Published:Updated:

`திருச்செந்தூரில் பௌர்ணமி வழிபாடு!’ - முருகன் அருள் பெற திரளும் பக்தர்கள்

பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ள பழக்கமாகும்.

முருகன்
முருகன்

முருகப் பெருமான் அருளாட்சி செய்யும் கோயில்களில் அதுவும் கடல்சார்ந்த கோயில்களில் மிகவும் பிரசித்திபெற்றது திருச்செந்தூர் முருகன் கோயில். 'திருச்சீரலைவாய்' என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் முருகன் கோயில் இயற்கையோடு இயைந்த திருத்தலமாகும்.

திருச்செந்தூர்
திருச்செந்தூர்

அகத்தியர், நக்கீரர், ஔவையார், அருணகிரிநாதர் மற்றும் பாம்பன் சுவாமிகள் எனப் பலரும் திருச்செந்தூர் முருகன் அமைந்திருக்கும் ஆலயத்தைப் பற்றியும் முருகனைப் பற்றியும் நிறைய பாடல்கள் இயற்றியுள்ளனர்.

தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை மற்றும் சிலப்பதிகாரம் போன்ற பண்டைய தமிழ் இலக்கியங்களில் இத்திருத்தலத்தின் சிறப்பு போற்றப்பட்டுள்ளன.

செந்தூர் முருகன்
செந்தூர் முருகன்

'பௌர்ணமி வழிபாடு' என்றாலே திருவண்ணாமலை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புள்ளதாகத் திகழ்ந்துவருகிறது. இப்போது திருச்செந்தூரிலும் பக்தர்கள் பெருமளவில் திரளத் தொடங்கியுள்ளனர்.

பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ள பழக்கமாகும். அறிவியல்ரீதியாகப் பார்த்தால், சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று சந்திரன் பிரதிபலிக்கிறது. பூமி, சூரியனைச் சுற்றி வருவதுபோல் சந்திரனும் பூமியைச் சுற்றி வருகிறது. பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியில் சந்திரனின் ஒளி முழுவதுமாக பூமிக்குக் கிடைக்கும் நாள் பௌர்ணமி.

திருச்செந்தூர்
திருச்செந்தூர்
பக்தர்கள்

பௌர்ணமி அன்று கடலில் ஏற்படும் மாற்றம் நம் உடலிலும் உண்டு என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். கடலுக்கு மிக அருகில் உள்ள இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தின் கடற்கரையில் பௌர்ணமி அன்று இரவு முழுவதும் குடும்பத்துடன் வந்து அமர்ந்து, தங்கி நாழிக்கிணற்றிலும் கடலிலும் நீராடி முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பௌர்ணமி நாளில் இங்கு வந்து வணங்குவது பண நிறைவையும் மன நிறைவையும் தருகிறதென்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.