Published:Updated:

'கலி!'

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

சிந்தனை விருந்து

'கலி!'

சிந்தனை விருந்து

Published:Updated:
சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

`காலம் கெட்டுப்போச்சு.’ சர்வ சாதாரணமாகப் பலரும் சொல்லி இதை நாம் கேட்டிருப்போம். உண்மையில் காலம் கெட்டுப்போகுமா என்ன... அல்லது மனிதர்களால் அதைக் கேடான ஒன்றாகத்தான் ஆக்க முடியுமா... அப்படியல்ல.

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து


நேர்மை, நாணயம், சத்தியம் இவையெல்லாம் புறந்தள்ளப்பட்டு அதர்மமும், அக்கிரமங்களும், அநியாயங்களும் தலைதூக்கிவிட்டன. அதற்குக் காரணமானவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதைக் குறிப்பதுதான் இந்தச் சொல்லாடல்.

ஒரு மனிதர். ஏதோ ஓர் அவசரத் தேவை. தன் இரண்டு ஏக்கர் நிலத்தை விவசாயி ஒருவருக்கு விற்றார். அடுத்த நாள் நிலத்தை உழுதபோது புதையல் கிடைத்தது. பானை நிறைய தங்கக் காசு. விவசாயி அதைத் தூக்கிக்கொண்டு விற்றவரிடம் வந்தார். ``ஐயா நிலத்துல இந்தப் புதையல் கிடைச்சுது. நீங்க நிலத்தைத்தான் வித்தீங்க. நிலத்துக்கு அடியில இருக்குற புதையலை விக்கலை. அதனால இது உங்களுக்குத்தான் சொந்தம். இந்தாங்க...’’ என்று நீட்டினார்.

``நிலத்தை விக்கும்போதே அதுல விளையறது, மண்ணுக்குள்ள இருக்குறது எல்லாம் உங்களுக்குத்தான் சொந்தம்னு ஆகிப்போச்சு. எனக்கு இது வேணாம்’’ என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார் நிலத்தை விற்றவர்.

அடுத்த நாள் விடிந்தது. விவசாயி வீட்டு வாசலில் வந்து நின்றார் அந்த மனிதர். ``நிலத்தைத்தான் வித்தேன். மண்ணுக்கடியில இருக்குற புதையலை விக்கலை. ஒழுங்கு மரியாதையா புதையலை என்கிட்ட குடுத்துடுங்க.’’

``அதெப்படி... நிலத்தை வித்தாச்சு விளையறதும் சரி, மண்ணுக்குள்ள இருக்கறதும் சரி... எனக்குத் தான் சொந்தம். புதையலைத் தர முடியாது’’ என்றார் விவசாயி. ஒரே இரவுக்குள் இருவரின் குணங்களும் மாறியது எப்படி? அந்த இரவில்தான் கலியுகம் பிறந்ததாம். பேராசை, சுயநலம் என அத்தனை தீய குணங் களும் மனிதர்களுக்குள் வேர்விட ஆரம்பித்த தருணம் அது. பெரியவர்கள் அநியாயம் நடப்பதைப் பார்க்கும்போது, `கலிகாலம்... கலிகாலம்’ என்று சொல்வதும் இதனால்தான். இந்தக் கலியுகத்தில் மனிதர்களின் நாக்கு எப்படி வேண்டுமானாலும் புரளும்.

சூதாட்ட விடுதிக்குள் ஒருவன் நுழைவதைப் பார்த்தார் ஒரு பெரியவர். விரைந்து வந்து அவன் கையைப் பிடித்தார். ``ஏம்ப்பா... போன வாரம் என் முன்னாடிதானே உன் பொண்டாட்டிகிட்ட, `இனிமே சூதாட மாட்டேன்’னு சத்தியம் பண்ணினே. இப்போ மறுபடியும் சூதாடப்போறே?’’

அவன் சொன்னான்:

``ஆமாங்கய்யா. `சூதாட மாட்டேன்’னு சத்தியம் பண்ணினேன். `பொய் சொல்ல மாட்டேன்’னு பண்ணலியே?’’