Published:Updated:

திருவாதிரை தரிசனம்!

அபூர்வ நடராஜர்
பிரீமியம் ஸ்டோரி
அபூர்வ நடராஜர்

ஓவியம்: கோபி ஓவியன்

திருவாதிரை தரிசனம்!

ஓவியம்: கோபி ஓவியன்

Published:Updated:
அபூர்வ நடராஜர்
பிரீமியம் ஸ்டோரி
அபூர்வ நடராஜர்

னவரி 10-ம் தேதி மார்கழித் திருவாதிரை - ஆருத்ரா தரிசனம். சிவபெருமானின் திருக்கோலங்களில் சிறப்புமிக்கது நடராஜர் திருவடிவம். ஐந்தொழில்களையும் ஒருங்கே புரிந்து பிரபஞ்சத்தை இயக்கும் நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அதில் மார்கழி திருவாதிரை அபிஷேகம் விசேஷமானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்துள்ளது பாடலூர். இங்கிருந்து 4 கி.மீ தொலைவு சென்றால் ஊட்டத்தூர் வரும். இங்குள்ள சிவாலயத்தில் மிகவும் அரிதான `பஞ்சநத' கல்லால் உருவாக்கப்பட்ட அபூர்வ நடராஜர் திருமேனியை தரிசிக்கலாம்.

அபூர்வ நடராஜர்
அபூர்வ நடராஜர்

இந்தக் கற்கள் தெய்விக ஒளி வீசும் தன்மை கொண்டவை; பிரபஞ்சத்தில் இருந்து வெளி வரும் ஆரோக்கியமான கதிர்வீச்சைச் சேமித்து வைத்துக் கொள்ளும் திறன் கொண்டவை. இந்த நடராஜர் பிணி தீர்க்கும் பெருமானாக அருள்பாலிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் நடராஜரின் பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தின சபை உள்ளது. இங்குள்ள நடராஜர் சந்நிதியில் தீர்த்தம் அளிக்கப்படுகிறது. இங்கு நடராஜர் ஊர்த்துவ தாண்டவம் ஆடியபோது, உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்குச் சென்றனர். ஈசன் தன் தலையிலிருந்த கங்கையைத் தெளித்து அவர்களை எழுப்பினார் என்றும் அதனாலேயே இன்றும் தீர்த்தம் வழங்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். நடராஜரின் மனையாளை சிவகாமி என்பர். திருவாலங்காட்டு அம்பாளுக்கு சமி சீனாம்பிகை என்று பெயர். நடராஜரின் திருநடனத்திற்கு இணையாக காளி ஆடியபோது, ஒரு பெண் இப்படியும் ஆட முடியுமா என்று அம்பிகை ஆச்சர்யமடைந்தாள். எனவே சீனாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது என்கிறார்கள். சீனம் என்றால் ஆச்சர்யம். அதற்கேற்பவே அம்பிகை இடக்கை விரலை மடக்கி, கன்னத்தில் கை வைக்கப்போகும் நிலையில், ஆச்சர்ய பாவனையுடன் காட்சியளிக்கிறார். ஆலங்காட்டு ரத்னசபையில் ஆண்டவனின் திருநடனத்தைக் கண்டவாறே மோட்சமடைந்தவர் காரைக்கால் அம்மையார். அதனால் சிவனின் தாண்டவத்தை அம்மையார் தரிசித்துக்கொண்டிருப்பதாக ஐதிகம்.

ராமநாதபுரம் அருகேயுள்ள உத்தரகோச மங்கை அருள்மிகு மங்களநாத ஸ்வாமி திருக்கோயிலில் பச்சை மரகதக்கல்லினால் உருவான ஆளுயரத்தில் நடனம் ஆடும் திருக்கோலத்தில் விலை மதிக்க முடியாத அபூர்வ நடராஜர் சிலை உள்ளது. பச்சை மரகதம் இயற்கையாகவே மென்மையானது. ஒலி,ஒளி அதிர்வுகளைத் தாங்க முடியாத தன்மை உடையது. இதன் காரணமாக ‘மத்தளம் முழங்க மரகதம் உடைபடும்’ என்ற சொல்லுக்கேற்ப ஒலி ஒளி அதிர்வுகளிலிருந்து இச்சிலையைப் பாதுகாக்க சிலைக்குச் சந்தனப்பூச்சு கலவையைப் பூசிப் பாதுகாத்து வருகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரைத் திருநாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்துக்காக சந்தனப்பூச்சு கலையப்பட்டு தரிசிக்கப்படுகிறது. அன்று இரவே மீண்டும் சந்தனம் பூசப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.

 • நடராஜப் பெருமான் திருமகளின் தவத்தை மெச்சி அவரது வேண்டுகோளுக்காக ஆடிய லட்சுமி தாண்டவ திருக்கோலத்தைத் திருப்பத்தூர் மாவட்டம் திருத்தளி ஆலயத்தில் தரிசிக்கலாம்.

 • அகத்திய பெருமானுக்காக ஆனந்த தாண்டவ மாடும் வித்தியாச நடராஜரை நாகப்பட்டினத்தின் அருகில் உள்ள கீழ்வேளூரில் காணலாம். இங்கு பத்துக் கரங்களுடன், இடக்காலை ஊன்றி வலது உள்ளங்கால் தெரியும்படி நடராஜர் காட்சியளிக்கிறார்.

 • திருவாரூரில் திருமாலின் திருமார்பில் உறைந்திருந்த ஈசன் திருமாலின் மூச்சுக்காற்றுக்கேற்ப ஆடிய நடனம் அஜபா நடனம். இங்குள்ள விடங்கர் இருந்தாடழகர் என்றும் அமர்ந்தாடுவார் என்றும் வணங்கப்படுகிறார்.

 • திருக்காறாயிலில் நடராஜரின் அம்சமாகிய ஆதிவிடங்கர் குக்குட நடனமாடுகிறார். குக்குடம் என்றால் கோழி. எனவே, கோழியைப் போன்று இடமும் வலமும் சாய்ந்து சுழன்றும் ஆடும் கோலத்தை இங்கு அருளினாராம்.

 • நாகப்பட்டினத்தில் சுந்தரவிடங்கர் பாராவார தரங்க நடனம் ஆடி அருளுகிறார். பாராவாரம் என்றால் கடல்; தரங்கம் என்றால் அலைகள். கடலலையைப் போல உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடும் கோலத்தில் இங்கு அருள்கிறார்.

 • பித்தனென்றும் போற்றப்படும் ஈசன் திருநள்ளாறில் பித்தனைப் போல் சுழன்றாடுவதால் இங்கு உன்மத்த கோலத்தில் அருள்கிறார்.

 • திருக்குவளையில் ஆடும் அவனி விடங்கர் பிருங்கி நடனம் ஆடுகிறார். பிருங்கி என்றால் வண்டு. வண்டு போல பறந்து வட்டமிட்டுச் சுற்றி ஆடும் நடனமிது.

 • வேதாரண்யத்தில் புவனிவிடங்கர் ஆடும் நடனம், ஆடுவது அம்ச பாத நடனம். அதாவது அன்னப்பறவை ஒயிலாக அசைந்து ஆடும் பாவனை கொண்டது.

 • திருவாய்மூரில் நீலவிடங்கர் ஆடும் நடனம், கமல நடனம். தாமரை மலரைப்போல விரிந்து மலர்ந்து ஆடும் வகையிது.

 • காலனை உதைத்து மரண பயம் நீக்கிய ஈசன் காலசம்ஹார தாண்டவத்தை திருக்கடவூரில் அருள்கிறார்.

 • தாருகாவனத்து முனிவர்களை தண்டித்த ஈசன் பிட்சாடன வடிவில் கஜசம்ஹார நடனம் புரிந்தார். இந்த எழில் நடனத்தை மன்னர்குடி வழுவூரில் காணலாம்.

 • ஈசன் சக்திக்கு ஆடிக் காட்டிய கௌரி தாண்டவத்தை மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் தரிசிக்கலாம்.

 • சிதம்பரம் அருகே கூடலையாற்றூரில் ஈசன் பிரம்மனுக்கு பிரம தாண்டவத்தை ஆடிக்காட்டினார். அதனால் இங்கு ஈசன் நர்த்தனவல்லபேசர் என வணங்கப்படுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism