Published:Updated:

`மயூரக்ஷேத்திர புராணம் சொல்லும் நைவேத்தியம்!’- திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை செய்வது எப்படி?

கார்த்திகைப் பொரி உருண்டை
கார்த்திகைப் பொரி உருண்டை

விநாயகர் சதுர்த்திக்குக் கொழுக்கட்டை, மகரசங்கராந்திக்குச் சர்க்கரைப் பொங்கல், நவராத்திரிக்குச் சுண்டல் என்பதுபோல திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை.

நம் மரபில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விசேஷமான உணவு நைவேத்தியமாகச் செய்து படைக்கப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்திக்குக் கொழுக்கட்டை, மகரசங்கராந்திக்குச் சர்க்கரைப் பொங்கல், நவராத்திரிக்குச் சுண்டல் என்பதுபோல திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை.

`மயூரக்ஷேத்திர புராணம் 
 சொல்லும் நைவேத்தியம்!’- திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை செய்வது எப்படி?

தூய்மையுடைய நெற்பொரியும், தன்னலமற்ற வள்ளல் தன்மையையுடைய தெங்கும், அன்பிற்கு அறிகுறியாம் தித்திப்புத் தன்மையையுடைய வெல்லமும் ஒன்று கலந்து அன்று நிவேதனம் செய்யப்பட வேண்டுமென்றும் என்று மயூரக்ஷேத்திர புராணம் கூறுகின்றது.

தெங்கு என்றால் தேங்காய். நெல் பொரியும் தேங்காயும் வெல்லப்பாகும் கலந்து செய்யப்படும் பொரி உருண்டையே கார்த்திகை தீபத்துக்கான நைவேத்தியமாகத் திகழ்கிறது.

நெல் பொரி உருண்டை செய்வது எப்படி என்று நங்கநல்லூர் மாலதியிடம் கேட்டோம். அவர் கூறிய செய்முறை உங்களுக்காக...

தேவையானவை:

நெல் பொரி -

வெல்லம், தண்ணீர், நெய், பல்பல்லாகக் கீறிய தேங்காய் சிறிது.

பொதுவாக அரைக்கிலோ பொரிக்குக் கால்கிலோ வெல்லம் என்பது கணக்கு.

கார்த்திகை பொரி
கார்த்திகை பொரி

செய்முறை:

வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைத்துக் கொள்ளவும். பின்பு அதை இறக்கி வடிகட்டி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். கரைத்த வெல்லத்தைப் பாகு பதத்திற்குக் காய்ச்சவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து, அதில் இரண்டு சொட்டுப் பாகை ஊற்றி கையால் உருட்டிப் பார்க்கவும். பாகு நன்றாக உருட்ட வந்தால் இறக்கி அதைப் பொரியில் கொட்டி, தேங்காய்த் துண்டுகளையும் சேர்த்துக் கிளறவேண்டும். பின்பு கைகளில் நெய் தடவிக்கொண்டு சூடு ஆறும் முன்பாக உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு:

நெல் பொரிபோலவே, அரிசிப் பொரி, அவல் பொரியிலும் செய்யலாம்.

அடுத்த கட்டுரைக்கு