Published:Updated:

கந்த சஷ்டியில் சிங்கார வேலனுக்குச் சிறப்பான ஆராதனை... மஹாஸ்கந்த ஹோமத்தில் நீங்களும் சங்கல்பிக்கலாம்!

கந்த சஷ்டி நாளின் நான்காவது நாளான (7-11-21) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை மகாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கும்.

தேவாதிதேவர்கள் அனைவரும் போற்றும் கடவுள் முருகப்பெருமான். சிவபெருமானின் சிறப்பான வடிவே முருகேசன் என்கின்றன ஆன்மிக நூல்கள். சூரியனின் கதிர் பூமியை அடைவது போல, ஈசனின் சக்தி குவிந்து மண்ணுலகில் கந்தனாக வடிவெடுத்தது என்கிறது கந்தபுராணம். சக்கரம் வேண்டி திருமால் வணங்கினார்; பிரணவ தத்துவம் கேட்டு சிவன் வணங்கினார்; பிரணவத்தின் பொருள் தெரியாமல் பிரம்மன் வணங்கினார்; தன் குலத்தைக் காக்க வேண்டி இந்திரன் வணங்கினார் என புராணங்கள் கூறும் பெருமைக்கு உரியவர் முருகப்பெருமான்.

வால்மீகி ராமாயணத்தின் பால காண்டத்தில் விசுவாமித்திரர் ராம லக்ஷ்மணருக்கு குமார சம்பவத்தை எடுத்துக் கூறி முருகப்பெருமானின் அவதார சிறப்புகளை வர்ணித்தார். அதுமட்டுமா 'கந்தனை வணங்கி அவனிடம் பக்தி வைப்பவர்களுக்கு ஒரு குறையும் நேராது. அவர்கள் ஸ்கந்த லோகத்தில் சிறப்பான நிலையையும் பெறுவார்கள். எனவே நீங்கள் கந்தனைப் பற்றிக் கொள்ளுங்கள்!' என்றும் அறிவுரையும் கூறினார்.

தணியல் முருகப்பெருமான்
தணியல் முருகப்பெருமான்

சதாசிவமாகிய ஈசனிடமிருந்து முதலில் தோன்றிய சக்தியே முருகப்பெருமான் தான் என்பதை 'யாதே ருத்ர சிவா தனூ :' என்கிறது ருத்ர மந்திரம். பரப்பிரம்மத்தில் இருந்து தோன்றிய மகாசக்தியே சூரபத்மனையும் அவனது சகாக்களையும் அழிக்க முடியும் என்பதால் தோன்றியவர் முருகப்பெருமான். அதனால் அவரே தேவர்களில் முதன்மையானவர் என்கின்றன ஆன்மிக நூல்கள்.

'படைத்தலைவர்களில் நான் ஸுப்ரமணியன்' என்று கீதையில் உரைக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். படைகளை நடத்தி வெற்றிகளைக் குவிப்பதில் முருகனுக்கு இணையான தெய்வம் இல்லை என்கிறார் அகத்தியர். மகாபாரத்தில் பிதாமகர் பீஷ்மர் படைத் தலைமையை ஏற்கும் முன் முருகப்பெருமானை வேண்டிக் கொண்டதாக தகவல் உள்ளது.

பன்னிரு கரங்களில் வேலாயுதம், கோழிக் கொடி, அங்குசம், பாசம், வில்-அம்பு, கத்தி, கேடயம், கோடாரி, சூலம், கதை, சங்கம், சக்கரம் தாங்கி முருகப்பெருமான் போருக்குப் புறப்பட்டதெல்லாம் நன்மையைக் காக்கவன்றோ! 'கந்தன் பாதம் கனவிலும் காக்கும்' என்பது ஆன்றோர் வாக்கு. அதிலும் இந்த கந்த சஷ்டி நாளில் விரதமிருந்து அவனைத் தொழுதால் தீராத வினை எல்லாம் தீர்ந்து வாழ்வில் சேராத நன்மை எல்லாம் ஓடி வந்து சேரும் இல்லையா!

தணியல் வள்ளி-தெய்வயானை சமேத முருகப்பெருமான்
தணியல் வள்ளி-தெய்வயானை சமேத முருகப்பெருமான்

வீரகந்தனாக ஆயுதம் தாங்கும் அவனே சினம் தணிந்து தனது பன்னிரு கரங்களில் ஞானவேல், கரும்பு வில்-மலரம்பு, மணி, ஜபமாலை, கமண்டலம், தாமரை, பூரண கும்பம், நீலோத்பலம், சுவடி, சேவல்கொடி, அபய கரம், வரம் அருளும் ஹஸ்த கரம் என நின்று அருளுவதும் அழகல்லாவா. திருச்செந்தூரில் போர் புரிந்து, சம்ஹாரங்கள் செய்து சினத்தோடு அங்கிருந்து கிளம்பி திருத்தணிகை வந்தார் என்றும், அங்கே சினம் முழுவதும் தணிந்து சிங்கார வேலவனாக அருளினார் என்றும் அறிந்திருக்கலாம். சினம் தனித்ததால் அந்த மலை தணிகை மலை என்றானதும் அறிவீர்கள். அதனால் அங்கு கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற்றாலும் அங்கு சூர சம்ஹார விழா மட்டும் நடைபெறுவது இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருத்தணிகை தலம் போலவே மத்திய திருத்தணிகை என்று போற்றப்படும் தலம் தணியல். அசுர சக்திகளோடு போரிட்டதால் கடும் சினம் கொண்ட முருகப்பெருமான் இந்த அழகிய கிராமத்தில் தங்கி இருந்து தனது சினம் தணிந்ததால் இந்த ஊரே தணியல் என்றானதாம். இத்தனைப் பெருமை கொண்ட திருத்தலத்தில் வரும் கந்த சஷ்டி விழாவை ஒட்டி உங்கள் சக்தி விகடனும் தணியல் முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகாஸ்கந்த ஹோமம் ஒன்றை நடத்த உள்ளது.

தணியல் கோயில்
தணியல் கோயில்

நாமாவளிப் பிரியன் முருகப்பெருமான். 'முருகா’ என்று ஒருமுறை சொன்னாலே தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து போகும் என்பார் வாரியார் சுவாமிகள். முருகா என்ற ஒரு நாமம் பல்வேறுப் பலன்களைத் தரும் என்கின்றன ஆன்மிக நூல்கள். 'நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்' என்ற சிறப்புக்குரிய திருநாமம் 'முருகா! வள்ளி மாணாளனை, வானவர்த் தலைவனை, வண்ணத்தமிழ் முருகனைப் போற்றும் வழிபாடுகள் பல உண்டு. அவற்றில் மிகவும் சிறப்பானது மஹாஸ்கந்த ஹோமம்.

தீய சக்திகளின் தொல்லைகள் நீங்க, தேவாதி தேவர்கள் அனைவரும் கந்த சஷ்டி முதல் நாளில், முருகப்பெருமான் போரைத் தொடங்கிய வேளையில் கூடிச் செய்த மகா ஹோமம் இது என்பர். நான்முகன், பிரகஸ்பதி போன்றோர் வேள்வியைத் தொடங்கி முருகனை ஆராதித்து அதன் பலனாக விண்ணும் மண்ணும் தீமைகள் நீங்கி நலம் பெற்ற அரிய வகை வேள்வி இது. நிச்சயம் பலன் தரக்கூடிய இந்த மஹாஸ்கந்த ஹோமம், அரிதினும் அரிதாக நடைபெறக் கூடியது.

வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி அன்று கந்த சஷ்டி விரதம் தொடங்க உள்ளது. நவம்பர் 9-ம் தேதி சூர சம்ஹார விழா நடைபெற உள்ளது. கந்த சஷ்டி நாளின் நான்காவது நாளான (7-11-21) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை மகாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கும்.

இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதால் காரிய ஸித்தி உண்டாகும். அச்சங்கள் விலகும். சொத்து சேரும், சோதனைகள் விலகும். திருமண பாக்கியம், சந்தானப் பேறு போன்ற மங்கலப் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அனைவரும் இந்த மகாஸ்கந்த ஹோமத்தில் கலந்து கொண்டு அருளும் பொருளும் பெற்று வாழ வேண்டுகிறோம்.

மஹாஸ்கந்த ஹோமம்
மஹாஸ்கந்த ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (மஞ்சள் + குங்குமம் + ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு