ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

காவல் தெய்வமே! கால பைரவா!

பைரவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பைரவர்கள்

நான்கு பைரவர்கள்

நெல்லை மாவட்டம், குற்றாலம்- செங்கோட்டை பாதையில் உள்ள இலஞ்சி எனும் ஊரில் குமரன் கோயிலில் அருள் புரியும் பைரவரது வாகனமான நாய், இடப் பக்கம் திரும்பி இருப்பது சிறப்பு அம்சம் என்கிறார்கள்.

காவல் தெய்வமே! கால பைரவா!


 திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அருள்புரியும் பைரவர், ஆறு கரங்களுடன் பல வித ஆயுதங்கள் தாங்கி, சாந்த முகத்துடன் திகழ்கிறார்.

 நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில், 8 கரங்களுடன், ஜடாமண்டல கால பைரவர் அருள் புரிகிறார்.

 சங்கரன்கோவில் சிவன் கோயிலில், நின்ற கோலத்தில் செங்குத்தாக பாம்பை கையில் ஏந்திய பைரவரை ‘சர்ப்ப பைரவர்’ என்கிறார்கள்.

 மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 8 கைகளுடன் 3 கண்கள் கொண்ட ஐம்பொன்னாலான பைரவரின் உற்சவர் சிலையை தரிசிக்கலாம். .

 காரைக்குடியிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள திருப்பத்தூர் சிவாலயத்தில், பைரவர் அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் காட்சி தருகிறார்.

 தஞ்சை பெரிய கோயிலில் அருள்பாலிக்கும் பைரவர் 8 கரங்களுடன் காட்சி தருகிறார்.

 கும்பகோணம்- திருவாரூர் சாலையில் உள்ள சிவபுரம் சிவகுருநாதன் கோயிலில் நின்ற கோலத்தில் கோரைப் பற்கள் மற்றும் பயங்கர உருவத்துடன், கையில் சூலாயுதம் தாங்கி அருள்புரிகிறார் பைரவர். அவரின் நாய்

 வாகனம், இடப் புறம் திரும்பி பைரவரின் முகத்தைப் பார்த்த வண்ணம் உள்ளது.

 கும்பகோணம் அருகில் உள்ள திருவிசலூர் தலத்தில் உள்ள சிவயோகநாதர் கோயிலில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

 சிருங்கேரியில் மூன்று கால்கள் உள்ள பைரவ மூர்த்தி அருள்புரிகிறார்.

 திருவண்ணாமலையில் மேற்கு முகமாக, நின்ற கோலத்தில் 8 கரங்களுடன், 7 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார் பைரவர்.

தொகுப்பு: ஆர்.நந்தினி, மதுரை