Published:Updated:

உண்டியல் வருமானம் இப்படித்தான் செலவு செய்ய வேண்டும்!

உண்டியல் வருமானம்
பிரீமியம் ஸ்டோரி
உண்டியல் வருமானம்

உண்டியல் வருமானம்

உண்டியல் வருமானம் இப்படித்தான் செலவு செய்ய வேண்டும்!

உண்டியல் வருமானம்

Published:Updated:
உண்டியல் வருமானம்
பிரீமியம் ஸ்டோரி
உண்டியல் வருமானம்

கோயில் உண்டியல்களில் பணம், வெள்ளி, தங்கம் எனப் பல விதமாகவும் பக்தர்கள் காணிக்கை செலுத்துகிறார்கள். அதைத் தவிர நன்கொடையாகவும் பலர் கொடுக்கிறார்கள். இவற்றையெல்லாம் எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்று வழிகாட்டுகிறது ஞான நூல் ஒன்று.

உண்டியல் வருமானம் இப்படித்தான் செலவு செய்ய வேண்டும்!


பக்தர்கள் கொடுக்கும் செல்வத்தைப் பத்து பங்குகளாகப் பிரிக்க வேண்டுமாம்.

அபிஷேகத்துக்கு - ஒரு பங்கு

யாகத்துக்கு - ஒரு பங்கு

ஹோமத்திரவியங்களுக்கு - ஒரு பங்கு

ஆசார்யனுக்கு - ஒரு பங்கு

மூர்த்திக்கு (ஸ்வாமிக்கு) - இரண்டு பங்கு

வேதம், மந்திர ஜபம் ஆகியவற்றுக்கு - ஒரு பங்கு

தானம், கொடை - ஒரு பங்கு

அடியார்களுக்கு அன்னமிட - ஒரு பங்கு

நைவேத்தியத்துக்கு - ஒரு பங்கு

எனச் செலவு செய்ய வேண்டும் என்கிறது அந்த நூல்.அற்புதமான இந்தப் பங்கீட்டு முறையைச் சொல்லும் பாடல்:

"புண்ணியர்கள் நற்பொருள்சி வாற்பிதமி தென்றே

புகன்றுதவ அதனையாவின்

பொறையுடன் கைக்கொண்டு பங்குபத் தாக்கியப்

பொருளினொரு பங்கதனையே

நண்ணுமபி டேகந்த னக்குவேள் விக்கொன்று

நவிலோம திரவியத்தில்

நாடுபங் கொன்றுதே சிகர்தமக் கொருபங்கு

நல்ல மூர்த் திக்கிருமடங்

கெண்ணரிய மறைமந்தி ராதிய செபத்தினுக்

கியலுமொரு பங்குதானம்

ஈதலுக் கொருமடங் கன்பர்போ சனமதற்

கேற்றதொரு பங்கிவளவே

திண்ணியவர்கள் ஓதுநை வேத்தியத் திற்கொன்று

சிந்தியந் தனிலுரைத்தாய்

சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச

செகதீச நடராசனே"

இந்தத் தகவலைச் சொல்லும் அபூர்வமான இந்த நூலின் பெயர் - நடராச சதகம். ஸ்ரீமத் சிதம்பர நாத முனிவர் என்பவர், 245 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய அற்புத மான நூல் இது!