Published:Updated:

கிருஷ்ண தரிசனம்! : பெருமாளுக்கு வில்வார்ச்சனை!

ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள் - திருமாமகள் நாச்சியார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள் - திருமாமகள் நாச்சியார்

அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய மூவரும் சேர்ந்த உருவமாக திருமாமகளாக இங்கு தாயார் காட்சி தருகிறார்.

`சிறை வண்டிறையும் சிறு புலியூர்

தேனார் பொழில் தழுவும் சிறு புலியூர்

செந்தாமரை மலரும் சிறு புலியூர்

செழுநீர் வயல் தழுவும் சிறு புலியூர்’

- இங்ஙனம் 10 பாசுரங்களால் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்கோயில், திருவாரூர் மாவட்டம் சிறுபுலியூரில் அமைந்துள்ளது.

திருமாமகள் தாயார்ர், ஸ்ரீஆண்டாள்
திருமாமகள் தாயார்ர், ஸ்ரீஆண்டாள்

ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீகிருபாசமுத்திரப்பெருமாள் அருள்பாலிக்கும் இத்தலம், 108 வைணவத் திருப்பதிகளுள் 11-வது பதி என்பர். தன்னைச் சரண் அடைவோர்க்குக் கருணைக் கடலாக விளங்குவதால், கிருபாசமுத்திரர் என்றழைக்கப்படுகிறார்.

தில்லையில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானைப் பலகாலம் வழிபட்ட புலிக்கால் முனிவர் என்கின்ற வியாக்கிரபாத முனிவர், ஸ்ரீ நடராஜர் ஆணையின் பேரில், இத்தலத்துக்கு வந்து வழிபட்டு முக்தி அடைந்தார். ஆகவே, இத்தலம் சிறுபுலியூர் என வழங்கலாயிற்று. ஸ்ரீரங்கம் போலவே தெற்கு நோக்கிய சந்நிதி உடைய தலமிது. இக்கோயிலில் தலவிருட்சமாக உள்ள வில்வத்தால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யப்படுவது இங்கு விசேஷம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்ரீஆதிசேஷன், ஸ்ரீகருடாழ்வார்
ஸ்ரீஆதிசேஷன், ஸ்ரீகருடாழ்வார்

சூரியன், அனந்தன், துர்வாசர், திருமங்கையாழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோர் வழிபட்ட திவ்யதேசம் இது. எங்கும் காண்பதற்கரிய வகையில், ஆதிசேஷனின் தனிச் சந்நதி இத்தலத்தில் அனந்தசரஸ் என்ற புஷ்கரணியின் கரையில் அமைந்துள்ளது. ஆதிசேஷன் ஆயிரம் தலைகளை உடையவர். இங்கு ஐந்து தலை நாகமாக சங்கு சக்கரம் தரித்து நான்கு திருக் கரங்களுடன் தவக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

ஸ்ரீபால ஹனுமன், ஸ்ரீவிஷ்ணு துர்கை
ஸ்ரீபால ஹனுமன், ஸ்ரீவிஷ்ணு துர்கை

`கருடனுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே, இருவரில் யார் சிறந்தவர் என்ற சர்ச்சை எழுந்தது. கருடனுக்கு, தான் என்ற மமதை ஏற்பட்டது. கருடனின் மமதையைப் போக்கி பாதாளத்தில் வைத்த பெருமாள், ஆதிசேஷனைத் திருக்குளம் அருகில் அனந்தசரஸ் எனும் பெயரில் சந்நிதி கொள்ளும்படி அருளினார்’ என்கிறது தலவரலாறு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய மூவரும் சேர்ந்த உருவமாக திருமாமகளாக இங்கு தாயார் காட்சி தருகிறார். தாயாருக்கும் வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படுவது இத்தலத்தில் விஷேசம். கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி, வியாசர், வியாக்ரபாதர், கங்கை ஆகியோருடன் காட்சி தருகிறார் பெருமாள்.

சலசயனப் பெருமாள் - ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள் - திருமாமகள் நாச்சியார்
சலசயனப் பெருமாள் - ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள் - திருமாமகள் நாச்சியார்

கோயிலின் ஸ்ரீகாந்த் பட்டரிடம் பேசினோம்.

“ `கருடா சௌக்கியமா' என்று ஆதிசேஷன் கேட்க, `அவரவர் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே' என்று பதில் சொல்லப்பட்ட தலம் இது. தெற்கு திசை நோக்கி, குழந்தை ரூபத்தில் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார். கருடனுக்கும் ஆதிசேஷனுக்கும் உள்ள சண்டையைத் தீர்த்துவைத்த தலம் இது என்பதால், இந்தப் பெருமாளை அர்ச்சித்து வணங்க தம்பதியருக்குள் ஏற்படும் சண்டை, நீதிமன்ற வழக்குகள் யாவும் தீர்ந்து நன்மை பெருகும். திருக்குளத்தில் நாட்டுச் சர்க்கரையைக் கரைத்துவிட்டு அனந்தசரஸை வணங்கினால் ரோகங்கள் நிவர்த்தியாகும்; புத்திரப்பேறு கிட்டும்; திருமணத் தடை விலகும்.

கிருஷ்ண தரிசனம்! : பெருமாளுக்கு வில்வார்ச்சனை!

சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி வசந்த உற்சவம், ஆனி ஈடு உற்சவம், ஆடி பவித்திர உற்சவம், ஆவணி ஜயந்தி உற்சவம், புரட்டாசி நவராத்திரி உற்சவம் ஐப்பசி மூலத்தில் மணவாளமாமுனிவருக்கு பத்து நாள் உற்சவம், கார்த்திகை தீப உற்சவம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி உற்சவம், தை சங்கராந்தி உற்சவம், மாசி வளர்பிறை ஏகாதசி நாளில் அனந்தாழ்வார் உற்சவம், பங்குனி உத்திரத்தில் பெருமாள் தாயார் சேர்த்தி உற்சவம் என்று வருடம் முழுக்க விழாக்கள் உண்டு இந்தத் தலத்தில். இந்த விஷேச நாட்களில் பெருமாளை யும், தாயாரையும் தரிசித்தால் வாழ்வில் எல்லாவித வளங்களை யும் பெற்று நலமுடன் வாழலாம்” என்றார்.

நாமும் ஒருமுறை கிருபாசமுத்திர பெருமாளை தரிசித்து வருவோம். அவரின் அருளால் நம் வாழ்வில் தடைகள் அனைத்தும் நீங்கி முன்னேற்றம் காண்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பக்தர்கள் கவனத்துக்கு...

தலம்: சிறுபுலியூர்

மூலவர்: சலசயனப் பெருமாள் - ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள்

தாயார்: திருமாமகள் நாச்சியார்

வழிபாட்டுச் சிறப்புகள் : ரோக நிவர்த்தி, குழந்தைப்பேறு திருமணத்தடை, தம்பதியர் ஒற்றுமை, வழக்கில் வெற்றி ஆகிய பிரார்த்தனைகளுக்காக பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக்கொண்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.

எப்படிச் செல்வது ? : மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் மற்றும் பேரூந்து மார்க்கத்தில், கொல்லுமாங்குடியில் இறங்கி, கிழக்கே 2 கி.மீ தூரம் பயணித்தால் சிறுபுலியூரை அடையலாம். கார், ஆட்டோ வசதியுண்டு.