Published:Updated:

திருக்கடையூரில் ஒரே நாளில் 7 சுற்றுக் கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்!

திருக்கடையூர் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடத்தப்பட்டன. நேற்று காலை 9 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

திருக்கடையூரில் நேற்று (21.3.2022) தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் 7 சுற்றுக் கோயில்களின் கும்பாபிஷேகங்கள் ஒரே நாளில் நடத்தி வைக்கப்பட்டன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில்  தேவாரப் பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றானதும், ஸ்ரீ அபிராமி சமேத  ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு சுற்றுக் கோயில்கள் என்றழைக்கப்படும் எமன் பூஜித்த ஆனந்தவல்லி சமேத காலஈஸ்வரர், நான்கு மாடவீதிகளிலும் அமைந்துள்ள 5 விநாயகர் கோயில்கள், பிடாரி அம்மன் கோயில் உள்ளிட்ட 7 கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருக்கடையூர் கும்பாபிஷேகம்
திருக்கடையூர் கும்பாபிஷேகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடத்தப்பட்டன. நேற்று காலை 9 மணிக்கு  நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

அதனையடுத்து கடம்கள் புறப்பாடு செய்யப்பட்டுக் கோயிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன. தருமபுரம் ஆதீனம் 27 -வது  குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் முன்னிலையில் அனைத்து கோயில்களுக்கும் ஒன்றன்பின் ஒன்றாகக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகத்தை  ராமலிங்கம், கணேஷ்,  மகேஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிவாசார்யர்கள் நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism