ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

கார்த்திகை பொரி உருண்டை

கார்த்திகைப் பொரி உருண்டை
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்திகைப் பொரி உருண்டை

விநாயகர் சதுர்த்திக்குக் கொழுக்கட்டை, மகர சங்கராந்திக்குச் சர்க்கரைப் பொங்கல், நவராத் திரிக்குச் சுண்டல் என்பதுபோல திருக்கார்த்திகை திருநாளில் பொரி உருண்டை விசேஷம்!

நம் மரபில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விசேஷமான உணவு சமைத்து இறைவனுக்கு நிவேதிப்பது நம் மரபு.

விநாயகர் சதுர்த்திக்குக் கொழுக்கட்டை, மகர சங்கராந்திக்குச் சர்க்கரைப் பொங்கல், நவராத் திரிக்குச் சுண்டல் என்பதுபோல திருக்கார்த்திகை திருநாளில் பொரி உருண்டை விசேஷம்!

தூய்மையுடைய நெற்பொரியும், தன்னலமற்ற வள்ளல் தன்மையையுடைய தெங்கையும், அன்பிற்கு அறிகுறியாம் தித்திப்புத் தன்மையையு டைய வெல்லத்தையும் கலந்து பொரி உருண்டை யாகச் செய்து, திருக்கார்த்திகை தீபத்தன்று இறைவனுக்கு நிவேதனம் செய்யவேண்டும் என்று சொல்கிறது மயூரக்ஷேத்திர புராணம். இவற்றில் தெங்கு என்றால் தேங்காய்.

அற்புதமான இந்த நிவேதனத்தை-நெல் பொரி உருண்டையைச் செய்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோமா?

கார்த்திகை பொரி உருண்டை
கார்த்திகை பொரி உருண்டை

தேவையான பொருள்கள் நெல் பொரி, வெல்லம், தண்ணீர், நெய், பல் பல்லாகக் கீறிய தேங்காய் சிறிதளவு. (அரை கிலோ பொரிக்கு, கால் கிலோ வெல்லம் என்பது கணக்கு).

செய்முறை: வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைத்துக் கொள்ளவும். பின்பு அதை இறக்கி வடிகட்டிச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். கரைத்த வெல்லத்தைப் பாகு பதத்திற்குக் காய்ச்சவும். பாகு தயாரான தும் அதைப் பொரியில் கொட்டி, தேங்காய்த் துண்டு களையும் சேர்த்துக் கிளறவேண்டும். பின்பு கைகளில் நெய் தடவிக்கொண்டு சூடு ஆறும் மு1ன்பாக உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு: நெல் பொரி போலவே, அரிசிப் பொரி, அவல் பொரியிலும் செய்யலாம்.