Published:Updated:

சித்தர்கள் செய்த மூலிகை வசியங்கள் இந்தக் காலத்திலும் சாத்தியமா? - அதிகாலை சுபவேளை

சித்தர்கள்
சித்தர்கள்

சித்தர்கள் செய்த மூலிகை வசியங்கள் இந்தக் காலத்திலும் சாத்தியமா? - அதிகாலை சுபவேளை

இன்றைய பஞ்சாங்கம்

31. 5. 21 வைகாசி 17 திங்கள்கிழமை

திதி: பஞ்சமி காலை 7.49 வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம்: திருவோணம் இரவு 9.29 வரை பிறகு அவிட்டம்

யோகம்: அமிர்தயோகம் இரவு 9.29 வரை பிறகு சித்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 முதல் 9 வரை

எமகண்டம்: காலை 10.30 முதல் 12 வரை

நல்லநேரம்: காலை 6.30 முதல் 7.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை

வரதராஜப் பெருமாள்
வரதராஜப் பெருமாள்

சந்திராஷ்டமம்: திருவாதிரை இரவு 9.29 வரை பிறகு புனர்பூசம்

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

இன்று: திருவோண விரதம்

சித்தர்கள் செய்த மூலிகை வசியங்கள் இந்தக் காலத்திலும் சாத்தியமா?

வசியம் என்றால் என்ன? ஒருசிலர் இயல்பிலேயே வசீகரிக்கும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள். அவர்களின் பேச்சைத் தட்ட அனைவராலும் முடியாத அளவுக்கு பேச்சிலும் தோற்றத்திலும் ஓர் ஆளுமை அவர்களுக்கு இருக்கும். இதைப்போன்று செயற்கையாக தன் விருப்பத்துக்கு ஏற்ப மற்றவர்களை நடத்துவதற்காகச் செய்யும் ஸித்துவேலையே வசியம். இந்த ஸித்துவேலைகளை அந்தக் காலத்தில் சித்தர்கள் கைவரப் பெற்றிருந்தனர். அதை உலக நன்மைக்காக மட்டுமே பயன்படுத்தினர். இதைக் கற்றுக்கொண்ட சிலர் காலப்போக்கில் அதை சுயலாபத்துக்காகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். மூலிகைகளைக் கொண்டு சித்தர்கள் செய்த வசியம் இன்றும் சாத்தியமா என்னும் கேள்வி உள்ளது. இதுகுறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

மகிழ்ச்சி : குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அனைவரும் உங்கள் மனம் கோணாமல் நடந்துகொள்வார்கள். சிலருக்கு செலவுகள் அதிகரிக்கும். - என்ஜாய் தி டே!

ரிஷபம்

கவனம் : புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது கவனம் அவசியம். யாரோடும் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போங்கள். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

மிதுனம்

குழப்பம் : தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்னைகள் தோன்றி மறையும். இறைவழிபாட்டில் மன அமைதி கிடைக்கும். - எல்லாம் அவன் செயல்!

கடகம்

ஆதாயம் : பிற்பகலுக்குமேல் நன்மைகள் அதிகரிக்கும். இதுவரையிருந்த எதிர்ப்புகள் விலகும். புதிய உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். - ஜாலி டே!

சிம்மம்

வெற்றி : செயல்களில் வெற்றி ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் சொல்கேட்டு நடப்பார்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கும் வாய்ப்புண்டு. - வெற்றிக்கொடிகட்டு!

கன்னி

தாமதம் : இன்று எதிர்பார்த்த செயல்கள் முடிவதில் தாமதம் ஏற்படும். தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளியில் செல்லுங்கள். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. - டேக் கேர் ப்ளீஸ்!

துலாம்

ஆதரவு : உங்கள் முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சகோதர உறவுகளால் நன்மை உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. - ஆல் இஸ் வெல்

விருச்சிகம்

பொறுமை : பேச்சிலும் செயலிலும் பொறுமை அவசியம். பணவரவு காணப்பட்டாலும் செலவுகள் அதைவிட அதிகம் இருப்பதால் கவலைப்படுவீர்கள். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

தனுசு:

கலகலப்பு : கடந்த நாள்களிலிருந்த தேக்க நிலை மாறும். குடும்பத்திலிருந்த கசப்புகள் நீங்கி உற்சாகமாவீர்கள். பிற்பகலில் நல்ல செய்திகள் தேடிவரும். - ஆல் தி பெஸ்ட்

மகரம்

நன்மை : அதிக அளவில் நன்மைகள் நடைபெறும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். - நாள் நல்ல நாள்!

கும்பம்

மரியாதை : அனைத்தும் சாதகமாக விளங்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உங்கள் ஆலோசனை வீட்டிலும் வெளியிலும் பாராட்டப்படும். - திறமைக்கு மரியாதை!

மீனம்

பாசம் : எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். செயல்களும் அனுகூலமாக முடியும். பணவரவும் உண்டு. சகோதரர்கள் கேட்கும் உதவிகளை செய்துதருவீர்கள். - தம்பிங்கடா... அண்ணண்டா!

அடுத்த கட்டுரைக்கு