Published:Updated:

குபேரப்பட்டினத்தில் பரம ஏழையையும் குபேரனாக்கும் ஸ்ரீமஹாராஜ குபேர ஹோமம் - நீங்களும் சங்கல்பிக்கலாம்!

குபேரன்

ஸ்ரீமஹாராஜ குபேர ஹோமம்: இந்த மஹாராஜ குபேர ஹோமம் தகுந்த வேத சிரோன்மணிகளைக் கொண்டு 108 விதமான அபூர்வ மூலிகைகளைக் கொண்டு பிரமாண்டமாக நடத்தப்படுகின்றது.

குபேரப்பட்டினத்தில் பரம ஏழையையும் குபேரனாக்கும் ஸ்ரீமஹாராஜ குபேர ஹோமம் - நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீமஹாராஜ குபேர ஹோமம்: இந்த மஹாராஜ குபேர ஹோமம் தகுந்த வேத சிரோன்மணிகளைக் கொண்டு 108 விதமான அபூர்வ மூலிகைகளைக் கொண்டு பிரமாண்டமாக நடத்தப்படுகின்றது.

Published:Updated:
குபேரன்
ஈசனும் குபேரரும் ஒருசேர அருள்பாலிக்கும் இந்த தலத்தில் வரும் 14-4-2022 அன்று சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொண்டு சகலவிதமான சம்பத்துக்களைப் பெற்று வாழ வேண்டுகிறோம்.

காமதேனு போன்றவை ஹோமங்கள், மனிதன் விரும்புவதை அக்னி பகவான் வழியே குறிப்பிட்ட தெய்வங்களுக்கு அறிவித்து நலம் அடையச் செய்பவை ஹோமங்கள். மனிதனைப் படைத்தபோதே நான்முகன் அவர்களுக்கு ஹோமங்கள் செய்யப்படும் விதங்களை ரிஷிகளின் வழியே அளித்ததை பகவத் கீதை ஸ்லோகம் ஒன்று கூறுகிறது என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுவர்.

குபேரர்
குபேரர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழைமையான வேதங்களில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஹோமங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன என்பார்கள் பெரியோர்கள். அதில் லட்சுமி குபேரனுக்கு செய்யப்படும் ஹோமங்கள் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் அற்புத ஆற்றல் கொண்டவை என்கின்றன ஞான நூல்கள். குபேர ஹோமங்கள் வீட்டில் செய்வதைவிட கோயில்களில் செய்வது மிகுந்த பலனைத் தரும். அதிலும் லட்சுமி, குபேரர், சங்கநிதி, பதுமநிதி கொண்ட ஆலயங்களில் லட்சுமி குபேர ஹோமம் செய்வது இன்னும் சிறப்பானது.

காஞ்சி வெள்ளைகேட் அருகே உள்ள குபேரபட்டினத்தில் எழும்பியுள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீராஜ குபேரர் சித்தர் பீடம். இந்த பீடத்தின் முயற்சியால் உருவாகி உள்ளது ஸ்ரீவைத்தியநாத ஸ்வாமி உடனமர் ஸ்ரீராஜ குபேரர் ஆலயம். இது தன விருத்தி தலமாகவும் கடன் நிவர்த்தி தலமாகவும் பக்தர்களுக்கு விளங்கி வருகிறது. இங்கு குபேரனுக்கு செல்வம் அளித்த காசி வைத்தியநாத ஸ்வாமியும் பிரமாண்டமாக எழுந்தருளி இருப்பது விசேஷமானது.

ஸ்ரீராஜ குபேரர்
ஸ்ரீராஜ குபேரர்

இந்த ஸ்ரீராஜ குபேரர் சித்தர் தலத்தில் நடைபெறும் ஸ்ரீமஹாராஜ குபேர ஹோமம் மிகமிக விசேஷமானது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு கடன் பிரச்னைகள் அகன்றவர்கள், தொழில் விருத்தி கண்டவர், வியாபாரப் பெருக்கம் அடைந்தவர் அநேகம் பேர். செல்வவளம் பெற இந்த ஹோமம் அவசியமானது என்கிறார்கள் பக்தர்கள். அபூர்வமான இந்த குபேர வழிபாட்டில் நீங்களும் கலந்து கொள்ள சகல நன்மைகளும் உண்டாகும் என்பது வெள்ளிடை மலை.

இந்த ஹோமத்தால் உங்கள் சந்தோஷம், மன நிம்மதி பெருகும். சுற்றத்தார் நம்பிக்கை கூடும். காரியங்கள் அனைத்திலும் வெற்றி வசமாகும். உருண்டோடும் செல்வம் நம்மிடம் நிலைத்திருக்கும். நீங்காத புகழ் நிலைத்திருக்கும். அரச போகமும் அரசியல் செல்வாக்கும் கூடும். இப்படி எண்ணிலடங்கா பல அற்புத பலன்களை தரவல்லது ஸ்ரீராஜ குபேரர் ஹோமம்.

"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேராய ஐஸ்வர்யாய குபேர ராஜாய சங்க ரூபாய வியாபார வ்ருத்திம் குரு குரு ஸ்வாஹா."

குபேரர்
குபேரர்

இந்த மஹாராஜ குபேர ஹோமம் தகுந்த வேத சிரோன்மணிகளைக் கொண்டு 108 விதமான அபூர்வ மூலிகைகளைக் கொண்டு பிரமாண்டமாக நடத்தப்படுகின்றது. இந்த யாகத்தின் விளைவாக இதில் கலந்து கொள்ளும் அன்பர்களின் வாழ்க்கை சிறப்பான வளத்தை பெற்று இருக்கிறது என்கிறார்கள். நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் வைத்தியநாத ஸ்வாமி தந்தருள, நிலைத்த செல்வத்தையும் நீடித்த புகழையும் ஸ்ரீகுபேரர் நமக்கு அருளுகிறார் என்கிறார்கள் பக்தர்கள். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில் மந்தம், வியாபார தேக்கம் என்று அவஸ்தைப்பட்டு வரும் அன்பர்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால் நிச்சயம் நலம் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

குபேரருக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் இந்த தமிழ் சுபகிருது ஆண்டு தொடங்கும் வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். இந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும். காசி மாநகரில் குபேரனின் நல்ல பண்புகளுக்கு மெச்சிய விஸ்வநாதர், அவரை சகல லோகங்களிலும் இருக்கும் நிதிகளுக்கு தலைவர் என்று நியமித்தார். அதுபோலவே இங்கு எழுந்தருளி இருக்கும் விஸ்வநாதரும் உங்கள் தேவைகளை நிறைவேற்றி மங்கலம் அருள்வார் என்பது நிச்சயம்.

வரும் சுபகிருது ஆண்டில் எல்லாவிதமான நன்மைகளும் பெற லட்சுமி குபேரரை வழிபடுவது சிறந்தது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால் கடன்கள் தீர்ந்து வியாபார விருத்தி, தொழில் வளம், உத்தியோக உயர்வு, உத்தியோகப் பிராப்தி, அரசியல் செல்வாக்கு, அரசபோகம், வெளிநாட்டு யோகம் யாவும் கிடைத்து செல்வவளம் சேரும். ஈசனும் குபேரரும் ஒருசேர அருள்பாலிக்கும் இந்த தலத்தில் வரும் 14-4-2022 அன்று சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொண்டு சகலவிதமான சம்பத்துக்களைப் பெற்று வாழ வேண்டுகிறோம்.

குபேர ஹோமம்
குபேர ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism