Published:Updated:

திண்டுக்கல் : 3850 அடி உயரம்; அரூப வடிவில் சித்தர்கள் தவம்; கொண்டரங்கி கீரனூர் மலை அதிசயங்கள்!

கொண்டரங்கி கீரனூர் மலை

இந்த மலையின் உச்சியில் சுயம்பு லிங்கம் காணப்படுகிறது. இவரை வணங்கினால் பக்தர்களுக்கு முக்தியும் மோட்சமும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இம்மலையின் கீழ் கெட்டிமல்லீஸ்வரர் எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது.

திண்டுக்கல் : 3850 அடி உயரம்; அரூப வடிவில் சித்தர்கள் தவம்; கொண்டரங்கி கீரனூர் மலை அதிசயங்கள்!

இந்த மலையின் உச்சியில் சுயம்பு லிங்கம் காணப்படுகிறது. இவரை வணங்கினால் பக்தர்களுக்கு முக்தியும் மோட்சமும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இம்மலையின் கீழ் கெட்டிமல்லீஸ்வரர் எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது.

Published:Updated:
கொண்டரங்கி கீரனூர் மலை
நம் நாட்டில் இன்றும் அதிசயங்களும் அற்புதங்களும் நடைபெறும் தலங்கள் பல உள்ளன. சித்தர்களும் மகான்களும் இன்றும் சூட்சும வடிவில் அங்கு அருள்கிறார்கள். அங்கு செல்லும் பக்தர்கள் அவர்களின் பிரசன்னத்தை உணர்ந்து ஆன்மிக அனுபவம் பெறும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. அப்படி பக்தர்கள் வியந்து போற்றும் ஒரு தலம்தான் கொண்டரங்கி மலை.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் கீரனூரில் அமைந்துள்ளது கொண்டரங்கி மலை மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயில்.

கெட்டி மல்லிஸ்வரர் ஆலயம்
கெட்டி மல்லிஸ்வரர் ஆலயம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லிங்க வடிவிலான மலை

கொண்டராங்கி மலையின் மொத்த உயரம் 3850 அடி. இம்மலை மேல் செல்வதற்கு 90 நிமிடங்கள் ஆகும் என்கின்றனர். இங்குள்ள கட்டடங்கள் மற்றும் சிற்பங்கள் அனைத்தும் இம்மலையின் பாறையைக் கொண்டே கட்டப்பட்டவை. இம்மலையில் ஏறுவதற்கு ஏதுவாக படிக்கட்டுகளை வெட்டியுள்ளனர். இம்மலையின் வடிவம் லிங்கம் போல் காட்சியளிக்கிறது. இதனால் திருவண்ணாமலை போல இங்கும் மலையே சிவலிங்கமாகக் கருதி வணங்கப்படுகிறது.

இந்த மலையின் உச்சியில் சுயம்பு லிங்கம் காணப்படுகிறது. இவரை வணங்கினால் பக்தர்களுக்கு முக்தியும் மோட்சமும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இம்மலையின் கீழ் கெட்டிமல்லீஸ்வரர் எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது. மலைக்கு மேல் மல்லிகார்ஜுன சுவாமியை வழிபடலாம். இம்மலை மேல் செதுக்கப்பட்ட சிற்பம் சுயம்பு லிங்கம்.

சுயம்பு லிங்கம்
சுயம்பு லிங்கம்

பஞ்ச பாண்டவர்கள் தொழுத தலம்

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த தலம் எனவும் அர்ஜுனன் தவம் செய்த இடம் எனவும் இத்திருக்கோயிலைக் குறிப்பிடுகின்றனர். அப்படிப்பட்ட மகிமையுடைய இந்த மலையில் அர்ஜுனன் தவம் செய்த இடத்தில் இருந்து மந்திரங்களை ஜபித்துத் தவம் செய்தால் நமக்கு சிவன் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த மலையில் எவர் ஒருவர் தவம் செய்தாலும் அவரின் வாழ்க்கையே மாறும் என்கிறார்கள் பக்தர்கள்.

புயலாய் வந்து வழிபடும் சித்தர்

காகபஜேந்திரன் மற்றும் கணபதி என்ற இரண்டு துறவிகள் தங்களின் முன்வினை காரணமாக மீண்டும் காகங்களாகப் பிறந்தனர். அவர்கள் இம்மலையில் தங்கியிருந்து ஈசனை வழிபட்டுத் தவம் இருந்ததாகச் சொல்கிறது தலவரலாறு.

காகபஜேந்திர முனிவருக்கு மலையின் உச்சியில் ஒரு சிறிய குகைக்கோயில் உள்ளது. மேலும் காகபஜேந்திரர் பொழுது சாயும் நேரத்தில் சிறு புயல் வடிவில் இங்குள்ள ஈசனை வணங்குவதற்காகக் கோயிலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.  இந்தப் புயல் மலை அடிவாரத்தில் இருந்து தொடங்கி கோயிலுக்குள் நுழையும்போது சில நொடிகள் மட்டுமே நீடிக்கும் என்கிறார்கள்.

அர்ஜுனன் தவம் இருந்த இடம்
அர்ஜுனன் தவம் இருந்த இடம்

இந்த இடம், பெரும்பாலும் மகரிஷிகளால், தியானம் செய்வதற்கான முதன்மையான தலமாக இருந்து வந்துள்ளது. இன்றும் அரூப வடிவில் சித்தர்கள் பலரும் தவமிருக்கும் மலை இது என்றும், இங்கு வந்த பக்தர்கள் பலருக்கும் அவர்கள் காட்சி தந்து அருள் செய்து இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். 

இங்கும் மனம் அமைதி வேண்டும் என்று விரும்புபவர்கள் வந்து வழிபட ஏற்ற இடம் இது! இங்குள்ள சிவபெருமானை வழிபடுவதற்காக இங்கு சுனைகளையும் குகைகளையும் பாண்டவர்கள் உருவாக்கினார்கள் என்று கூறப்படுகிறது. 

இக்கோயிலில் சித்தர்களும் தவசிகளும் தியானம் செய்த குகை ஒன்றும் உள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள மற்றொரு கோயில் ஸ்ரீகெட்டி மல்லேஸ்வரர் மற்றும் ஸ்ரீ பிரமராம்பா கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையில் இருந்து பார்த்தால் பழநி மலை தெரியும். பழநி மலையில் வீற்றிருக்கும் முருகனுக்கும், கொண்டரங்கி மலையில் இருக்கும் மல்லிகார்ஜுன சுவாமிக்கும் சூட்சும ரீதியில் தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறது. தந்தையைப் பார்த்தபடியே மைந்தன் நின்று இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பழநி மலையில் நின்ற பாலகனுக்கு ஈசனும் சக்தியும் இங்கிருந்தே காட்சி கொடுத்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

வற்றாத நீருற்று
வற்றாத நீருற்று

மகாசிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி ஆகிய விழாக்கள் இம்மலையில் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி போன்றவையும் இங்கு விசேஷம். இம்மலையில் வற்றாத நீரூற்று ஒன்று உள்ளது. இந்த ஊற்று நீரைத் தெளித்துக் கொண்டால் தோல் வியாதிகள் குணமாகும் என்கின்றனர். இந்நீரே தீர்த்தமாக பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது.