Published:Updated:

மாங்கல்ய பலம் அருள்வாள் மீனாட்சி!

மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
மீனாட்சி

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு எட்டைய புரம் பகுதியை கலங்காத கண்டப்ப நாயக்கர் என்னும் மன்னர் ஆட்சி செய்து வந்தார்.

மாங்கல்ய பலம் அருள்வாள் மீனாட்சி!

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு எட்டைய புரம் பகுதியை கலங்காத கண்டப்ப நாயக்கர் என்னும் மன்னர் ஆட்சி செய்து வந்தார்.

Published:Updated:
மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
மீனாட்சி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஊர் கோல்வார்பட்டி. இங்கு கோயில்கொண்டிருக்கும் அன்னை மீனாட்சி, இவ்வூர் மற்றும் சுற்றுவட்டார மக்களின் இஷ்டதெய்வமாகக் கோலோச்சிவருகிறாள்.

கோல்வார்பட்டி மீனாட்சி
கோல்வார்பட்டி மீனாட்சி


சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு எட்டைய புரம் பகுதியை கலங்காத கண்டப்ப நாயக்கர் என்னும் மன்னர் ஆட்சி செய்து வந்தார். சில தோஷங்கள் காரணமாக, அவரால் போரில் வெற்றிபெற முடியாமலேயே இருந்தது. அந்த தோஷம் நீங்கவேண்டி அவர் பல ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு செய்துவந்தார்.

அவ்வாறு அவர் ஒரு கோயிலில் வழிபடும்போது, `சுவாமியின் வலப்புறம் அம்பிகை சந்நிதி கொண்டு அருளும் விதமாக ஆலயம் ஒன்றைக் கட்டி வழிபாடு செய்தால் தோஷங்கள் தீரும்’ என்று அசரீரி ஒலித்தது. அதைக் கேட்ட மன்னனும் கோல்வார்பட்டி எனும் இந்த ஊரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை எழுப்பி வழிபட்டார். அதன் பலனாக மன்னனின் தோஷங்கள் நீங்கி, போரில் வெற்றிபெற்றார்.

கோல்வார்பட்டி
கோல்வார்பட்டி
கோல்வார்பட்டி கோயில்
கோல்வார்பட்டி கோயில்


வீரபாண்டிய கட்டபொம்மன் இந்தக் கோயிலைப் பராமரித்துவந்துள்ளார் எனும் செய்தியும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. இங்கு அம்பாளும், சுவாமியும் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பது விசேஷ அம்சம் என்கிறார்கள். அதேபோல் அன்னை மீனாட்சி இங்கே தன் திருக்கரத்தில் கிளிக்கு பதிலாக தாமரையை ஏந்தியபடி தரிசனம் தருகிறாள். சுவாமி சந்நிதிக்கு முன்பாக உள்ள நந்தியும் சற்றே விலகிக் காட்சி கொடுப்பதும் இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

கோல்வார்பட்டி சுவாமி
கோல்வார்பட்டி சுவாமி
சுவாமி - அன்னை மீனாட்சி
சுவாமி - அன்னை மீனாட்சி
முருகப்பெருமான்
முருகப்பெருமான்


அதேபோல் முருகப்பெருமானின் வாகனமான மயிலும் பைரவரின் வாகனமும் இங்கு மூர்த்திகளுக்கு இடப்பக்கமாகவே காட்சிகொடுப்பதும் மிகவும் சிறப்பாகும். சுவாமி சந்நிதியில் பின் பக்கத்தில் ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது.

மட்டுமன்றி, இந்த ஆலயத்தில் விநாயகர், முருகன், பைரவர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, கருப்பண்ணசாமி ஆகியோரையும் தரிசிக்கலாம். கலங்காத கண்டப்ப நாயக்கரின் சிற்பமும் உள்ளது. இங்கே காணப்படும் ராமர் சிற்பம் மிகவும் சிறப்புடையது. ஒரே கல்லில் ராமர், சீதை, அனுமன் ஆகியோர் அழகுற வடிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு சித்திரைத் திருவிழா, ஐப்பசி அன்னாபிஷேகம், சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷம், திருவாதிரை ஆகிய உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இவ்வூரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் உள்ள மக்களுக்கும் இந்த மீனாட்சி அம்மையே குலதெய்வமாக விளங்குகிறாள். 11 வாரங்கள் இந்தக் கோயிலுக்கு வந்து மீனாட்சியை வணங்கி, கடைசி வாரம் ஹோமம் செய்து வேண்டிக்கொண்டால், பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகும்; தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும்.

மேலும், இந்தக் கோயிலில் இணைந்து திகழும் சர்ப்பங்களுடன் காட்சி தரும் சிவலிங்கத்தை வழிபடுவதால் சர்ப்ப தோஷம் நீங்கும் என்பது ஐதிகம். இந்த லிங்கத்துக்கு ஆறு வாரங்கள் பாலாபிஷேகம் செய்தும் விளக்கு ஏற்றியும் வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி, திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.