Election bannerElection banner
Published:Updated:

வாழ்ந்துகெட்டவர்கள் மீண்டு எழ உதவும் 4 பரிகாரங்கள்! - அதிகாலை சுபவேளை

வேங்கடேச பெருமாள்
வேங்கடேச பெருமாள்

வாழ்ந்துகெட்டவர்கள் மீண்டு எழ உதவும் 4 பரிகாரங்கள்! - அதிகாலை சுபவேளை... ராசிபலன், பஞ்சாங்கம், இறைதரிசனம் மற்றும் விசேஷ தகவல்களுடன்

இன்றைய பஞ்சாங்கம்

தினம் தினம் திருநாளே!

23.4. 21 சித்திரை 10 வெள்ளிக்கிழமை

திதி: ஏகாதசி மாலை 5.56 வரை பிறகு துவாதசி

நட்சத்திரம்: பூரம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம்: பகல் 3 முதல் 4.30 வரை

நல்லநேரம்: காலை 9.30 முதல்10.30 வரை / பகல் 4.30 முதல் 5.30 வரை

சந்திராஷ்டமம்: திருவோணம்

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

சுந்தரராஜப் பெருமாள்
சுந்தரராஜப் பெருமாள்

வாழ்க்கை வளமாக 4 பரிகாரங்கள்

வாழ்க்கை எப்போதும் ஒன்றுபோல் இருப்பதில்லை. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று சொல்வார்கள். நன்றாக வாழ்ந்த நல்லவர்கள்கூட சில நேரங்களில் விதிவசத்தால் தாழ்வான நிலையை அடைந்துவிடுவார்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கிரக நிலை, தெய்வத்தை மறந்தது, முன்வினைப்பயன் என்று பல காரணங்கள் இருக்கலாம். மரணத்தை விடக் கொடுமையானது, சமூகம் ஒருவனை மறந்துவிடுவது. திரை உலகில், அரசியல் உலகில் உச்சத்தில் இருந்தவர்களில் பலரும் இறுதியில் கவனிப்பார் இன்றிக் கிடப்பதுண்டு. தொழிலில் ஓகோவென்று இருந்தவர், திடீர் என்று நொடித்துப்போய் கடன்காரனாகி சீர்கெட்ட நிலையில் வாழ்வது உண்டு. லாக் டவுன் பலரின் வாழ்க்கையை மாற்றிவிட்டது.

காரணம் எதுவாக இருந்தாலும் தீமை என்று ஒருகாலம் வந்தால் நன்மை என்ற ஒரு காலம் வராமலா போய்விடும். நம்பிக்கையோடு கடின முயற்சியோடு தொடர்ந்து உற்சாகமாக இருங்கள். உங்களுக்கு விருப்பமான தெய்வத்தை தொடர்ந்து வழிபட்டுவாருங்கள். சோதனை காலம் விரைவில் மாறும். தொட்டதெல்லாம் துலங்கும். உங்கள் துன்பங்கள் விரைந்து நீங்க சில பரிகாரங்களும் உள்ளன. அவற்றைக் குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

பொறுமை : இன்று எதிலும் பொறுமை அவசியம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரவு இருப்பதால் கவலையில்லை. - டேக் கேர் ப்ளீஸ்

ரிஷபம் :

பணவரவு : நேற்றுவரையிருந்த குழப்பங்கள் தீரும். வரவேண்டிய பணமும் வந்து சேரும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். - என்ஜாய் தி டே

மிதுனம்

நம்பிக்கை : எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். ஆரோக்கியமும் மேம்படும். - ஆல் இஸ் வெல்

கடகம்

வெற்றி : செயல்களில் வெற்றி ஏற்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் வாய்ப்புள்ளது. சகோதரர்கள் உதவி கேட்டுவருவார்கள். நீங்களும் உதவுவீர்கள். - வெற்றிக்கொடிகட்டு!

சிம்மம்

நற்செய்தி : எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். குடும்பத்தினர் உங்கள் மனம் மகிழும்படி நடந்துகொள்வார்கள். நம்பிக்கை அதிகரிக்கும். செயல்களும் அனுகூலமாகும். - இனி எல்லாம் சுபமே!

கன்னி

செலவு : செலவுகள் அதிகரிக்கும். மனதில் சிறு சஞ்சலம் உருவாகும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தினர் ஆறுதலாக இருப்பார்கள். - செலவே சமாளி!

துலாம்:

மகிழ்ச்சி : எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். சகோதர வகையில் மகிழ்ச்சியும் செலவும் ஏற்படும். - ஜாலி டே !

விருச்சிகம்

உற்சாகம் : எதிர்பாராத வகையில் நன்மைகள் நடைபெறும். சிலர் தேவைக்குப் புதிய ஆடைகளை வாங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். - நாள் நல்ல நாள்!

தனுசு:

அலைச்சல் : அனைத்தும் அனுகூலமாக இருந்தபோதும் தேவையற்ற அலைச்சலையும் மேற்கொள்ள வேண்டி வரும். பணவரவும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்

மகரம்

விவாதம் : செலவுகள் அதிகரிக்கும். தேவையின்றி அலைச்சலும் ஏற்படும். யாரோடும் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வழக்கமான பணிகளைச் செய்துவாருங்கள். - நோ ஆர்கியுமென்ட்ஸ்

கும்பம்

பிரச்னை : சின்னச் சின்ன பிரச்னைகள் தோன்றி மறையும். தந்தைவழி உறவினர்களால் தொல்லைகள் அதிகரிக்கும். செலவுகளைச் சமாளிக்கவும் திண்டாடுவீர்கள். - சிக்கனம் தேவை இக்கணம்!

மீனம்

உதவி : எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். மனதிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் மனம் கோணாமல் நடந்துகொள்வார்கள். - நேரம் நல்ல நேரம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு