Published:Updated:

லட்சுமி கடாட்சம்!

லக்ஷ்மி சிவச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
லக்ஷ்மி சிவச்சந்திரன்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

லட்சுமி கடாட்சம்!

லக்ஷ்மி சிவச்சந்திரன்

Published:Updated:
லக்ஷ்மி சிவச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
லக்ஷ்மி சிவச்சந்திரன்

‘தான்’ என்னும் சின்ன அகந்தை வந்து தலையில் உட்கார்ந்து, அந்த பாரம் அழுத்தும்போது, ஐஸ்வர்யம், லட்சுமிகடாட்சம் எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாகப் போய்விடும்தானே! அது மட்டுமல்ல; வீட்டில் இருக்கும் நல்ல விஷயங்களில் தொடங்கி நமது வெற்றி வரை அனைத்துமே பாதிக்கப்படும்.

லட்சுமி கடாட்சம்!
Benjavisa

கந்தை வந்துவிட்டால் எல்லாமே சர்வநாசம். நான்தான்... என்னால்தான்... என அந்த வார்த்தைகளைக் கூட சொல்லக்கூடாது என நினைப்பேன் நான்.

நம்மிடம் இருக்கும் ஒரு நல்ல விஷயம் நம்மை விட்டுப் போகிறது என்றால் அதற்கு யார் காரணம்? நாம்தானே காரணம்! என்றுமே ‘நான்தான், என்னால்தான்’ என்ற கர்வத்தை மண்டையில் ஏற்றிக்கொள்ளாமல் அடக்கமாக இருப்பதும் லட்சுமிகடாட்சத்தின் ஓர் அம்சம்தான்.

பிள்ளைகளை வளர்ப்பது குறித்துப் பேசும்போது, எனக்கு எனது பாலபருவம் நினைவுக்கு வரும். தினமும் அதிகாலையில் எழுந்து, பல் துலக்கி, முகம் கழுவி, நெற்றிக்கு இட்டுக்கொள்ளவேண்டும் என்பது எழுதப் படாத ஆணை. இன்றும் அந்தப் பழக்கம் தொடர்கிறது. அதிகாலையில் எழுவதே ஒரு லட்சுமிகடாட்சம்தான். தினமும் நான்கு, நான்கரை மணிக்கு நான் எழுந்து கொள்வதைப் பார்த்து சிலர் கேட்பார்கள்...

``நீ என்ன ராத்திரியில் தூங்கவே மாட்டியா? ராக்கோழியா?’’ என்பார்கள் அதிசயமாக!

எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். இரவு 9.45 அல்லது 10 மணிக்கெல்லாம் படுத்துவிடுவேன். ‘டாண்’ என்று நாலரைக்கெல்லாம் விழிப்பு வந்துவிடும். இதற்கு மேல் எப்படித் தூங்குவது... இரவில் அதற்குப் பிறகும் எப்படி விழித்திருப்பது?! அது பழகிப்போன ஒன்று. வீடாக இருந்தாலும், படப்பிடிப்பு என்றாலும் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருப்ப தால், வீட்டுக்கு வந்ததும் களைப்பில், தானாகவே தூக்கம் வந்துவிடும்.

இந்தப் பெருந்தொற்று காலத்தில் கிட்டத்தட்ட ஒரு வருஷம் வேலை செய்யாமல் இருந்தபோதுகூட, சாயங்காலம் 6.30 மணிக்குச் சாப்பிட்டு விடுவது, 10 மணிக்குள் படுத்துவிடுவது, காலையில் நான்குக்கு எழுந்து விடுவது... பார்த்தால் ஏதோ இயந்திரம் போலத்தான் தோன்றுகிறது இல்லையா! ஆனால், நம் உடல் இயந்திரம் இல்லை.

இந்த வாழ்க்கை வேண்டும் என்று வேண்டி வேண்டி கொண்டு வந்த தோண்டி. ‘அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி’ என்று உடைத்துவிடக் கூடாது. இறை வனிடம் வேண்டி வேண்டி நாம் எடுத்து வந்திருக்கும் பிறவி இது. அதன் பொருட்டு கூத்தாடக் கூடாது; ஆனால் கொண்டாட வேண்டும்.

கொண்டாடுவதற்காகக் கடவுளால் கொடுக்கப்பட்ட காலம்தான் கொரோனா ஊரடங்குக் காலகட்டம் எனக் கருதுகிறேன். இந்த இரண்டு வருடங்களும் நான் மிக சந்தோஷமாக இருந்தேன். காரணம், இதுவரை கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு, ஆனால் நேரம் கிடைக்காமல் தள்ளிப் போட்ட பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.

உடலில் ‘பாசிடிவ் தாட்ஸ்’ உண்டாவதற்கான எனர்ஜியை அதிகரிக்க, என்னவெல்லாம் செய்யவேண்டுமோ, அதையெல்லாம் கற்றுக்கொண்டேன். யாரும் வீட்டுக்கு வந்து கற்றுக்கொடுக்கவில்லை. ஆன்லைனில் யூடியூப் பார்த்து, புத்தகங்கள் படித்து... அப்படியே கற்றுக்கொண்டதுதான்.

லட்சுமி கடாட்சம்!

எனக்கு இரண்டு வருடங்கள் கிடைப்பது என்பது மிக அரிது. முதலில் ஒரு வருடம் கிடைத்தது, மிகவும் மகிழ்ந்தேன்.

‘அப்பாடா... 12 மாதம்... கொஞ்சம் கூட்டிக் கழித்தால்கூட முழுசா 10 மாதங்கள். என்னவெல்லாம் செய்யலாம்... தாய் வயிற்றில் 10 மாதம் இருந்தபோது ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இப்போது, நாம ஒரு முழு உருவமாக இந்த மண்ணில் பிறப்பெடுத்து நிற்கிறபோது கிடைத்திருக்கும் இந்தக் காலத்தை வீணாக்கக் கூடாது’’ என்று முடிவெடுத்தேன்.

இந்த 10 மாதங்களில் நான் மறுபடியும் ஒரு கர்ப்பத்துக்குள் போய்விட்டேன். அது என்னை நானே சுமந்த கர்ப்பம். ஆம்! நானே எனக்குள் போய்விட்டேன். கொஞ்சம் `லூசுத் தனமாக' தோன்றுகிறதா? இல்லை... இது உண்மை... அப்பட்டமான உண்மை. நானே சுயமாக உருவாக்கிக்கொண்ட கர்ப்பம். ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு, அதற்குள் போய்விட்டேன்.

கண்களை மூடி ஒரு நிமிடம் நான் சொல்வதை யோசித்துப் பாருங்கள்... எவ்வளவு காலத்தைப் போக்கியிருக்கிறோம். உங்களுக்கு 25 வயதாக இருக்கலாம் அல்லது 55 வயதோ அதற்கு மேலுமோகூட இருக்கலாம். எவ்வளவு காலத்தை, நேரத்தை நாம் வீணாக்கி இருக்கிறோம்!

அதை உணர்ந்து சரிசெய்வதற்காகவே இறைவன் இந்த ஊரடங்குக் காலத்தைக் கொடுத்தான் போலும். அந்தக் குறிப் பிட்ட காலகட்டத்தில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்! பயந்துகொண்டிருந்தோம். தேவையில்லாமல் திட்டிக்கொண் டிருந்தோம். விமர்சனம் செய்துகொண்டிருந்தோம்.

அதற்குப் பதிலாக, நம்மை நாமே உணர்ந்துகொள்ள முயற்சி செய்திருக்கலாம். நாம் இவ்வளவு நாட்களாகச் செய்யாத பல விஷயங்களை... குறிப்பாக உடற்பயிற்சி செய்திருக்கலாம்; யோகாசனம் கற்றுக்கொண்டிருக்கலாம்... எல்லாமே நம் உள்ளங்கையில் இருக்கின்றனவே!

இதை எத்தனை பேர் உணர்ந்தீர்கள்?

நான் திரும்ப ஒரு கர்ப்பத்துக்குள் போன இந்தக் கால கட்டத்தில், இத்தனை நாளும் செய்யாமல் விட்டுப்போன பல விஷயங்களைச் செய்தேன். வருடங்கள் இரண்டு ஓடியது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் திரும்பவும் அந்த வட்டத்துக்குள்ளிருந்து வெளியில் வந்ததும், மறுபடியும் மேக்கப் போடவேண்டும், படப்பிடிப்புக்குப் போக வேண்டும் என்றபோது, ஒரு புதுமுகம் போல உணர்ந்தேன். உடலும் மனமும் ‘ஜிவ்’வென்று புத்துணர்ச்சி பெற்று... ரொம்பவே வித்தியாசமான அனுபவம் அது.

ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லையே தவிர, உறவுகள் மேம்பட்டன. ஊரடங்கு இல்லாத மற்ற நாட்களில் என்னத்தைப் பார்த்துக் கிழித்துவிட்டோம் என்பது வேறு விஷயம்! அப்போதும் போனில்தான் பேசினோம்... வாட்ஸ் ஆப்பில்தான் வாழ்த்து சொன்னோம்... என்னவோ இந்த கொரோனா வந்துதான் நம்மைக் கட்டிப்போட்டுவிட்ட மாதிரியும், வீட்டுக்குள் அடைந்ததால்தான் ஒருவரையும் பார்க்க முடியாதது போலவும் எண்ணுகிறோம்; பேசுகிறோம். எவ்வளவு பெரிய பொய்!

ஒரு திருமணத்துக்கோ, உயிரிழப்புக்கோ போக முடிய வில்லைதான். ஆனாலும் அதே நெருக்கம் இருந்ததே! மற்ற நாட்களில் நாம் எத்தனை தூரம் கடந்து போய் எல்லோரையும் பார்த்தோம்?! 20 கி.மீ. தள்ளி இருப்பவர்களைக்கூட ‘சட்’ என்று வண்டியை எடுத்துக்கொண்டு போய்ப் பார்த்துவிட்டு வருவோம். ஆனால், பக்கத்துத் தெருவிலேயே இருப்பவர் களிடம் போனில்தான் பேசுவோம்... ‘`அப்புறம்... இங்கே தானே இருக்கீங்க. சந்திக்கலாம் ஒரு தடவை. பக்கத்திலேயே இருக்கீங்க... பார்த்துக்க முடியல’' என்போம்! ஆக, நம் மனம்தான் ‘முடியவில்லை’ என்பதைத் தீர்மானிக்கிறது; நிச்சயம் செய்கிறது. அங்கேதான் எதிர்மறை எண்ணங்கள் நமக்குள் நுழைகின்றன.

நாம் ஓர் அட்டவணை போட்டுக்கொள்வதில்லை. பள்ளியில் ‘இன்னின்னிக்கு இது பண்ணுங்க’ என்று நாம் போட்ட டைம்டேபிளை ஏன் அதோடு விட்டுவிட்டோம்! வளர்ந்த பிறகு ஏன் செய்வதில்லை? ‘நாம வளர்ந்துட்டோம், நமக்கு எல்லாம் தெரியும்’ என்ற இறுமாப்பு. ‘நான் சம்பாதிக்கிறேன்.. பார்த்துக்குவேன்’ என்ற அகந்தை. இதுபோல பல எண்ணங்களே நமக்கு முன்னே வந்து திரை போட்டுவிடுகின்றன; இல்லையெனில், நாமே ஒரு கூண்டு வைத்துக்கொண்டு அதற்குள் போய்விடுகிறோம்.

அதை உடைத்து வெளியே வந்து, நமக்கு நாமே ஒரு கர்ப்பத்துக்குள் புகுந்து, பல விஷயங்களை மாற்றி, ஒரு புதுக் குழந்தையாக வெளியே வரலாமே!

கர்ப்பத்துக்குள் நான் போன அந்த மணித்துளிகள்...

என்ன செய்தேன் தெரியுமா?

-கடாட்சம் பெருகும்...

லட்சுமி கடாட்சம்!

அதிர்ஷ்டம் தரும் தானங்கள்!

வில்வ மரம் மகாலட்சுமியுடன் தோன்றியது. வில்வ மரத்தடியில், தாமரைத் தண்டு திரியை இட்டு, நெய் ஊற்றி தீபமேற்றி வழிபட்டால், செல்வகடாட்சம் பெருகும்.

குழந்தைகளுக்குப் பாலும் ஆலயங்களுக்குத் தாமரையும், பறவை களுக்குத் தானியக் கதிரையும் தானம் அளிப்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

தன லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, விஜய லட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, கஜ லட்சுமி, வித்யா லட்சுமி ஆகிய இந்த எட்டு வடிவங் களையும் மனத்தில் தியானித்து வழிபட அஷ்ட ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும்.

- கே.கலா, சென்னை-4