Published:Updated:

துறவியின் பயணம்

துறவியின் பயணம்
பிரீமியம் ஸ்டோரி
துறவியின் பயணம்

ஆன்மிகக் கதை

துறவியின் பயணம்

ஆன்மிகக் கதை

Published:Updated:
துறவியின் பயணம்
பிரீமியம் ஸ்டோரி
துறவியின் பயணம்

கோடானுகோடி சூரியப் பிரகாசத்தோடு நம் அருகிலேயே இருக்கிறார் இறைவன். யாரெல்லாம் தங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வைத்திருக் கிறார்களோ, அவர்கள் எல்லாம் அந்த ஒளியைப் பெறுகிறார்கள். இல்லற சந்நியாஸம் மேற்கொண்டிருப்பவர்களுக்கு இது எளிதில் சாத்தியமாகும்.

இல்லற சந்நியாஸம் என்றதும் வீட்டுக்குள்ளேயே ஒரு காவி உடையைத் தரித்துக் கொண்டு யாரோடும் தொடர்பில்லாமல் வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை. தினசரிக் கடமைகளை துடிப்போடு செய்ய வேண்டும். நம்மை நம்பி இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால், எதன் மீதும் பற்றை வளர்த்துக் கொள்ளாமல் ஆழ்ந்த அமைதியில் நனைந்திருக்க வேண்டும் என்பார்கள் பெரியோர்கள்.

துறவி ஒருவர் ரயிலில் பயணித்தார். அவர் கையில் பெரிய துணிப்பை இருந்தது. ரயிலில் சக பயணிகளும் பெட்டு, பைகள் எல்லாம் வைத்திருந்தார் கள். ஆனால், சந்நியாசி பை வைத்திருந்தது அவர்களுக்கு விசித்திரமாக இருந்தது. பயணிகள் ஒருவர் துறவியிடம் கேட்டார்:

‘‘சுவாமி! நாங்கள் குடும்பஸ்தர்கள். எங்களுக்குப் பல பொருட்கள் தேவை. அதனால் பைகளைச் சுமந்து திரிகிறோம். நீங்களும் பெரிய பை வைத்துள்ளீர்கள். அப்புறம் எதற்கு உங்களுக்குத் துறவறம். உண்மையில் உங்களுக்கும் எங்களுக்கும் அணிந்திருக்கும் ஆடைகளைத் தவிர வேறு என்னவித்தியாசம் இருக்கிறது?’’

துறவி பதிலேதும் சொல்லவில்லை. புனிசிரிப்போடு நிறுத்திக்கொண்டார். சில நிமிடங்களில் ரயில் ஓர் ஆற்றுப்பாலத்தில் பயணித்தது. துறவி புன்னகை பொங்கும் முகத்துடன் தனது பெரிய பையை ஜன்னல் வழியாக ஓடும் ஆற்றில் தூக்கி எறிந்தார். பின்னர், புன்னகை மாறாமல் கேள்வி கேட்ட பயணியின் பக்கம் திரும்பினார்.

துறவியின் பயணம்
துறவியின் பயணம்

‘‘நீங்களும் நான் செய்தது போல செய்வீர்களா?’’ என்று கேட்டார்.

அந்தப் பயணி அதிர்ந்தார்.‘‘அதெப்படி? எனது பைகளிலும் பெட்டியிலும் நகைகள், பணம் மற்றும் ஏராளமான விலையுயர்ந்த பொருள்கள் இருக் கின்றன. அவற்றை எப்படி ஆற்றில் வீசியெறிய முடியும்?’’ எனக் கேட்டார்.

துறவி சிரித்தபடி சொன்னார்: ‘‘அதைவிட விலையுயர்ந்த பொருட்கள் எனது பையிலும் இருந்தன. ஆனால், துளியும் வருத்தம் இல்லாமல் என்னால் அவற்றைத் தூக்கி எறிய முடிந்தது. உங்களால் அதைச் செய்ய முடியவில்லை. காரணம்... உங்களுக்கு அந்தப் பொருள்கள் மீது ஆசை இருக்கிறது. எனக்கு இல்லை. இதுதான் நம் இருவருக்கும் இருக்கும் வித்தியாசம்!’’

-சி.அருண், சென்னை-66

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism