Published:Updated:

பொங்கு சனி, மங்கு சனி என்பதற்கு இப்படி ஒரு பொருள் உள்ளதா?

மங்கு சனியும் பொங்கு சனியும்

பொங்கு சனி, மங்கு சனி என்பதற்கு இப்படி ஒரு பொருள் உள்ளதா?

பொங்கு சனி, மங்கு சனி என்பதற்கு இப்படி ஒரு பொருள் உள்ளதா?

பொங்கு சனி, மங்கு சனி என்பதற்கு இப்படி ஒரு பொருள் உள்ளதா?

Published:Updated:
மங்கு சனியும் பொங்கு சனியும்

நவகிரகங்களில் சனி பகவான் வெகு தொலைவில் இருப்பவர், இவர். ராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு, சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. அதாவது, ஒருவரது வாழ்நாளில், சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார். முதல் 30 வருடத்துக்குள் ஒருமுறை, 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை, 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை என சனி பகவானின் வலம் வருதல் நிகழ்கிறது. முதல் வலத்தை மங்கும் சனி; அடுத்ததை பொங்கும் சனி; மூன்றாவதைப் போக்கு சனி என்பார்கள்!

சனிபகவான்
சனிபகவான்

இப்படி மூன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தை கௌமாரம், யௌவனம், வார்த்தம் என்று அழைப்பார்கள். கௌமாரன் என்றால் கற்கும் வயது என்பர். அடுத்து, யௌவனம்; அதாவது இளமைப் பருவம். எண்ணங்களின் வசத்துக்கு உட் பட்டு, அலசி ஆராயும் திறனுடன், நல்லது- கெட்டதை அறிந்து செயல்பட்டு வாழும் காலம் இது. பங்களைத் தாங்கி, அதனை அலட்சியப் படுத்தி, மனோபலமும் சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகிற பருவம் இது!

மூன்றாவது, முதுமை. தேக ஆரோக்கியமும் மனோ பலமும் குறைகிற இறுதிப்பகுதி. கௌமாரம், யௌவனம், வார்த்தகம் என வாழ்வின் மூன்று பிரிவுகளை விவரிக்கிறது ஆயுர்வேதம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறுவயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில், சகல விஷயங்களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும்போது, சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும். மனத்தில் பதிந்த எண்ணங்கள், முழு வளர்ச்சியை எட்டாத நிலையில், சனியின் தாக்கம் முடங்கிவிடும். ஆகவே, சனியின் பாதிப்பு மங்கியது என்பர்.

இளமையில் வளர்ச்சியுற்று, எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து, சனி பகவானின் தாக்கம் கட்டுக்கடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்கச் செய்து, பொங்கச் செய்கிறது. ஆகவே, பொங்கு சனி என்கின்றனர்.

இன்ப துன்பம் நிறைந்த வாழ்வில், துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று மனதுள் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்கிறார் சனி பகவான். இளமையில் கற்ற கல்வியுடன் விவேக மும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, சனி பகவானின் தாக்கத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திசை திருப்ப முடியும். ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் சனீஸ்வரர்.

முதுமையில், சோர்வைச் சந்தித்த உடலும் உள்ளமும் கொண்டிருக்க, சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. சனியின் விருப்பப்படி தன்னை இணைத்துக்கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால், வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க அவன் செயல்பாடு உதவும். ஆகவே, அவனது வேலையைச் சுட்டிக் காட்டி, போக்கு சனி என்றனர்.

ஆக, முதற்பகுதி வளரும் பருவம்; 2-ஆம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று, இன்பத்தை அனுபவிக்கிற பருவம்; இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம். இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத் தக்கபடி, சனி பகவானின் செயல்பாடு இருப்பதை, ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது.

இறுதியில் சனி, மறைவைச் சந்திக்கிற வேளையை நடைமுறைப் படுத்துகிறார். அதாவது, சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல; அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர்.

நம்மை வளர்த்து, நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, இன்ப-துன்பங்களை கர்மவினைப்படி செயல்படுத்தி, வாழவைப்பவர் சனி பகவான்.

சனிபகவான்
சனிபகவான்

நம் உடல் வாழத் தகுதியற்ற நிலையில், மறுபிறவி தருவார்; பாபமும் புண்ணியமும் அற்றுப் போயிருப்பின், மறைவை இறுதியாக்கி மோட்சம் தருவார்.

சனீஸ்வரரை தினமும் வணங்கி, மனதில் உறைந்தவராக மாற்றி னால், விசேஷ பூஜை, தனி வழிபாடுகள் ஏதும் தேவையே இல்லை.

வழிபட விரும்புவோர், சனிக் கிழமைகளில் அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று எள் முடிச்சு தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுங்கள்.

வாழ்வின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்பச் செயல் பட்டு, வளங்கள் அனைத்தையும் நமக்குத் தந்தருளும் சனிபகவானை மனதாரப் பிரார்த்தித்து வாருங்கள்.