Published:Updated:

வைகுண்டநாதரும், கயிலாயப் பெருமானும்!

கம்பராய பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
கம்பராய பெருமாள்

கம்பராய பெருமாள், காசி விஸ்வநாதர் கோயில்

வைகுண்டநாதரும், கயிலாயப் பெருமானும்!

கம்பராய பெருமாள், காசி விஸ்வநாதர் கோயில்

Published:Updated:
கம்பராய பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
கம்பராய பெருமாள்

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் விசுவநாத நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டிய கோயில் கம்பராயப் பெருமாள், காசிவிஸ்வநாதர் கோயில். இங்கு திருமாலும் சிவனும் ஒரே தளத்தில் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கின்றனர். ஒருமுறை பெருமாளையும் சிவனையும் ஒரே இடத்தில் வழிபட வேண்டும் என விஸ்வநாத நாயக்கர் நினைத்தார்.

கம்பராய பெருமாள்
கம்பராய பெருமாள்
காசி விஸ்வநாதர் கோயில்
காசி விஸ்வநாதர் கோயில்
கம்பராய பெருமாள்
கம்பராய பெருமாள்

அதற்கேற்ப அவரது கனவில் தோன்றிய பெருமாள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தனது சிலை வடிவில் உள்ள ஒரு கல் கம்பத்தை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யும்படி கூறினார். அதன்படி பிரதிஷ்டை செய்ததும் அருகே காசியிலிருந்து வரவழைக்கப்பட்ட லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து காசி விசுவநாதர் எனப் பெயர் சூட்டினார். இங்குக் காசி விசாலாட்சி அம்மன் சந்நிதியும் உள்ளது.

பெருமாளுக்கும் சிவனுக்கும் தனித்தனி கொடிமரம் உள்ளது. இங்குள்ள தட்சணாமூர்த்தி கையில் கமண்டலத்துடன் அருள் புரிகிறார். விஸ்வநாத நாயக்கர் தமது போர்ப் படைகளைத் தங்க வைக்க இக்கோயிலைச் சுற்றி பெரிய கோட்டைகளை அமைத்தார். எதிரிகள் வருவதைக் கண்காணிக்கக் கோட்டை அருகே பெரிய கண்காணிப்புச் சுவர்களை எழுப்பினார். அந்த கண்காணிப்புச் சுவரில் இப்பொழுது மொட்டையாண்டி கோயில் உள்ளது. பிற்காலத்தில் கம்பத்தைக் கம்ப நாயக்கர் ஆண்டதால் இவ்வூருக்குக் கம்பம் என்றும் இங்கு அருள்பாலிக்கும் பெருமாளுக்கு கம்பராயப்பெருமாள் எனப் பெயர் ஏற்பட்டது. கோயிலைச் சுற்றி பெரிய கோட்டைகள் இருந்ததால் காலப்போக்கில் கோட்டை கோயில் என்றும் அழைத்தனர். பெருமாளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆனி மாதத்தில் ரத உற்சவம் நடைபெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism