது. நான் கூறும் சரியான நேரத்தில் நீ ராவணனுடைய மாரக ஸ்தானத்தைப் பார்த்து விடு. அவன் கதை முடிந்து விடும்”, என்று ஆறுதல் வார்த்தைகள் அளித்தார். நாரதர் அருளியபடியே சனீஸ்வர பகவான் உச்சம் பெற்று ராவணனைப் பார்க்க அது முதல் அவன் அழியும் காலமும் ஆரம்பாகி விட்டது.

ஆனால், சனீஸ்வரனின் பார்வை தன் மேல் விழுந்ததை ராவணன் தன்னுடைய தபோபலத்தால் உணர்ந்து விட்டான். மறு கணமே தன்னுடைய கதையால் சனீஸ்வர பகவானைத் தாக்க அவர் மேல் பாயவே சனீஸ்வர பகவான் அங்கிருந்து தப்பித்து வான மார்கமாக பல லோகங்களுக்கும் விரைந்து சென்றார்.

எல்லா லோகங்களுக்கும் ராவணன் சனீஸ்வர பகவானைத் துரத்திக் கொண்டு வரவே எங்கும் புகலிடம் இன்றி சனீஸ்வர பகவான் தவித்தார். அந்நிலையில் மீண்டும் நாரதர் எதிர்ப்படவே அவரிடம் தன்னுடைய இக்கட்டான நிலையைக் கூறி ராவணனின் கதாயுத தாக்குதலிலிருந்து தப்பிக்கும் உபாயத்தைக் கேட்டார். நாரத ரிஷியும்,

“ராவணன் தேவ லோகத்தையே வென்று வெற்றிக் கொடி நாட்டியவன். எந்த லோகம் சென்றாலும் அவனிடமிருந்து தப்பிக்க முடியாது. இதற்கு ஒரே ஒரு வழி பூலோகத்தில் அசுர சக்திகள் நெருங்க முடியாத திருத்தலத்தில் நீ புகலிடம் கொள்ள வேண்டும்.

ஜேஷ்டாதேவி
ஜேஷ்டாதேவி

திருச்சிரபுர திருவானைக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீஜேஷ்டாதேவியிடம் நீ அடைக்கலம் கொள். அது ஒன்றுதான் ராவணனிடமிருந்து தப்பிக்கும் உபாயம்,” என்று கூறி சனீஸ்வர பகவானுக்கு நல்வழி காட்டினார் தேவ ரிஷி. நாரதர் அருளிய வண்ணம் சனீஸ்வர பகவான் ஜேஷ்டா தேவியிடம் தஞ்சம் புகுந்தார். திருவானைக்கோவிலை அடைந்த ராவணன் தன்னுடைய இயலாமையை உணர்ந்து அவ்விடத்தை விட்டு அகன்றான்.

உலகமே அஞ்சும் சனி ராவணனுக்கு அஞ்சினான். மூவுலகையும் ஆண்ட ராவணன் ஜேஷ்டாதேவிக்கு அஞ்சி விலகினான். அப்படிப்பட்ட ஜேஷ்டாதேவி சந்நிதியின் சிறப்புகள் என்ன? அவளை வழிபடத் தேவையான குரு சந்திர யோகம் அடைவது எப்படி? இதுகுறித்த தகவல்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு