மனம், வாக்கு, செயல் ஆகியவற்றால் தெரிந்தோ தெரியாமலோ பல பாவ காரியங்களை நாம் செய்துவிடுகிறோம். அதற்காக வருத்தமும் கொள்கிறோம். இதற்கு பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப்படும் விரதமே ரத சப்தமி விரதம்.

தை மாத வளர்பிறை சப்தமி அன்றுதான் ‘ரத சப்தமி’ கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் பிப்ரவரி 1-ம் தேதி ரத சப்தமி திருநாள். இது `சூரிய ஜயந்தி' என்றும் அழைக்கப்படுகிறது.

ரத சப்தமி அன்று அதிகாலையிலேயே சப்தமி திதி இருந்தால், அன்றே விரதம் இருந்து பூஜை செய்யவேண்டும். ஒரு வேளை சப்தமி திதி - இரண்டு நாள் தொடர்ந்து அதிகாலையில் இருக்கும்படி வந்தால், முதல் நாளிலேயே விரதத் தையும் பூஜையையும் செய்யவேண்டும்.

ரத சப்தமியன்று அதிகாலையில் எழுந்து நீராடவேண்டும். தங்கம், வெள்ளி, தாமிரம் முதலான ஏதாவது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் வார்த்து தீபம் ஏற்றவேண்டும். சூரிய வடிவத்தை வரைந்து (அல்லது பிம்பமாக வைத்து) பூஜை செய்யவேண்டும்.

அதன் பிறகு அந்தத் தீபத்தை கங்கை-காவிரி முதலான புண்ணிய நதிகளில் விடவேண்டும். இதன் பிறகு பித்ருக்களுக்கு உண்டான தர்ப்பணம் முதலானவற்றைச் செய்ய வேண்டும். இவ்வாறு முறைப்படி செய்வதன் மூலம் ஏழு ஜன்ம பாவங்களும் விலகிப் போகும்.

ரத சப்தமி அன்று குளிக்கும் முறை: ஏழு எருக்கு இலைகள், ஏழு இலந்தை இலைகள் எடுத்து ஒன்று சேர்த்து அவற்றுடன் அட்சதை, மஞ்சள்தூள் சேர்த்துத் தலையில் வைத்தபடி பெண்கள் நீராடுவது மரபு.

ஆண்களாக இருந்தால் மேலே சொன்னவாறு எருக்கு, இலந்தை இலைகளுடன் அட்சதை மட்டும் சேர்த்து உச்சந்தலையில் வைத்து நீராடு வது மரபு. பெற்றோர் இல்லாதவர்கள் மேற் சொன்ன இலைகளுடன் பச்சரிசியும் எள்ளும் சேர்த்து வைத்து நீராடவேண்டும்.

குளித்தபின்பு, சூரிய நமஸ்காரம் செய்து வழிபடவேண்டும். ஆதித்ய ஹிருதயம், விஷ்ணு சஹஸ்ரநாமம், சூரிய சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். காயத்ரீ மந்திரம் ஜபிக்கலாம்.

திருமாலின் அம்சமே சூரியன் என்பதால் ரத சப்தமி நாளில் விஷ்ணு ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். அவரை அவசியம் தரிசிக்க வேண்டும்.

திருப்பதி க்ஷேத்திரம் ஏழு மலைகள் சூழ அமைந்துள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி ரத சப்தமி விழா அங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த விழாவுக்கு ‘அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். ரத சப்தமி நாளில் அதிகாலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள் ஏழு வாகனங்களில் மாறி மாறி மலையப்ப ஸ்வாமி மாடவீதிகளில் திருவுலா வருவார். பிறகு 12 மணிக்கு புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெறும்.

திருவரங்கத் திருத்தலத்தில் ஏழு பிராகாரங் கள் உண்டு. ஆகவே, அங்கும் ரத சப்தமி வைபோகம் வெகுசிறப்பாக நடைபெறும். வசதி இருப்போர் இந்த இரண்டு தலங்களிலும் சென்று தரிசிப்பது சிறப்பு.

ரத சப்தமி நாளில் விரதம் இருந்தால் நீடித்த ஆயுளும் குறையாத ஆரோக்கியமும் கிடைக்கும். ரத சப்தமியன்று தொடங்கும் தொழில்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

அதேபோல் இந்த நாளில் செய்யப்படும் தான தர்மங்களுக்கும் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பர்.

ரத சப்தமிக்கு அடுத்த நாள் பீஷ்மாஷ்டமி திருநாள். அன்றும் புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

- ஆர். நந்தினி, மதுரை