Published:Updated:

`அன்போடு வாழ்வோம் அறத்தோடு வாழ்வோம்!’ - தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
பிரீமியம் ஸ்டோரி
News
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

ஆன்மிக மாலை!

அன்புக்குரியவர்களே! இந்த வாழ்க்கை உயர்வானது, அதை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இன்பமாக வாழ்ந்து மற்றவருக்கும் பயன்படுமாறு வாழுங்கள்.

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், சவால்கள் நிறைந்த தருணத்தில் தைரியத்தோடும் அன்போடும் வாழ பழகிக்கொள்ள வேண்டும். அதைக் கற்றுத் தருவது ஆன்மிகம்.

சிறுவன் ஒருவனை எல்லோரும் அடித்துக் கொண்டிருந்தார்கள். காரணம்? அந்தச் சிறுவன் முன்பு ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு வேலை மாறி, பூச்சி மருந்துக் கடையில் வேலைக்குச் சேர்ந்தான்.

ஒருவர் பூச்சி மருந்து வாங்க கடைக்கு வந்தார்; தேவையான மருந்தைக் கேட்டார். சிறுவனோ பழக்கதோஷத்தில் “ஐயா சாப்பிடவா, பார்சலா...” என்று கேட்டு விட்டான். அதனால் அந்த அடிகள் விழுந்தன. இது வெறும் வேடிக்கைக் கதை மட்டுமல்ல; சிந்திக்கவும்தான். இடம், சூழலைப் புரிந்து சரியானவற்றை யோசிக் கவும் பேசவும் பழகிக்கொள்ள வேண்டும்.

அதற்குச் சான்றோர்களும் பெரியோர்களும் தேவைப்படுகிறார்கள். கால வெள்ளத்தின் சிக்கலில் ஆன்றோர்கள் கூறிய பல விஷயங்களை மறந்துவிட்டோம். எவையெல்லாம் தேவை இல்லை என்று ஒதுக்கினோமோ அவையெல்லாம் இன்று மீண்டும் தேவையாகின்றன.

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இறைவன் ஒப்பற்ற பரம்பொருள். அண்ட சராசரங்கள் எங்கும் அவன் நிறைந்திருக்கும் இடங்கள்தான். அப்படி இருக்கும்போது சின்னஞ்சிறிய ஆலயங்கள் ஏன் ஆண்டவன் உறையும் இடமாகக் கொள்ளப்பட்டன. அவை ஆண்டவனுக்காக மட்டுமல்ல; மனிதர்கள் எல்லோரும் கூடி இன்புற்று வழிபட்டு வாழ்வதற்காக. ஆம், மனிதன் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்காக, தங்களை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்காக உருவானவையே ஆலயங்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மீண்டும் சொல்கிறேன்... இந்த வாழ்க்கை உயர்வானது. ஆனால் நம்மில் பலரும் சகித்துக்கொண்டும் சலித்துக்கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதை மாற்றி சந்தோசமாக வாழப் பழக வேண்டும். ஒவ்வொன்றையும் ரசித்து உணர்ந்து வாழவேண்டும்.

இல்லறத்தில் மட்டுமல்ல துறவறத்திலும் மேன்மையான அறநிலையை மேற்கொண்டு வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள். அடுத்தவர்களுக்காக வாழும் உயர்ந்த வாழ்வை நம் ஞானியர்கள் வாழ்ந்தார்கள். அதில் சிறந்தவர் நம் விவேகானந்தர்.

சிறிய வயதில் விவேகானந்தர் தன் தாயிடம் தான் வேண்டி விரும்பி துறவறத்தை மேற்கொள்ளப்போவதைத் தெரிவிக்கும் போதெல்லாம் அவர் தாய் அமைதியாக ஒரு கத்தியை எடுத்து வரச்சொல்வாராம். அவர் கொண்டு வந்ததும் அதைப்பார்த்துவிட்டு அமைதியாக போய்விடுவாராம். இது பலமுறை நடந்தது.

ஆண்டுகள் கழிந்தன. ஒருமுறை விவேகானந்தர் கத்தியைக் கொண்டுவந்ததும் அவர் தாயார் ‘இனி நீ துறவியாகலாம்’ என்று அனுமதி கொடுத்துவிட்டார். விவேகானந்தருக்கு ஆச்சர்யம். இவ்வளவு காலம் அமைதியாக இருந்த தாயார் இன்று மட்டும் எப்படி என் துறவறத்துக்கு அனுமதி அளித்தார் என்று; அதைக் கேட்கவும் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘மகனே நீ ஆரம்ப காலங்களில் கத்தியைக் கொண்டு வரும்போதெல் லாம், கத்தியின் கூர்மையான ஆபத்தான பகுதி மற்றவரை நோக்கி இருக்கும். பாதுகாப்பான பகுதி உன் பக்கம் இருக்கும். ஆனால் இப்போது உன் மனம் பக்குவமாகி விட்டது. அதனால் ஆபத்தான பகுதியை நீ கவனமாக தாங்கிய வாறு இருக்க, பாதுகாப்பான பகுதி மற்றவரை நோக்கி உள்ளது. அடுத்தவருக்காக வாழ்பவனே துறவறம் ஏற்க தகுதியானவன்” என்று சொன்னார் அந்த தாய்.

அவர் விரும்பிய வண்ணமே எல்லோருக்காகவும் வாழ்ந்தவர் விவேகானந்தர்.

அன்பானவர்களே! வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியது. அறத்தோடும் அன்போடும் மற்றவர்களோடு இணைந்தும் சிறப்பாக வாழுங்கள். அதற்கு இறையருள் உங்களுக்கு அருள் புரியட்டும்!