Published:Updated:

சிவலிங்க துதிப்பாடல்!

சிவ தீப வழிபாடு
பிரீமியம் ஸ்டோரி
சிவ தீப வழிபாடு

சிவலிங்க துதிப்பாடல்!

சிவலிங்க துதிப்பாடல்!

சிவலிங்க துதிப்பாடல்!

Published:Updated:
சிவ தீப வழிபாடு
பிரீமியம் ஸ்டோரி
சிவ தீப வழிபாடு

சிவ தீப வழிபாடு!

பெரும் ஜோதியாய் தோன்றி அருளிய சிவனாருக்குத் தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம். தீபச் சுடரை அறியாமல் தூண்டி விட்டதன் பலனாக எலி ஒன்று மாமன்னனாய் பிறக்கும் பேறு பெற்றது. ஆக, அனுதினமும் வீட்டிலும் சிவாலயத்திலும் தீபங்கள் ஏற்றி, வில்வம் சமர்ப்பித்து, ஐந்தெழுத்து ஓதி வழிபடுவதால், சகல யோகங்களும் வந்து சேரும். தடைகள் நீங்கும்; எதிர்காலம் சிறக்கும்!

சிவ தீப வழிபாடு
சிவ தீப வழிபாடு

சிவ லிங்க மகிமை!

கண்ணுக்குப் புலப்படும் உருவத் திரு மேனிக்கும் புலப்படாத அருவத் திருமேனிக்கும் மூலமானவர் சிவபெருமான். அவரை வழிபட ஓர் அடையாளமாக விளங்குவது சிவலிங்கம்.

லிங்கம் என்றால் குறியீடு அல்லது சித்திரித் தல் எனப் பொருள். லிங்-லயம்; கம்- தோற்றம். உலகு தோன்றி ஒடுங்கும் இடம் என்று லிங்கத் திருவுருவைப் போற்று

கின்றன ஞான நூல்கள். லிங்கம் என்பதற்குப் பிரகாசம் என்றும் பொருள் உண்டு. ஐந்தொழில்

களால் உலகைப் பிரகாசிக்கச் செய்வது லிங்க மூர்த்தி என்பர். எனவே, லிங்க வடிவம் என்பது பரம் பொருளுக்குரிய அடையாளம்.

லிங்கத்துக்கு மூன்று பகுதிகள் உண்டு. அடிப் பகுதி- பிரம்ம பாகம். நடுப்பகுதி- ஆவுடை என்ற பீடத்துள் அமைந்துள்ள விஷ்ணு பாகம். மேற்பகுதியில் உள்ள பாணம்- ருத்ர பாகம். எனவே, லிங்கம் என்பது மும்மூர்த்தி களின் வடிவாகும்.

லிங்கத்தில் பல வகை உண்டு. குருவின் அனுமதி மற்றும் உபதேசத்துடன் பெறுவது இஷ்ட லிங்கம். இது ஆன்மார்த்த லிங்கம் என்றும் கூறப்படும். உலக உயிர்களுக்கு அருளும் பொருட்டு தேவர்கள், முனிவர்கள் மற்றும் மனிதர்களால் விதிப்படி ஸ்தாபிக்கப் பட்டவை பரார்த்த லிங்கம். தானாக உண்டான தும், எந்த வித ரேகையும் அற்றதாகவும் விளங்குவது சுயம்பு லிங்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீப வழிபாடு
தீப வழிபாடு

அம்பிகையால் வழிபடப் பெற்றது தேவிக லிங்கம். மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்டது மானுட லிங்கம். அசுரர்களால் பூஜிக்கப்பட்டது ராட்சச லிங்கம் ஆகும்.

இத்தகு சிறப்புகள் மிகுந்த சிவலிங்க மூர்த்தத்தைத் தினமும் வில்வம் சமர்ப் பித்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்; இல்லறம் நல்லறமாகும்; வீட்டில் சர்வ மங்கலங்களும் உண்டாகும். மறுமையில் சிவப்பேறு வாய்க்கும்.

லிங்க வடிவைப் போற்றும் துதிகளில் குறிப்பிடத் தக்கது, ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகம். தினமும் லிங்காஷ்டகம் படித்து வழிபட்டால், கடும் பிணிகள், தீரா கடன்கள் முதலான சகல பிரச்னைகளும் விரைவில் தீரும்.

வல்லமை மிக்க லிங்காஷ்டக துதிப் பாடலும், லிங்காஷ்ட கத்தை அடியொற்றி, தமிழில் எழுதப்பட்ட சிவலிங்க துதிப் பாடலும் உங்களுக்காக. தினமும் படித்துச் சிவனருள் பெற்று மகிழுங்கள். பிரதோஷம், சிவராத்திரி, சோமவாரம் முதலான நாள்களில் இவற்றைப் படித்து வழிபடுவதால் விசேஷ பலன்கள் கிட்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிவலிங்க துதிப்பாடல்!

துதிப்பாடல்
துதிப்பாடல்

நான்முகன் நாரணன் வணங்கிடும் லிங்கம்

ஒளிரும் சுடரே தூய்மையே லிங்கம்

பிறப்பறுக்கும் பெம்மான் உருவே லிங்கம்

வணங்குவேன் மங்கல மகாலிங்கம் 1

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்

காமனை எரித்த இறையே லிங்கம்

தசமுகன் கர்வம் அழித்தாய் லிங்கம்

வணங்குவேன் மங்கல மகாலிங்கம் 2

நறுமணப் பூசனை உமக்கே லிங்கம்

ஞானம் பெருகக் காரணம் லிங்கம்

சித்தரும் சகலரும் போற்றும் லிங்கம்

வணங்குவேன் மங்கல மகாலிங்கம் 3

பொன்மணி அழகே அலங்கார லிங்கம்

நாகம் ஆபரணம் நல்லருளே லிங்கம்

தட்சயாகம் நசித்த அரனே லிங்கம்

வணங்குவேன் மங்கல மகாலிங்கம் 4

மங்கல மகாலிங்கம்
மங்கல மகாலிங்கம்

குங்குமம் சந்தனம் சமர்ப்பணம் லிங்கம்

தாமரை மாலைகள் சூடிய லிங்கம்

பாவங்கள் அழிக்கும் பரமனே லிங்கம்

வணங்குவேன் மங்கல மகாலிங்கம் 5

கணங்கள் வழிபடும் வரமே லிங்கம்

நற்சிந்தையில் நிறையும் சிவமே லிங்கம்

பக்திக்கு வசப்படும் பரம்பொருள் லிங்கம்

வணங்குவேன் மங்கல மகாலிங்கம் 6

மகாலிங்கம்
மகாலிங்கம்

எண்தள ஆசனம் அமர்ந்தாய் லிங்கம்

உயிர்ப்பொருள் உருப்பெற

கருப்பொருள் லிங்கம்

எண்வகை வறுமைகள் அழிப்பாய் லிங்கம்

வணங்குவேன் மங்கல மகாலிங்கம் 7

அமரர்க் கோவும் குருவும் வழிபடும் லிங்கம்

விண்ணகப் பூக்கள் சமர்ப்பணம் லிங்கம்

சர்வம் லிங்கம் சகலமும் லிங்கம்

வணங்குவேன் மங்கல மகாலிங்கம் 8