Published:Updated:

100 ஆண்டுகள் பழைமையான ஆயிரம் கோயில்களில் விரைவில் திருப்பணி: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சேகர்பாபு

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பல மாற்றுப் பொன் இனங்களை சுத்தத் தங்கக் கட்டிகளாக மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 100 ஆண்டுகள் பழைமையான ஆயிரம் திருக்கோயில்களில் விரைவில் திருப்பணிகள் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

100 ஆண்டுகள் பழைமையான ஆயிரம் கோயில்களில் விரைவில் திருப்பணி: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பல மாற்றுப் பொன் இனங்களை சுத்தத் தங்கக் கட்டிகளாக மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 100 ஆண்டுகள் பழைமையான ஆயிரம் திருக்கோயில்களில் விரைவில் திருப்பணிகள் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

Published:Updated:
சேகர்பாபு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா, இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலுக்குக் கடந்த 10 ஆண்டுகளில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 27 ஆயிரத்து 236.600 கிராம் பலமாற்றுப் பொன் இனங்களை சுத்தத் தங்கங்களாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கி சாத்தூர் கிளையில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் நீதிபதி மாலா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலை வகித்தார். இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். இராமச்சந்திரன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு கோயில் நிர்வாகத்திடம் பெறப்பட்ட பலமாற்றுப் பொன்னை நீதியரசர் மாலா முன்னிலையில் சாத்தூர் ஸ்டேட் வங்கிக் கிளை மேலாளரிடம் ஒப்படைத்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், முதலமைச்சர் உத்தரவுபடித் தமிழகத்தை மூன்று மண்டலங்களாகப் பிரித்து இந்த மண்டலங்களில் உள்ள கோயில்களில் உள்ள சாமிக்குப் பயன்படாத பலமாற்றுப் பொன் இனங்களை மும்பையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான உருக்காலையில் உருக்கி சுத்தத் தங்கங்களாக மாற்றப்படும். இந்தத் தங்க கட்டிகள் வங்கிகளில் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்து அதில் வரும்வட்டியைக் கொண்டு கோயில்களின் திருப்பணி மேற்கொள்ளப்படும். குறிப்பாக இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் கணக்கில் இன்று கொடுக்கப்படும் 27 ஆயிரத்து 236.600 கிராம் தங்கத்தை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் ஆண்டுக்கு 24 லட்சம் வட்டியாகக் கிடைக்கும். இறைசொத்து இறைவனுக்கே என்ற முறையிலும், வெளிப்படை தன்மையாக இருப்போம் என்ற தாரக மந்திரத்தையும் கருத்தாகக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது எனப் பேசினார்.

கோயில் திருப்பணி தொடங்கிவைத்தல்
கோயில் திருப்பணி தொடங்கிவைத்தல்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கோயில் திருப்பணி தொடங்கிவைத்தல்
கோயில் திருப்பணி தொடங்கிவைத்தல்

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் பேசுகையில், இருக்க்ன்குடி மாரியம்மன் கோயில் வளர்ச்சி அடைய வேண்டிய கோயில். இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர ரூ.9 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. மேலும் ரூ.43 கோடி மதிப்பீட்டில் கோயிலைப் புனரமைக்கும் பணி நடைபெற உள்ளது. பக்தியே இல்லை என்று குற்றஞ்சாட்டப்படும் திமுக ஆட்சியில் தான் பக்தர்களின் கோரிக்கைகள் அதிகம் நிறைவேற்றப்படுகிறது என்றார்.

தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்,"100 ஆண்டுகள் பழைமையான ஆயிரம் திருக்கோயில்களில் விரைவில் திருப்பணி நடைபெற உள்ளது. 106 திருக்கோயில்களில் விரைவில் குடமுழுக்கு நடைபெறும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism