Published:Updated:

கந்தசஷ்டி: திருத்தணியலில் நடைபெறும் மஹாஸ்கந்த ஹோமம்... இதனால் கிடைக்கும் 6 வகை பலன்கள் என்னென்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முருக வழிபாடு
முருக வழிபாடு ( எஸ்.தேவராஜன் )

மஹாஸ்கந்த ஹோமம்: ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

ஓர் ஆன்மா எத்தனையோ பிறவிகளில் சேர்த்து வைத்த கர்மவினையைப் பொறுத்து பிறப்பு, பிழைப்பு, இறப்பு என்ற நாடகத்தைத் தொடர்ந்து சந்திக்கும். இது ஒரு நீண்ட சுழல். மரணம் என்பது கூட முற்றுப்புள்ளி அல்ல, அது இப்பிறவி முடிந்து போனது என்பதைச் சொல்லும் நிறுத்தல்குறிதான். பிறப்பிலிருந்து விடுபடும் வாய்ப்பு மனிதராகப் பிறவியெடுத்த எல்லா ஆன்மாவுக்கும் உண்டு. அதில் எளிய வழி முருக வழிபாடு என்கின்றன ஆன்மிக நூல்கள்.
முருகன்
முருகன்

உள்ளும் புறமும் இருக்கும் பகையை விரட்டி அடிப்பவன் முருகப்பெருமான். பிறப்பைக் கொண்டு வந்து சேர்க்கும் மாயை, கன்மம், ஆணவத்தை முருகனே அழிப்பதால் முருகனே பிறவிக் கடலை நீந்த உதவும் பெருந்தோணி என்பார் வாரியார் சுவாமிகள். 'உள்ளும் புறமும் உள்ள பகைவர்களை அடியோடு அழிக்கும் சேனாபதிக்கு வணக்கம்' என்கிறது ஸ்ரீருத்ரம்.

அகார உகார மகாரம் இணைந்த ப்ரணவ ஸ்வரூபம் முருகன் என்கிறது கந்தர் கலிவெண்பா. அதனால் கந்தனை வணங்கினால் வேதத்தை ஓதிய புண்ணியமும் பலனும் கிடைக்கும் எனலாம். அதிலும் கந்தனுக்கு உகந்த கந்த சஷ்டி புண்ணிய தினத்தில் அவனது திருநாமங்களை தொடர்ந்து ஓதி வந்தால் எல்லா வினைகளும் வேல் கண்ட பகையைப் போல விலகி விடும் எனலாம்.

தணியல் முருகன் கோயில்
தணியல் முருகன் கோயில்
எஸ்.தேவராஜன்

ஐப்பசி மாதம் சுக்ல பட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள 6 நாள்களும் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படும். கந்த சஷ்டி விழாவின் தத்துவம் மிக மிக எளிதானது. நம்முள் இருக்கும் பகையான காமம், கோபம், பேராசை, திமிர், மயக்கம், தற்பெருமை ஆகிய 6 குணங்களை அழித்து அருளும் நாளே கந்த சஷ்டி திருநாள். தீயவை ஒழிய கருணை, பேராற்றல், அமைதி, வளம், வள்ளல்தன்மை, ஞானம் போன்ற தேவ குணங்களை நம்முள் நிலைநாட்டுவதே இந்த விழாவின் நோக்கம்.

கந்த சஷ்டி விரதம் இருந்தால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பகைவரால் உண்டாகும் தொல்லை நீங்கும். நன்மக்கட் பேறும், திருமணப் பேறும் நிச்சயம் கிடைக்கும். பிறப்பின் மூலம் தொடர்ந்து வரும் மூன்று ருணங்களான பித்ரு கடன், ரிஷி கடன், வினை கடன் போன்ற மூன்றும் அகலும். தரித்திரம் ஒழியும். செல்வவளம் பெருகும். காரியத் தடைகள் நீங்கி எண்ணியவை விரைவில் ஈடேறும்.

இச்சா சக்தி, கிரியா சக்தி என்ற இரு துணையையும், ஞானமெனும் வேலையும் கொண்டிருக்கும் முருகப்பெருமான், சகல வேண்டுதல்களையும் நிறைவேற்றும் தயாபரன். அவனைக் கொண்டாடும் வழிபாடுகளில் சிறப்பானது மஹாஸ்கந்த ஹோமம். கந்த சஷ்டியின் நான்காம் நாள் சிறப்பான ஞானப் பெருவிழா என்று போற்றப்படுகிறது. இந்த நாளில் ஞான முருகனின் சினம் தணிந்த தணியல் திருத்தலத்தில் சங்கல்பம் செய்துகொள்ள உங்கள் சக்தி விகடன் அழைப்பு விடுக்கிறது.

தணியல் அகிலாண்டேஸ்வரி
தணியல் அகிலாண்டேஸ்வரி
எஸ்.தேவராஜன்

அருணகிரிநாதரின் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமைக்குரியத் திருத்தலம் தணியல். புராதனப் பெருமைகளையும் வரலாற்றுச் சிறபபுகளும் கொண்ட இந்த பழைமையான இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் தேவியர் இருவர் புடைசூழ கோலாகலக் குமாரனாக வீற்றிருக்கிறார். இவரை வணங்கி வழிபட பூரணமான ஆரோக்கிய வாழ்வை அருள்வார் என்கிறார்கள் பெரியோர்கள்.

மத்திய திருத்தணிகை, சிங்காரபுரம், திருத்தணியல், சேவல்புரி என்றெல்லாம் போற்றப்பட்ட போற்றப்பட்ட இந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அசுரனை அழித்த தேவசேனாபதியாம் முருகப்பெருமான் தனது சினம் தணிந்து அமர்ந்த தலம் இது. அதனால் இந்த ஊரின் பெயரும் தணியல் என்று ஆனது. இங்கு தேவியரோடு தனித்திருந்த முருகப்பெருமான், அச்சம் நீங்கிய தேவர்களின் குறைகளை எல்லாம் தீர்த்தார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத கயிலாசநாதர் ஆலயம் என்ற பெயரில் இது சிவாலயமாக இந்த ஆலயம் இருப்பினும் இங்குள்ள முருகப்பெருமானே பிரசித்தி பெற்று விளங்குகிறார். முருகப்பெருமானுக்கு முன்பு அவர் வழிபட்ட ஈசனும் காட்சி அளிக்கிறார் என்பது சிறப்பு.

தணியல் முருகப்பெருமான்
தணியல் முருகப்பெருமான்
எஸ்.தேவராஜன்

வாழ்வின் சகல வளங்களையும் அருளும் தணியல் ஆறுமுகப்பெருமானைப் போற்றி வரும் கந்த சஷ்டி விழாவை ஒட்டி உங்கள் சக்தி விகடனும் தணியல் முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகாஸ்கந்த ஹோமம் ஒன்றை நடத்த உள்ளது. கந்த சஷ்டி நாளின் நான்காவது நாளான (7-11-21) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை மகா ஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் நீண்ட ஆயுளும், நீங்காத புகழும், நீடித்த ஆரோக்கியமும், நிறைவான செல்வவளமும், நிம்மதியான குடும்ப வாழ்வும், நித்தியமான மங்கலப் பெருமைகளும் கிட்டும் என்பது உறுதி!

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம் + ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு