Published:Updated:

சமையல் அறையும் பூஜை அறைதான்... எப்படி? - அறிந்துகொள்ள வேண்டிய அபூர்வ தகவல்கள்! - அதிகாலை சுபவேளை

பொங்கல் - அதிகாலை சுபவேளை
பொங்கல் - அதிகாலை சுபவேளை

சமையல் அறையும் பூஜை அறைதான்... எப்படி? - அறிந்துகொள்ள வேண்டிய அபூர்வ தகவல்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

20. 6. 21 ஆனி 6 ஞாயிற்றுக்கிழமை

திதி: தசமி பகல் 12.42 வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம்: சித்திரை பகல் 3.43 வரை பிறகு சுவாதி

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 முதல் 6 வரை

எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 வரை

நல்லநேரம்: காலை 6.30 முதல் 7.30 வரை/ பகல் 3.30 முதல் 4.30 வரை

சென்னை காளிகாம்பாள்
சென்னை காளிகாம்பாள்

சந்திராஷ்டமம்: பூரட்டாதி பகல் 3.43 வரை பிறகு உத்திரட்டாதி

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

வழிபடவேண்டிய தெய்வம்: பிரத்தியங்கிரா தேவி

சமையல் அறையும் பூஜை அறைதான்... எப்படி? -

வீட்டின் சமையலறையைப் பராமரிப்பதில் பெரியவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினர். அந்தக் காலத்தில் பெரியவர்கள் சமையல் அறைக்குள் காலையில் தூங்கி எழுந்தவுடன் அப்படியே நுழைந்துவிட அனுமதிக்க மாட்டார்கள். குளிக்காமல் சமையல் அறைக்குள் நுழைவதை விரும்ப மாட்டார்கள். அதேபோன்று காலை அடுப்பை ஏற்றும் முன்பாக சமையல் மேடையை நன்கு சுத்தம் செய்து மெழுகிக் கோலமிட்டு அதன்பின்னே ஏற்றுவார்கள். இவை தவிர்த்து சமையலறைக்குப் பூஜை அறைக்குத் தரும் முக்கியத்துவத்தைத் தருவர். ஏன்? உணவு சமைக்கும் இடத்துக்கும் நம் வாழ்வுக்கும் இடையிலான தொடர்பு என்ன என்னும் கேள்விகளுக்கான விடைகளை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

அனுகூலம் : அனுகூலமான நாள். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். விவாதங்களைத் தவிர்த்து வேண்டிய நாள். - ஆல் இஸ் வெல்!

ரிஷபம்

செலவு : தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டிய நாள். வயிறு தொடர்பான சின்னச் சின்ன உபாதைகள் வந்து போகும். பேச்சில் கவனம் தேவைப்படும் நாள். - செலவே சமாளி!

மிதுனம்

கவனம் : உடல் நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொண்டு ஆதரவளிப்பது மகிழ்ச்சி தரும். - டேக் கேர் ப்ளீஸ்!

கடகம்

உற்சாகம் : மனதும் உடலும் உற்சாகமாகக் காணப்படும். இளைய சகோதரர்கள் வகையில் எதிர்பார்த்த நன்மைகள் நடைபெறும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். - ஜாலி டே!

சிம்மம்

நன்மை : நன்மைகள் நிறைய நடைபெறும். முயற்சிகள் சாதகமாகும். நண்பர்களோடு பேசி மகிழ்வீர்கள். தேவையற்ற வார்த்தைகள் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. - நாள் நல்ல நாள்!

கன்னி

நிதானம் : முற்பகலில் சோர்வும் பிற்பகலில் நம்பிக்கையும் ஏற்படும் நாள். முக்கிய முடிவுகளை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துப் போகவும். - நாளை உங்க நாள்!

துலாம்

நிம்மதி : குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளை ஊக்குவிப்பார்கள். உங்களுக்குப் பக்கபலமாக இருந்து நம்பிக்கை ஊட்டுவார்கள். உற்சாகமும் மனம் நிம்மதியும் உண்டாகும். - இனி எல்லாம் சுகமே!

விருச்சிகம்

நற்செய்தி : செயல்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். சகோதர உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். - தம்பிங்கடா... அண்ணன்டா!

தனுசு:

அலைச்சல் : குடும்பத்தினரின் தேவைகளுக்காக சிறிது அலைச்சலை மேற்கொள்ள வேண்டி வரும். சிலருக்குப் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் அன்பு நிலைக்கும் - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

மகரம்

விவாதம் : செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளலாம். - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

கும்பம்

குழப்பம் : மனதில் சின்னச் சின்னக் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் பதற்றத்தைத் தவிர்க்கலாம். இறைவழிபாட்டில் ஈடுபடுங்கள். - இறைவன் இருக்க பயம் ஏன்?!

மீனம்

மகிழ்ச்சி : வழக்கமான வேலைகளையும் கவனித்துச் செயல்படுவதன்மூலம் குழப்பங்களைத் தவிர்க்கலாம். பணவரவு இருக்கும். இறைவழிபாடு அவசியம். - என்ஜாய் தி டே!

அடுத்த கட்டுரைக்கு