Published:Updated:

அசைவம் சாப்பிடுபவர்கள் ஆன்மிக தர்மத்துக்கு எதிரானவர்களா? - அதிகாலை சுபவேளை!

கோயில்
கோயில்

அசைவம் சாப்பிடுபவர்கள் ஆன்மிக தர்மத்துக்கு எதிரானவர்களா? - அதிகாலை சுபவேளை!

இன்றைய பஞ்சாங்கம்

20. 5. 21 வைகாசி 6 வியாழக்கிழமை

திதி: அஷ்டமி காலை 7.38 வரை பிறகு நவமி

நட்சத்திரம்: மகம் காலை 11.35 வரை பிறகு பூரம்

யோகம்: அமிர்தயோகம் காலை 11.35 வரை பிறகு சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 1.30 முதல் 3 வரை

எமகண்டம்: காலை 6 முதல் 7.30 வரை

நல்லநேரம்: காலை 12.30 முதல் 1.30 வரை

ஹயக்ரீவர்
ஹயக்ரீவர்

சந்திராஷ்டமம்: உத்திராடம் காலை 11.35 வரை பிறகு திருவோணம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

வழிபடவேண்டிய தெய்வம்: லட்சுமி ஹயக்ரீவர்

அசைவம் சாப்பிடுபவர்கள் ஆன்மிக தர்மத்துக்கு எதிரானவர்களா?

இந்த உடலை அன்னமயகோஷம் என்பார்கள் ஞானிகள். நாம் உண்ணும் உணவால்தான் உடல் வளர்கிறது. அப்படியிருக்க நாம் உண்ணும் உணவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்னும் கேள்வி காலம்தோறும் இருந்துவருகிறது. உணவுக்கும் நம் குணங்களுக்கும் உள்ள தொடர்பை ஞானிகள் விளக்கியிருக்கிறார்கள். அப்படியானால் நம் உணவுக்கும் ஆன்மிகத்தில் ஈடுபடுவதற்கும் தொடர்பு இருக்கிறதா என்னும் கேள்வி பலகாலமாக நம்மிடையே இருந்துவருகிறது. அசைவம் சாப்பிடுபவர்கள் ருத்திராட்சம் அணியலாமா என்று பலரும் கேட்பதைப் பார்த்திருக்கலாம். அசைவம், பிற உயிர்களைக் கொன்று உருவாக்கும் உணவு என்பதால் அதை எடுத்துக்கொள்வது தவறா என்னும் சந்தேகம் சிலருக்கு உள்ளது. சிலர் அசைவம் நம் ஆன்மிக தர்மத்துக்கு எதிரானது என்று கூடப் பேசிவருகிறார்கள். அப்படிப் பேசுவது சரியா என்னும் கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்கள்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம் : நிதானம் : வழக்கமான பணிகளில் கவனம் தேவை. பணவரவும் கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவைப்படும் நாள். வார்த்தைகளால் வம்பு வரலாம். - டேக் கேர் ப்ளீஸ்!

ரிஷபம் : வெற்றி : வேலைகளைத் திட்டமிட்டபடி முடிப்பீர்கள். மனதில் நம்பிக்கை நிறைந்து விளங்கும். சகோதரர்களால் சிறு பிரச்னை ஏற்பட்டு விலகும். - வெற்றிக்கொடிகட்டு!

மிதுனம் : தாமதம் ; செயல்களில் சிறு தாமதம் ஏற்பட்டும் என்றாலும் சாதகமாக முடியும். குழப்பங்களுக்கு இடம் கொடாமல் செயல் ஆற்றுவதன் மூலம் வெற்றி பெறலாம். - ஆல் இஸ் வெல்!

கடகம் : உற்சாகம் : உற்சாகம் நிறைந்த நாள். குடும்பத்தில் இருந்த வருத்தங்கள் தீரும். போதுமான பணவரவும் உண்டாகும். செலவுகளில் மட்டும் சிக்கனம் தேவை. - சிக்கனம் தேவை இக்கணம்!

சிம்மம் : ஆரோக்கியம் : செயல்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவசர முடிவுகளும் வேண்டாம். - ஹெல்த் இஸ் வெல்த்!

கன்னி : மகிழ்ச்சி : குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். செயல்களும் அனுகூலமாகும். நண்பர்கள் தேவைக்கு உதவுவார்கள். தேவைகளுக்காக வெளியில் செல்லும்போது கவனம் தேவை. - என்ஜாய் தி டே!

துலாம் : நன்மை ; நன்மைகள் நடைபெறும் நல்ல நாள். தந்தைவழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் குறித்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவீர்கள். - நாள் நல்ல நாள்!

விருச்சிகம் : பதற்றம் : அனைத்தும் நல்லவிதமாக நடைபெறும் என்றாலும் தேவையில்லாத பதற்றம் மனதில் இருக்கும். குடும்பத்தினர் ஆறுதலாக இருப்பர். - பதறாத காரியம் சிதறாது!

தனுசு : சோர்வு ; முற்பகலில் சோர்வும் பிற்பகலில் உற்சாகமும் ஏற்படும் நாள். நிதானமாகச் செயல்படுங்கள். முக்கியப் பணிகளை பிற்பகலில் செய்யுங்கள். - ரிலாக்ஸ் ப்ளீஸ்

மகரம் : நற்செய்தி : முற்பகலில் எதிர்பார்த்த நற்செய்திகள் தேடிவரும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். இறைவழிபாடு செய்யுங்கள். - எல்லாம் நன்மைக்கே!

கும்பம் : ஆதாயம் : சகோதர உறவுகளால் நன்மைகள் நடைபெறும் நல்ல நாள். செயல்களில் இருந்த தடைகள் விலகும். செயல்கள் அனுகூலமாகும். - ஜாலி டே!

மீனம் : அமைதி : மனதில் உற்சாகமும் குடும்பத்தில் அமைதியும் நிறைந்திருக்கும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். செலவுகளில் கவனம் தேவை. - இறைவன் இருக்க பயம் ஏன்?

அடுத்த கட்டுரைக்கு