Published:Updated:

கீழப்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயர்ச்சி விழா!

ஸ்ரீ நாகநாதசுவாமி - ராகு கேது பெயர்ச்சி விழா

கீழப்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயர்ச்சி விழா - 21 -ம் தேதி நடைபெறுகிறது!

கீழப்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயர்ச்சி விழா!

கீழப்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயர்ச்சி விழா - 21 -ம் தேதி நடைபெறுகிறது!

Published:Updated:
ஸ்ரீ நாகநாதசுவாமி - ராகு கேது பெயர்ச்சி விழா

நவகிரகங்களில் ஒன்றான கேது பகவான் வீற்றிருந்து அருள் பாலிக்கும் கீழப்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலில் எதிர்வரும் 21 -ம் தேதி கேது பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.

ஸ்ரீ நாகநாதசுவாமி
ஸ்ரீ நாகநாதசுவாமி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ நாகநாதசுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருத்தலம் உள்ளது. இங்கு கேது பகவானுக்குத் தனிச் சந்ததி உண்டு. இவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பின்னோக்கிப் பெயர்ச்சியாகிறார். "இவரை வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும். திருமணத் தடை நீங்கும். வறுமை நீங்கி வளம் பெறலாம்" என்பது ஐதிகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறப்புமிக்க இக்கோயிலில் எதிர்வரும் 21 -ம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3.14 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கு கேது பெயர்ச்சியாகும் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு இரண்டு கால சிறப்பு யாக பூஜைகள் நடைபெற உள்ளன .அதனைத் தொடர்ந்து மகா பூர்ணாகுதி, கேது பகவானுக்கு பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. பின்னர் 3.14 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

கேது பகவான்
கேது பகவான்

இந்தக் கேது பெயர்ச்சியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு வேண்டிய குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism